என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • வாள்-கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைதானார்.
    • முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார்.

    பசும்பொன்

    கமுதி அருகே உள்ள அபிராமம் பஸ் நிலையத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து போலீசார் அவரை சோதனையிட்டனர்.

    அப்போது வாள் மற்றும் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அைத பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர் அபிராமம் அருகே உள்ள தரைக்குடி கிராமத்தை சேர்ந்த பொன்முத்துராமலிங்கம் (வயது 22) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    • 500 மதுக்கடைகளை மூடும் முடிவுக்கு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்றுள்ளது.
    • முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

    ராமநாதபுரம்

    மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம். எல். ஏ. கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என சட்டமன்றப் பேரவை யில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்தார். அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 500 மது கடைகளைக் கண்டறிந்து அதனை மூட அரசாணை வெளியிடப்பட்டது.

    அதன் அடிப்படையில் 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

    தற்போது மூடப்பட்டுள்ள 500 மது கடைகள் மட்டுமின்றி தமிழகம் மதுவில்லா மாநிலமாகத் திகழ முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுக்கடைகள் மூடப்படும் பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டால் அந்த விற்பனையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடல் அட்டைகள் மருத்துவ குணம் நிறைந்தது. வெளிநாடுகளில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
    • கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    ராமநாதபுரம்:

    மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் 39 வகையான கடல் அட்டைகள் காணப்படுகின்றன. நிலத்தில் விவசாயிகளின் நண்பனாக மண்புழு உள்ளதைப்போல், கடலில் மீனவர்களுக்கு நண்பனாக கடல் அட்டை விளங்குகிறது. கடல் அட்டை 2001-ல் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

    கடல் அட்டைகள் மருத்துவ குணம் நிறைந்தது. வெளிநாடுகளில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக கடல் அட்டைகளை கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே உள்ள ஆற்றாங்கரை வழியாக இலங்கைக்கு கடத்தி செல்லும் நோக்கத்துடன் ஆம்னி காரில் சுமார் 1 டன் எடை உள்ள கடல் அட்டைகள் கடத்தி செல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வனத்துறை உதவி உயிரின காப்பாளர் (பயிற்சி) சுரேஷ்குமார் தலைமையில் இன்று காலை பனைக்குளம்-ஆற்றாங்கரை சாலையில் ரகசிய கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

    அப்போது பனைக்குளத்தில் இருந்து வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் 1 டன் எடை உள்ள கடல் அட்டை மற்றும் 3 பேர் இருந்தனர். இதையடுத்து கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனா். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளையும், கைது செய்யப்பட்ட 3 பேரையும் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் இந்த சம்பவத்தில் மேலும் பலர் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்தது. அவர்களை தேடி வருகின்றனர்.

    கடத்தலில் பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால் கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர் வெளியிட அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

    • நேற்று முன்தினம் 9 மீனவர்களை கைது செய்தது
    • இன்று 3 படகுகளில் சென்றவர்களை கைது செய்துள்ளது

    நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்கள் சென்ற 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேசுவரத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.

    நேற்று முன்தினம் 9 பேர் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று 21 பேர் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த செயலை தடுத்து நிறுத்த மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் அமல்படுத்தப்படும் மீன்பிடி தடை காலம் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

    மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஒரு வாரத்திற்குள் இரண்டு முறை இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது.

    • பசும்பொன் அருகே கோழிக்கடை சூறையாடப்பட்டது.
    • கமுதி போலீசில் புகார் செய்தார்.

    பசும்பொன்

    பசும்பொன் அருகே உள்ள கே.நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா மகன் திருக்கண் (வயது44). இவர் கண்ணார்பட்டியில் கோழிக்கடை நடத்தி வருகிறார்.

    இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பதினெட்டாம் படியான் மகன் ரமேஷ் (29) கோழிக்கறியை கடனாக கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு திருக்கன் பழைய பாக்கி உள்ளதால் கடன் தர முடியாது என மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருக்கண் கமுதி போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஹெலிபேட் அமைத்த வழக்கில் அ.தி.மு.க. நிர்வாகி விடுதலை செய்யப்பட்டார்.
    • இது தொடர்பாக மருது பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    ராமநாதபுரம்

    கடந்த 2011-ம் ஆண்டு நடந்த ராமநாதபுரம் மாவட்ட 4 சட்டமன்ற தேர்த லில் போட்டியிட்ட வேட்பா ளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய சென்னை யில் இருந்து ராமநாதபுரம் வரை தனி விமானம் மூலம் வந்தார்.

