என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • பனைக்குளம் ஊராட்சியில் குறைந்த மின் அழுத்தத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
    • பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் ஊராட்சியில் வளர்ந்து வரும் பகுதிகளான அர்ரக்மான் பள்ளி வாசல், பொன்குளம் பகுதியில் குறைந்தழுத்த மின்சாரம் வருவதால் மின் சாதனப் பொருட்கள் சேதமடை வதாகவும் சீரான மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சீரான மின்சார சப்ளை வராததால் இரவு நேரங்க ளில் கைக்கு ழந்தைகள், கர்ப்பிணிகள், முதி யோர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரும் கொசுக்கடியிலும், புழுக்கம் காரணமாகவும் தூக்கத்தை தொலைத்து அவதிப்பட்டு வருகின்றனர்.குறைந்த அழுத்த மின்சாரத்தால் வீடுகள், மற்றும் கடைகளில் பயன்படுத்தக்கூடிய பேன், மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு விடுகிறது.

    இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறுவதோடு இது சம்மந்தமாக பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சீர் செய்யவில்லை.கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் இந்த குறைந்தழுத்த மின்சாரம் மேலும் அவதிக்குள்ளாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    எனவே பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதிக்கு சீரான மின்சாரம் வினியோகம் செய்திட சம்மந்தப்பட்ட துறையின் மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நான் வருவதற்கு முன்பாகவே ஏன் நிகழ்ச்சியை துவங்கினீர்கள் என்று கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கேட்டார்.
    • அமைச்சருக்கும், எம்.பி.க்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

    மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் நவாஸ்கனி எம்.பி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் சரியாக 3 மணிக்கு விழா தொடங்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    அமைச்சர் ராஜ கண்ணப்பன் 10 நிமிடத்திற்கு முன்பாக வந்ததால் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்நிலையில் சரியாக 3 மணிக்கு விழா மேடைக்கு நவாஸ்கனி எம்.பி. வந்தார். அப்போது நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதை கண்ட அவர், நான் வருவதற்கு முன்பாகவே ஏன் நிகழ்ச்சியை துவங்கினீர்கள் என்று கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கேட்டார்.

    இதனை கண்ட அமைச்சர் ராஜகண்ணப்பன், நவாஸ்கனி எம்.பி.யை சமாதானம் செய்ய முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த நவாஸ்கனி எம்.பி. நான் வருவதற்கு முன்பாக நிகழ்ச்சியை தொடங்குவதாக இருந்தால், உங்களை வைத்தே நிகழ்ச்சியை நடத்தியிருக்கலாமே? என்னை எதற்காக அழைக்க வேண்டும்? என கடுமையாக சாடினார்.

    இதனால் அமைச்சருக்கும், எம்.பி.க்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் மேடையில் வைத்தே வாக்குவாதம் செய்தனர். ஒரு பக்கம் அமைச்சர், மறு பக்கம் எம்.பி., நடப்பதோ அரசு நிகழ்ச்சி என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் கலெக்டர் விஷ்ணு சந்திரன் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தார்.

    அப்போது அருகிலிருந்த நவாஸ் கனி எம்.பி.யின் ஆதரவாளர்கள் கலெக்டர் விஷ்ணு சந்திரனை தள்ளி விட்டனர். இதில் கலெக்டர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரை அவரது உதவியாளர்கள் தூக்கினர். இதனால் அரசு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.இறுதியில் நிகழ்ச்சியை புறக்கணித்த நவாஸ் கனி வெளிநடப்பு செய்தார்.

    ஏற்கனவே மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்திற்கும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் அரசு நிகழ்ச்சியில் நேருக்கு நேராக அமைச்சரும், எம்.பி.யும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது.

    இந்நிலையில் அரசு விழாவில் கலெக்டர் தள்ளி விடப்பட்ட விவகாரம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் தினேஷ்குமார், கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கலெக்டரை தள்ளிவிட்டதாக நவாஸ்கனி எம்.பி.யின் உதவியாளரான சாயல்குடியை சேர்ந்த விஜயராமு என்பவர் மீது போலீசார் இன்று வழக்கு பதிந்தனர்.

