என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோழிக்கடை உரிமையாளர்"

    • விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
    • திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

    திருப்பூர் :

    தருமபுரியை சோ்ந்தவா் முருகன் (வயது 38). இவா் திருப்பூா் முருகானந்தபுரத்தில் சொந்தமாக கோழிக் கடை வைத்திருந்தாா். கடந்த 2020 பிப்ரவரி 19ந்தேதி அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

    புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்தனா். இந்த வழக்கு திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு தீா்ப்பு வழங்கினாா்.

    இதில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த முருகனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜரானாா்.

    ×