    அவருக்காக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் விருந்தினர் மாளிகை அருகில் ஹெலி பேட் தளம் அமைக்கப் பட்டது. இது தொடர்பாக அப்போதைய தேர்தல் ஆணையம் இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் அப்போ தைய அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் மருது பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்தது.

    இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப் பட்டது. அது தற்போதைய மண்டபம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக உள்ள மருதுபாண்டியன் மீதும் மற்றும் 2 நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    • இ-சேவை மையத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • ஆயிரத்திற்கும்ய மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    கீழக்கரை

    கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்க நகர் செயலாளர் தாஜுல் அமீன், மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவில் 75 ஆயிரத்திற்கும்ய மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. 10-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த 58 கிராமங்கள் உள்ளன. இங்குள்ள சேவை மையத்தில் புதிதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பித் தல், ஆதார் கார்டு பிழை திருத்தம் செய்தல், பயோ மெட்ரிக் புதுப்பித்தல், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை உள்ளிட்ட சேவை களுக்கு கூடுதல் பணியாளர் இல்லாமல் மக்கள் நீண்ட நேரம் காத்து இருக்கும் நிலை உள்ளது. ஆகவே மக்கள் தேவைகளை துரித மாக நிறைவேற்ற கூடுதல் பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

    • வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவில் மேற்கொள் ளப்பட்டு வருகின்ற வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், மனித வள மேம்பாட்டுத்துறை அரசு செயலாளருமான நந்த குமார் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்களான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் மிஷின் சமத்துவபுரங்களின் பராமரிப்பு, பிரதம மந்திரி சுவாஸ் யோஜனா, நீலப் புரட்சி திட்டம், பசுமை வீடுகள் திட்டம், வேளாண்மைத்துறை சார்பில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் ஒழுங்கு முறை விற்பனை மையம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுசுகாதாரத் துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகளில் முடிவுற்ற பணிகள் மேற்கொள்ளப் படும் பணிகள் மற்றும் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் அந்த பணிகளை திட்டமிட்டபடி உரிய காலத்திற்குள் முடித்திட வேண்டும். முதலமைச்சர் அறிவுரைப்படி அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் கிடைத்திடும் வகையில் செயல்பெற்றிட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    கூட்டத்திற்கு பின் தொடர்ந்து அச்சுந்தன்வயல், தேவேந்திர நல்லூர் பகுதிகளில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு கணிப்பாய்வு அலுவலர் நந்தகுமார் அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, ராமநாத புரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, மகளிர் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 71 பேர் தேர்ச்சி அடைந்தனர்.
    • தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 71 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து இந்தாண்டு 178 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். நீட் தேர்வில் 71 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 39.88 ஆகும்.

    இதில் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் மாதிரி அரசு மேல்நி லைப்பள்ளி மாணவர் சீனிவாசன் 720-க்கு 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், ஆர்.காவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சர்மிலி 414 மதிப்பெண்கள் பெற்றும் 2ம் இடத்தையும், ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் செந்தாமரை கண்ணன் 411 மதிப்பெண் கள் பெற்று 3-ம் இடமும், காடர்ந்தகுடி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவி திலகசர்மி 363 மதிப்பெண் கள் பெற்று 4-ம் இடமும் பெற்றுள்ளனர்.

    மாவட்டத்தில் முதல் 13ம் இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் ஏற்கனவே பிளஸ் 2 தேர்வை முடித்து, நீட் தேர்வுக்காக சிறப்பு பயிற்சி பெற்று இந்தாண்டு தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து கூறுகையில், கடந்த ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 278 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதி 90 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    ஆனால் இந்த ஆண்டு தேர்வு எழுதிய வர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட குறைவாக இருந்தாலும் தேர்ச்சி சதவீதம் அதிக ரித்துள்ளது என்றார்.

    • ஒப்பிலான் ஊராட்சி முழுவதும் காவிரி கூட்டுக்குடிநீர் வசதி வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.
    • பள்ளிவாசல் முன்பு பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    சாயல்குடி

    கடலாடி ஒன்றியம் ஒப்பிலான் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் அப்துல் ஹக்கீம். இவர் தனது மக்கள் பணி குறித்து கூறியதாவது:-

    மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவரும், இந்தப்பகுதி மாவட்ட கவுன்சிலருமான வேலுச்சாமியின் நிதியில் இருந்து ஒப்பிலான் ஒத்தவீடு வரை சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. அழக்குடி கிராமத்திற்கு தார்ச்சாலை, ஒப்பிலான் கிராமத்தில் இருந்து அழக்குடி மற்றும் ஒப்பிலான் ஒத்த வீடு வரை பைப் லைன் விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது.

