search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேக்கி வைத்த வைகை தண்ணீரால் 2-ம் போக நெல் விளைச்சல் அமோகம்
    X

    தேக்கி வைத்த வைகை தண்ணீரால் 2-ம் போக நெல் விளைச்சல் அமோகம்

    • ராமநாதபுரத்தில் தேக்கி வைத்த வைகை தண்ணீரால் 2-ம் போக நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது.
    • 2-ம் போக நெல் சாகுபடிக்காக பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்களை அறுவடை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் தற்போது வரை ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான பகுதியாகவே இருந்து வருகிறது. வட கிழக்கு பருவமழை காலத்தில் தான் நெல் விவசாயத்தை விவசாயிகள் எதிர்பார்ப்புடன் தொடங்குகின்றனர்.

    கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை இல்லாததால் நெல் விவசாயம் அதிக பாதிப்பை சந்தித்தது. மழை பெய்யாத தால் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகியது. பெரும்பாலான ஊர்களில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டிருந்தாலும் வைகை அணையில் இருந்து வந்த வைகை தண்ணீரால் ஒரு சில கிராமங்களில் நெல் விவசாயம் காப்பாற்றப்பட்டது.

    திருஉத்தரகோசமங்கை, மேலச்சீத்தை, களக்குடி, சத்திரக்குடி, நல்லாங்குடி, ஆர்.காவனூர் உள்ளிட்ட கிராமங்களில் வைகை தண்ணீர் வரத்தால் முதல் போக நெல் சாகுபடி நன்றாக இருந்தது.

    இந்த நிலையில் வைகை அணையில் இருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய், களக்குடி கண்மாய், நல்லாங்குடி, மேலச்சீத்தை உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள கண்மாய்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி இந்த கிராமங்களில் விவசாயிகள் இந்த ஆண்டு 2-ம் போக நெல் விவசாய பணிகளை தொடங்கி ஆர்வமுடன் ஈடுபட்டனர்.

    இதில் களக்குடி, மேலச்சீத்தை, நல்லாங்குடி, சத்திரக்குடி உள்ளிட்ட கிராமங்களில் நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்துள்ளன.

    இதுபற்றி களக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், இதுவரை களக்குடி கிராமத்தில் முதல் போக நெல் விவசாய பணிகளை மட்டுமே செய்துள்ளோம். முதல் முறையாக இந்த ஆண்டுதான் 2-ம் போக நெல் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிேறாம். வைகை தண்ணீரால் தான் இந்த ஆண்டு முதல் போக நெல் சாகுபடி விளைச்சல் அமோகமாக இருந்ததுடன் 2-ம் போக நெல் சாகுபடி விவசா யத்திலும் ஈடுபட்டு வருகிேறாம்.

    இன்னும் ஒரு மாதத்தில் 2-ம் போக நெல் சாகுபடிக்காக பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்களை அறுவடை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×