search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chicken shop"

    • கோழிக்கடையின் உரிமையாளர் ஆறுமுகம் சி.சி.டிவி கேமராவில் பார்த்துள்ளார்.
    • 4 பேர் தப்பி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள பூவைத்தேடி பேருந்துநிலையம் வடக்கு புறம் அருகே உள்ள ஆறுமுகம் என்பவர் கோழிக்கடை நடத்தி வருகிறார்.

    இந்த கோழிக்கடையில் சிசிடிவி காமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடையில் யாரும் இல்லாத போது கடையின் பூட்டை உடைத்து கொண்டு மர்மநபர் ஒருவர் உள்ளே சென்று அங்குள்ள கல்லாப்பெட்டியை எடுக்க முயன்றுள்ளார்.

    இதை வீட்டில் இருந்த படி கோழிக்கடையின் உரிமையாளர் ஆறுமுகம் சி.சி.டிவி கேமராவில் பார்த்துள்ளார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்களை கடையில் போய் பார்க்க கூறியுள்ளார்.

    அவர்கள் வந்து பார்த்தபோது வடமாநில இளைஞர் ஒருவர் கோழிக்கடையில் உள்ளே நின்றது தெரிய வந்தது.

    உடனே பொதுமக்கள் அவரை பிடித்து அருகில் இருந்த வேப்பமரத்தில் கட்டி வைத்து, கீழையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பெயரில் காவல்துறையினர் அவரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் விசாரணையில் அவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்பவன் என்பதும் சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் ஒரு வீட்டில் புகுந்து திருட முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும் இவருடன் 5 பேர் வந்ததாகவும், அதில் 4 பேர் தப்பி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கோழிக் கடைகாரருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, 2 நாட்களுக்கு மட்டும் கடை சீல் வைக்கப்பட்டது
    • கோழிக்கழிவுகளை, குப்பைகளை கொட்டினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள தீத்தாம்பாளையத்தில் கோழிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் கோழிக்கழிவுகளை இருசக்கர வாகனத்தில் வைத்து பரப்பு மேடு என்ற இடத்தில் கொட்டச் சென்றபோது அப்பகுதி பொதுமக்கள் அவரைப் பிடித்து நகராட்சி சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைத்தனர். நகராட்சி நிர்வாகத்தினரால் கோழிக் கடைகாரருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, 2 நாட்களுக்கு மட்டும் கடை சீல் வைக்கப்பட்டது.

    வெள்ளகோவில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் கடை, வீடுகளுக்கு நேரில் வந்து குப்பை மற்றும் கோழி கழிவுகளை பெற்றுச் செல்கின்றனர். இதை மீறி பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் கோழிக்கழிவுகளை, குப்பைகளை கொட்டினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • பசும்பொன் அருகே கோழிக்கடை சூறையாடப்பட்டது.
    • கமுதி போலீசில் புகார் செய்தார்.

    பசும்பொன்

    பசும்பொன் அருகே உள்ள கே.நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா மகன் திருக்கண் (வயது44). இவர் கண்ணார்பட்டியில் கோழிக்கடை நடத்தி வருகிறார்.

    இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பதினெட்டாம் படியான் மகன் ரமேஷ் (29) கோழிக்கறியை கடனாக கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு திருக்கன் பழைய பாக்கி உள்ளதால் கடன் தர முடியாது என மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருக்கண் கமுதி போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
    • திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

    திருப்பூர் :

    தருமபுரியை சோ்ந்தவா் முருகன் (வயது 38). இவா் திருப்பூா் முருகானந்தபுரத்தில் சொந்தமாக கோழிக் கடை வைத்திருந்தாா். கடந்த 2020 பிப்ரவரி 19ந்தேதி அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

    புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்தனா். இந்த வழக்கு திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு தீா்ப்பு வழங்கினாா்.

    இதில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த முருகனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜரானாா்.

    ×