    ஒப்பிலான் கிராமத்தில் வாலிநோக்கம் சாலை முதல் ஒப்பிலான் தபால் நிலையம் வரை பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. வாலிநோக்கம் சாலையில் இருந்து ஒப்பிலான் ரசூல் தெரு வரை சிமெண்டு சாலை போடப்பட்டுள்ளது. ஒப்பிலான் கிராமம் முழுவ தும் பைப் லைன் அமைத்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பிலான் பள்ளிவாசல் முன்பு பேவர் பிளாக் சாலை அமைக்கப் பட்டுள்ளது.

    ஒப்பிலான் கிராமத்தை பசுமை கிராமமாக மாற்றுவ தற்கு 700 மரக்கன்றுகள் நட்டு மினி பாரஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவராக உள்ள நான் எனது சொந்த நிதியில் ஒப்பிலான் கிராமத்தில் பழுதடைந்து இருந்த மின் கம்பங்களை மாற்றி 24 புதிய மின் கம்பங்கள் அமைத்து பொது மக்களுக்கு மின்சார பற்றாக்குறை இல்லாத நிலையை உருவாக்கி தந்துள்ளேன்.

    மேலும் ஒப்பிலான் ஊராட்சிக்கு கலெக்டர் மற்றும் மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கி தரும் பட்சத்தில் கீழ்க்கண்ட பணிகளை மேற்கொள்வேன்.

    ஒப்பிலான் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இது வரை காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் கொண்டு வரப்படவில்லை. ஆகையால் கடுகு சந்தை கிராமத்தில் இருந்து ஒப்பிலான்- வாலிநோக்கம் சாலை வழியாக புதியதாக பைப் லைன் அமைத்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் ஒப்பி லான் ஊராட்சி முழுவதும் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒப்பிலான் ஊராட்சி முழுவதும் உள்ள தெருக்களில் பேவர் பிளாக் சாலை, ஒப்பிலான் கிரா மத்தில் புதியதாக ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட வேண்டும். அரசு இடத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பிலான் மற்றும் ஒத்த வீடு கிராமங்களில் இடியும் நிலையல் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அகற்றி விட்டு ஒப்பிலான் கிராமத்திற்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் ஒத்த வீடு கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஒப்பிலான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும். வாலிநோக்கம்-ஒப்பிலான் சாலையில் இருந்து ஒப்பிலான் கடற்கரை செல்லும் சாலையை தார்சாலையாக அமைக்க வேண்டும்.

    ஒப்பிலான் கிராமத்தில் இருந்து ஒத்தப்பனை மாடசாமி கோவில் செல்லும் சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும். பிள்ளையார்கோவில் பகுதியில் இருந்து ஒப்பிலான் கண்மாய் வரை தார்சாலை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாங்குரோவ் வளர்ச்சியை தடுக்கும் காட்டு கருவேல மரங்களை அப்புறப்படுத்த இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • வனத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் நீண்ட கடற்கரை சாலையைக் கொண்டது கிழக்கு கடற்கரை சாலை. கடற்கரையில் இருந்து பஸ் போக்குவரத்துள்ள சாலை வரை பசுமையாக பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கும். இங்கு இயற்கையாக வளர்ந்துள்ள அலையாத்தி காடுகள் எனப்படும் மாங்குரோவ் காடுகள் உள்ளது. வேர் மேல் நோக்கி வளரும் அசைக்க முடியாத வலிமை கொண்டு வளரும் இந்த மாங்குரோவ் மரங்கள் இயற்கை பேரழிவான சுனாமி போன்ற பேரலைகளில் இருந்து காப்பாற்றுகிறது.

    மேலும் அரிய வகை கடற்பறவைகள் முட்டை யிட்டு தங்கள் இனங்களை பெருக்குவதற்கும் பாது காப்பான இடமாக உள்ளது இந்த மாங்குரோவ் காடுகள் உள்ளது. கடற்கரையை யொட்டி அடர்த்தி யாக வளரும் மாங்குரோவ் காடுகளை படகில் சென்று சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர். இயற்கையாக வளரும் இந்த காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வனத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    இதனிடையே நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தும் காட்டுக் கருவேல முட்செடிகள் மரமாக அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. இது மாங்குரோவ் காடுகளின் வளர்ச்சியை பாதிக்கிறது. எனவே அலையாத்தி காடுகளுக்கு இடையே வளரும் காட்டு கருவேல மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராமநாதபுரத்தில் ம.தி.மு.க சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • இதனை மாவட்ட செயலாளர் வி.கே.சுரேஷ் தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம்

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மாநில சட்ட மன்றத்தின் செயல்பாடுகளுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி முட்டுக்கட்டை போடுகிறார். அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிராக பேசி வருகிறார்.