    அவர் மீது 506 (ii), 294 (பி) உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் விஜயராமுவை போலீசார் கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அரசு விழாவில் கலெக்டர் தள்ளி விடப்பட்ட விவகாரத்தில் எம்.பி.யின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் கலந்து கொள்ள பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்.பி.க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நவாஸ் கனி எம்.பி. விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த போது, அவர் வருவதற்கு முன்பாகவே விழா தொடங்கப்பட்டதாக தெரிகிறது.

    இதனால் கோபமடைந்த நவாஸ் கனி எம்.பி., இது குறித்து கலெக்டரிடம் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கலெக்டர் விஷ்ணு சந்திரன் தள்ளிவிடப்பட்டார். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • டேங்கர் வாகனங்களை முறையாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என உரிமையாளர்களுக்கு கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.
    • சோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் கழிவு நீர் அகற்றும் டேங்கர் வாகனங்களும் மற்றும் தண்ணீர் டேங்கர் வாக னங்களும் மோட்டார் வாகன சட்டம் 1989, பிரிவு 39ன்படி பதிவு செய்து இயக்கப்பட வேண்டும்.

    மேலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகளின்படி கழிவு நீர் அகற்றும் டேங்கர் வாகனங்கள் முறைப்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது.

    இதன்படி மேற்கண்ட கழிவுநீர் அகற்றும் டேங்கர் வாகனங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி பெற்று இயக்க வேண்டும். தவறும் பட்சத்தில் முதல் முறை ரூ.25 ஆயிரம் அபராதமும், தொடர்ந்து அனுமதி பெறாமல் இயக்கப்பட்டால் 2-வது முறை ரூ.50 ஆயிரம் அபராதமும் அதனையும் மீறி தொடர்ந்து இயக்கினால் வாகனம் சிறைபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்ட கழிவுநீர் அகற்றும் டேங்கர் வாகனங்கள் மற்றும் தண்ணீர் டேங்கர் வாக னங்கள் விதிமீறி இயக்கப் பட்டால் போக்குவரத்துத் துறை, காவல்துறை, நகர்புற உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் மூலம் சோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே மேற்கண்ட கழிவுநீர் அகற்றும் டேங்கர் வாகன உரிமையாளர்கள், தண்ணீர் டேங்கர் வாகன உரிமையாளர்கள் வாகனத்தினை முறையாக பதிவு செய்து முறையாக அனுமதி பெற்று இயக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கீழக்கரை தாசிம்பீவி மகளிர் கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது.
    • உதவிப்பேராசிரியை தேன்மொழி நன்றி கூறினார்.

    கீழக்கரை

    கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 2023-24-ம் கல்வி ஆண்டிற்கு பெற்றோர் -ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. கல்லூரி கலையரங்கத்தில் இறை வணக் கத்துடன் தொடங்கியது. தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் தேன்மொழி வரவேற்றார்.

    கல்லூரி முதல்வர் எஸ்.சுமையா மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டிய கல்லூரி விதிமுறைக ளையும் கல்வியின் முக்கியத் துவத்தையும் எடுத்து ரைத்தார்.

    மேலும் ஆராய்ச்சி மற்றும் நிறுவனத்தொடர்பு இயக்குனர்இர்பான் அகமது மாணவிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும் பயிற்சி வகுப்புகள் பற்றியும், பெற்றோரும் மாணவிகளின் ஒழுக்க நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்து ரைத்தார்.

    தொழில் முனைவோர் இயக்குனர் ரோசி பெர்னா ண்டஸ் கல்லூரியில் படிக்கும் போதே மாணவி கள் தொழில் வல்லுனராக உருவாகுவது குறித்து மாணவிகளுக்கு விளக்கி னார். முடிவில் தமிழ்த் துறை உதவிப்பேராசிரியை தேன்மொழி நன்றி கூறினார்.

    விழாவிற்கான ஏற்பாடு களை சீதக்காதி அறக்கட்ட ளையின் துணை பொது மேலாளர் ஷேக் தாவூது கான் மற்றும் பேராசிரியர் கள் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாண விகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

    • தனது கணவர் மற்றும் 10 வயது மகனை அமர வைத்து அவர்கள் முன்பு ஒரு பெட்டியை வைக்கிறார்.
    • இந்த தருணத்திற்காக பல ஆண்டுகளாக பிரார்த்தனை செய்ததாக அந்த பெண் கூறுவது போல காட்சிகள் உள்ளது.

    சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பெண் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதை தனது கணவர் மற்றும் 10 வயது மகனிடம் வெளிப்படுத்தும் காட்சிகள் வைரலாகி வருகிறது. அதில், அந்த பெண் தான் கர்ப்பமான செய்தியை வெளிப்படுத்த தனது கணவர் மற்றும் 10 வயது மகனை அமர வைத்து அவர்கள் முன்பு ஒரு பெட்டியை வைக்கிறார்.

    அதில் ஒரு அழகான பொம்மை மற்றும் கர்ப்ப பரிசோதனை குழாய் இருந்தது. கணவர் அதை திறந்து பார்த்ததும், தனது மனைவி கர்ப்பமானதை அறிந்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். மகனுக்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள சிறிது நேரம் ஆனது. அப்போது சிறுவனிடம் அவரது தந்தை, அம்மா கர்ப்பமாக இருக்கிறாள் பாபி என கூறுகிறார்.

    அதைக்கேட்டு அந்த மகனும் மகிழ்ச்சி அடைகிறார். இந்த தருணத்திற்காக பல ஆண்டுகளாக பிரார்த்தனை செய்ததாக அந்த பெண் கூறுவது போல காட்சிகள் உள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் வட்டார குழு அமைத்து கட்டணமின்றி அங்கக சான்று பெறலாம்.
    • இந்த தகவலை வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் தனியாக அல்லது குழுக்கள் அமைத்து உரிய கட்டணம் செலுத்தி தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின் கீழ் பதிவு செய்து சான்று பெற்று வருகின்றனர்.

    விவசாயம் மட்டுமின்றி கால்நடை வளர்ப்பு, தேனி வளர்ப்பு, வளப்பொருள் சேகரிப்பு செய்வோரும் வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம். பதிவு கட்டணம், ஆய்வு சார்ந்த கட்டணம், பயண நேரம் கட்டணம் மற்றும் சான்று கட்டணமாக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 700, பிற விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 200, விவசாயிகள் குழுக்களுக்கு ரூ.7 ஆயிரத்து 200 மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.9 ஆயிரத்து 400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தற்பொழுது ஒரே வட்டாரத்தில், ஒரே கிராமத்தில் அல்லது அருகாமையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த அங்கக விவசாயம் செய்யும் விவசாயிகள் ஒரு குழுவாக சேர்ந்து எவ்வித கட்டணமும் இல்லாமல் பங்களிப்பு உறுதி அளிப்புத் திட்டத்தில் அங்ககச் சான்று பெறலாம்.

    இவ்வாறு சான்று பெற்ற பொருட்களை உள்நாட்டில் மட்டும் விற்பனை செய்யலாம். இதற்கு 10 முதல் 50 விவசாயிகள் இணைந்து குழு அமைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டு புகைப்படம் ஒட்டிய விண்ணப்பத்துடன் பதிவு செய்ய வேண்டும்.

    இதில் பதிவு செய்யும் விவசாயிகள் தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின்கீழ் அங்கக சான்று பெறு வதற்காக வழங்கப்படும் அதே ஆவணங்களை மண்டல குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    இத்திட்டத்தில் உறுப்பினர்கள் குழுவில் உள்ள மற்ற விவசாயிகளின் வயலை ஆய்வு செய்ய வேண்டும். 3-ம் நபர் ஆய்வு இல்லை. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் கட்ட ணமின்றியும், எளிமை யாகவும் அங்ககச் சான்று பெற முடியும்.

    விவசாயிகள் பங்களிப்பு உறுதி அளிப்புத்திட்டத்தில் கட்டணம் இல்லாமல் அல்லது மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை செயல்திட்டத்தின்படி கட்டணம் செலுத்தி பதிவு செய்து அங்கக சான்று பெற்று பயன்பெறலாம்.

