search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் வட்டார குழு அமைத்து கட்டணமின்றி அங்கக சான்று பெறலாம்-வேளாண் அதிகாரி தகவல்
    X

    விவசாயிகள் வட்டார குழு அமைத்து கட்டணமின்றி அங்கக சான்று பெறலாம்-வேளாண் அதிகாரி தகவல்

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் வட்டார குழு அமைத்து கட்டணமின்றி அங்கக சான்று பெறலாம்.
    • இந்த தகவலை வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் தனியாக அல்லது குழுக்கள் அமைத்து உரிய கட்டணம் செலுத்தி தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின் கீழ் பதிவு செய்து சான்று பெற்று வருகின்றனர்.

    விவசாயம் மட்டுமின்றி கால்நடை வளர்ப்பு, தேனி வளர்ப்பு, வளப்பொருள் சேகரிப்பு செய்வோரும் வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம். பதிவு கட்டணம், ஆய்வு சார்ந்த கட்டணம், பயண நேரம் கட்டணம் மற்றும் சான்று கட்டணமாக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 700, பிற விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 200, விவசாயிகள் குழுக்களுக்கு ரூ.7 ஆயிரத்து 200 மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.9 ஆயிரத்து 400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தற்பொழுது ஒரே வட்டாரத்தில், ஒரே கிராமத்தில் அல்லது அருகாமையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த அங்கக விவசாயம் செய்யும் விவசாயிகள் ஒரு குழுவாக சேர்ந்து எவ்வித கட்டணமும் இல்லாமல் பங்களிப்பு உறுதி அளிப்புத் திட்டத்தில் அங்ககச் சான்று பெறலாம்.

    இவ்வாறு சான்று பெற்ற பொருட்களை உள்நாட்டில் மட்டும் விற்பனை செய்யலாம். இதற்கு 10 முதல் 50 விவசாயிகள் இணைந்து குழு அமைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டு புகைப்படம் ஒட்டிய விண்ணப்பத்துடன் பதிவு செய்ய வேண்டும்.

    இதில் பதிவு செய்யும் விவசாயிகள் தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின்கீழ் அங்கக சான்று பெறு வதற்காக வழங்கப்படும் அதே ஆவணங்களை மண்டல குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    இத்திட்டத்தில் உறுப்பினர்கள் குழுவில் உள்ள மற்ற விவசாயிகளின் வயலை ஆய்வு செய்ய வேண்டும். 3-ம் நபர் ஆய்வு இல்லை. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் கட்ட ணமின்றியும், எளிமை யாகவும் அங்ககச் சான்று பெற முடியும்.

    விவசாயிகள் பங்களிப்பு உறுதி அளிப்புத்திட்டத்தில் கட்டணம் இல்லாமல் அல்லது மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை செயல்திட்டத்தின்படி கட்டணம் செலுத்தி பதிவு செய்து அங்கக சான்று பெற்று பயன்பெறலாம்.

    மேலும் தகவல்களுக்கு உழவர் மையம், ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகம் (தலைமை அரசு மருத்துவமனை எதிரில்) ராமநாதபுரம் என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×