    அரசியல் சட்டத்தை மதிக்காமல் அரசியல் சட்டப்படி எடுத்துக் கொண்டுள்ள பதவிப் பிரமாணத்தை ஆளுநர் ரவி மீறி வருகிறார். பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கவர்னரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

    அதனை வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 29-வது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கவர்னர் ஆர்.என்.ரவியை பொறுப்பில் இருந்து அகற்றக்கோரி கையெழுத்து இயக்க நிகழ்ச்சி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வழிகாட்டுதலின் படி, முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆலோச னையின்படி ராமநாதபுரம மாவட்ட ம.தி.மு.க சார்பில் அரண்மனை முன்பு காலை கையெழுத்து இயக்கம் நடந்தது. இதனை மாவட் செயலாளர் வி.கே.சுரேஷ் தொடங்கி வைத்து பேசினார்.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் பிரகாஷம் தலைமை வகித்தார். மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் குணா, முன்னாள் மாவட்ட செயலாளர் பேட்ரிக், மாநில இளைஞரணி துணைச்்செயலாளர் கராத்தே பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் வைண்டிங் சுப்பிரமணி வரவேற்புரை ஆற்றினார்.

    இதில் மாவட்ட துணைச்செயலாளர்கள் சரவணன், பாஸ்கரன், பிச்சை சுகநாதன், மங்க ளேசுவரி முத்துக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், சடாச்சரம், பொதுக்குழு உறுப்பினர்கள் அப்துல் ஹக்,நித்தியானந்த்,சத்தியேந்திரன்,மனோகரன்,கெவிக்குமார், சந்திரன், டைசன், குத்புதீன், ஞானப்பிரகாசம், நகரச்செயலாளர்கள் சங்கு துரை (கீழக்கரை).

    பிச்சை மணி (பரமக்குடி), வெள்ளைச்சாமி (ராமேசுவரம்),ஒன்றிய செயலாளர்கள் கதிர்வேல் (கமுதி),ஜோதி (மண்டபம் மேற்கு), லூக்காஸ் (மண்ட பம் கிழக்கு), உதயசூரியன் (நயினார் கோவில்), உதயக் குமார் (பரமக்குடி), நாக பாண்டி (கமுதி), நாகராஜ் (சாயல்குடி),சிங்கார செல்வம் (திருவாடானை கிழக்கு),வேலுச்சாமி (முதுகுளத்தூர்), பாண்டித்துரை (ராஜசிங்கமங்கலம்).

    பிர்தௌஸ்கான் (ராமநாதபுரம்),ஜெகதீஸ் பாண்டியன் (போகலூர்), இளையராஜா (திருப்புல்லாணி), மாநில தொண்டரணி துணைச் செயலாளர் முனியராஜ், விவசாய அணி துணைச் செயலாளர் முருகேச பாண்டியன், திருப்புல்லாணி செல்வராஜ்,மாணவரணி துணைச்செயலாளர் பாலகணேஷ், நெசவாளர் அணி துணைச்செயலாளர் சீனிவாசன்.

    ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி இணையதள பொறுப்பாளர் எம்.சி வெற்றிவேல், திருவாடானை நூருல் ஹசன்,முதுகுளத்தூர் வழிவிட்டான்,ஒன்றிய பொருளாளர் செய்யது இபுறாம்ஷா,கவியரசன்,சிவசுந்தர்,மாதவன்,முகம்மது அப்துல் ஹக்,வல்லக்குளம் தாஜீதீன், மண்டபம் கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளர் ஜேம்ஸ், உச்சிப்புளி வேலுச் சாமி, தங்கச்சி மடம் ஜோசப் தாஸ்,கமுதி சரத்குமார்,பரமக்குடி பாலகிருஷ்ணன்.

    கூட்டணி கட்சி நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் கோபி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முகமது யாசின்,பி.ஐ.சி.எம் தாலுகா செயலாளர் செல்வராஜ், திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் அண்ணா ரவி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் புவனேஸ்வரன், மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ரஞ்சித் குமார், மாவட்ட துணைச்செயலாளர் சுரேஷ், எஸ்.டி.பி.ஐ அப்துல் ஜமீல், நஜ்முதீன்,பெரியார் பேரவை நாகேஸ்வரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    முடிவில் பொதுக்குழு உறுப்பினர் மனோகரன் நன்றி கூறினார்.

    ×