    மேலும் தகவல்களுக்கு உழவர் மையம், ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகம் (தலைமை அரசு மருத்துவமனை எதிரில்) ராமநாதபுரம் என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாதந்தோறும் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.
    • ராமநாத சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    தென் கைலாயம் என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நன்மை கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    குறிப்பாக மாதந்தோறும் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அன்றைய நாளில் ராமேசுவரத்தில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் திரளுவார்கள்.

    அதன்படி இன்று ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்தனர். அங்கு அவர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அதன்பின் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடிய பக்தர்கள் ராமநாத சுவாமியையும், பர்வதவர்த்தினி அம்பாளையும் தரிசனம் செய்தனர்.

    அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை, கோவில், ரத வீதி உள்பட பல்வேறு இடங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமாக காட்சியளித்தது.

    பக்தர்களின் வருகையை முன்னிட்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை நகராட்சி, கோவில் நிர்வாகம் செய்திருந்தது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு ராமநாத சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை மேல் உள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் செல்ல கடந்த 15-ந்தேதி முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டி ருந்தது.

    அமாவாசையான இன்று அதிகாலையிலேயே மலையடிவாரமான தாணிப் பாறையில் பெண்கள் உள்பட ஏராளமானோர் திரண்டனர். காலை 7 மணிக்கு வனத்துறையினரின் சோதனைக்கு பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். அமாவாசையை முன்னிட்டு சந்தன, சுந்தர மகாலிங்கத்துக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    • 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
    • ராமேசுவரம், பாம்பன் பகுதியில் சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது.

    ராமேசுவரம்:

    மீன்களை இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் 61 நாட்கள் வரை தமிழக கடற்பகுதியில் விசைப்படகில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை கடந்த 15-ந் தேதி நிறைவடைந்தது.

    இதையடுத்து பாம்பன் மீனவர்கள் அன்று நள்ளிரவு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஆனால் புயல் சின்னம் காரணமாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் இன்று காலையே மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை அனுமதி அளித்திருந்தது.

    ஆனால் அதனை மீறி ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று மதியம் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

    இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரி கூறியதாவது:-

    ராமேசுவரம், பாம்பன் பகுதியில் சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது. ராமேசுவரம் மீனவர்கள் அதனை மீறி முன்கூட்டியே கடலுக்கு சென்றுள்ளனர். இது விதிகளை மீறிய செயலாகும்.

    இவ்வாறு செல்லும் மீனவர்களுக்கு கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்குவது ஒரு மாத காலம் நிறுத்தப்படும். மேலும் மானிய டீசலும் ரத்து செய்யப்படும். ராமேசுவரம் மீனவர்களின் விதிமீறல் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரம், ரெகுநாதபுரம், பெரியபட்டிணம் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • ஆர். எஸ்.மடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மின்சார உதவி செயற்பொறியாளர் (நகர்) பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    ஆர். எஸ்.மடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் சக்கரக்கோட்டை, சின்னக்கடை, புலிக்கா ரத்தெரு, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், கேணிக்கரை சுற்றியுள்ள பகுதிகள், தாயுமான சாமி கோவில் தெரு, வண்டிக்காரத்தெரு, தங்கப்பா நகர், அண்ணா நகர், அரசு மருத்துவமனை, அரண் மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன்கோவில் மறறும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கள் விதி, கே. கே. நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு சிங்காரதோப்பு, பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோனீயர் சுற்று பகுதிகள், கோட்டை மேடு, எட்டிவயல் மற்றும் ரெகுநாதபுரம் தெற்கு காட்டூர் தெற்குவாணிவீதி படைவெட்டிவலசை, பூசாரி வலசை, ராமன்வ லசை, கும்பரம், இருட்டூ ரணி, வெள்ளரி ஓடை, சேதுநகர், காரான், முத்துப்பேட்டை, பெரிய பட்டிணம், தினைக்குளம், வள்ளி மாடன்வலசை, வண்ணாண்குண்டு, பத்ராதரவை, நயினா மரைக்கான், சேது நகர், பிச்சாவலசை, வள்ளி மாடன்வலசை உத்தரவை, தாதனேந்தல் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • அபிராமம் பகுதியில் ரேசன் பொருட்கள் சரிவர கிடைக்காததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
    • கோதுமை, மண்எண்ணெய் சீனி, துவரம்பருப்பு உள்பட அனைத்து பொருட்களும் கிடைப்பதில்லை.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், அபிராமம் பகுதியில் உள்ள ரேசன்கடைகளில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அரிசி, தவிர கோதுமை, சீனி, துவரம்பருப்பு, மண்எண்ணெய் உள்பட அனைத்து பொருட்களும் சரிவர கிடைக்காததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ரேசன்கடையில் அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் சாதாரண மக்கள் முதல் நடுத்தர மக்களும் ரேசன்கடையில் உணவு பொருட்களை வாங்கி பயனடைகின்றனர். அபிராமம் பகுதியில் உள்ள 3 ரேசன் கடைகளில் 1200 ரேசன்கார்டுதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.

    கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக அக்னி வெயில் நட்சத்திரம் முடிந்த நிலையிலும் தொடர் வெப்பத்தால் பகல்நேரங்களில் ரேசன்கடைகளுக்கு பொதுமக்கள் வருகை குறைவாக காணப்படுகிறது. வெயிலின் தாக்கம் குறைந்து காலை, மாலை ரேசன்கடைகளுக்கு சென்றால் கடை பூட்டியே கிடைக்கிறது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது.

    ரேசன்கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் அரிசியை தவிர கோதுமை, சீனி, துவரம்பருப்பு, மண்எண்ணெய் உள்பட பல பொருட்கள் அபிராமம் பகுதி பொதுமக்களுக்கு பெயரளவிற்கு மட்டுமே கிடைக்கிறது. முன் கூட்டியே ரேசன் பொருட்கள் வாங்க வராமல் மாத கடைசியில் ரேசன்கடைக்கு ரேசன் பொருட்கள் வாங்க வருவோர் ஏமாற்றம் அடைகின்றனர்.

    இதுபற்றி அபிராமம் அப்பகுதி மக்கள் கூறுகையில், தகுதியான அனைத்து ரேசன்கார்டு தாரர்களுக்கும் கோதுமை, மண்எண்ணெய் சீனி, துவரம்பருப்பு உள்பட அனைத்து பொருட்களும் கிடைப்பதில்லை. ஏழை மக்களின் நன்மை கருதி அனைத்து பொருட்களும் அனைத்து மக்களுக்கும் மாதந்தோறும் ரேஷனில் ரேசன் பொருட்கள் கிடைக்க சமந்தப்பட்ட உணவுப்பொருள் வழங்கள் மற்றும் கூட்டுறவு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • கீழக்கரையில் அதிகரிக்கும் சாலை விதி மீறல்களால் போக்குவரத்து போலீஸ் நிலையம் ஏற்படுத்த வேண்டும்.
    • இதுெதாடர்பாக அந்தப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். வளர்ந்து வரும் மக்கள் தொகை, பெருகி வரும் வாகனங்கள் எண்ணிக்கையினால் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    போலீஸ் நிலையத்தில் நிலவும் போலீசார் பற்றாக் குறையால் நகரில் பெரிய 'தலைவலியாக' மாறி வரும் நெரிசலுக்கு தீர்வு காணுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் விதீமீறல்கள் அதிகளவில் நடைபெறுகிறது.

    போக்குவரத்து இடையூறு காரணமாக பல தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். ஆக்கிரமிப்பு, போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆம்பு லன்சு செல்ல முடியவில்லை. விரும்பிய இடத்தில் லாரிகளை நிறுத்தி சரக்குகளை இறக்கி வருகின்றனர். சில சமயம் வலது, இடது இரு பக்கங்களிலும் லாரி நிறுத்தப்பட்டு சரக்குகள் இறக்கப்படுவதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    கீழக்கரையின் நிலைமை குறித்து சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் முகம்மது சாலிஹ் ஹுசைன் கூறுகையில், வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும். நிரந்தர போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைத்திட கோரியும் சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    சம்பந்தப்பட்ட அதிகாரி கள் உடனடியாக நட வடிக்கை எடுத்து கீழக்கரையில் போக்குவரத்து போலீஸ் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    ×