என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாங்குரோவ் வளர்ச்சியை தடுக்கும் காட்டு கருவேல மரங்கள்
    X

    தொண்டி அருகே கடற்கரை ஓரம் வளரும் மாங்குரோவ் வளர்ச்சியைத் தடுக்கும் காட்டுக்கருவேல செடிகள்.

    மாங்குரோவ் வளர்ச்சியை தடுக்கும் காட்டு கருவேல மரங்கள்

    • மாங்குரோவ் வளர்ச்சியை தடுக்கும் காட்டு கருவேல மரங்களை அப்புறப்படுத்த இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • வனத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் நீண்ட கடற்கரை சாலையைக் கொண்டது கிழக்கு கடற்கரை சாலை. கடற்கரையில் இருந்து பஸ் போக்குவரத்துள்ள சாலை வரை பசுமையாக பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கும். இங்கு இயற்கையாக வளர்ந்துள்ள அலையாத்தி காடுகள் எனப்படும் மாங்குரோவ் காடுகள் உள்ளது. வேர் மேல் நோக்கி வளரும் அசைக்க முடியாத வலிமை கொண்டு வளரும் இந்த மாங்குரோவ் மரங்கள் இயற்கை பேரழிவான சுனாமி போன்ற பேரலைகளில் இருந்து காப்பாற்றுகிறது.

    மேலும் அரிய வகை கடற்பறவைகள் முட்டை யிட்டு தங்கள் இனங்களை பெருக்குவதற்கும் பாது காப்பான இடமாக உள்ளது இந்த மாங்குரோவ் காடுகள் உள்ளது. கடற்கரையை யொட்டி அடர்த்தி யாக வளரும் மாங்குரோவ் காடுகளை படகில் சென்று சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர். இயற்கையாக வளரும் இந்த காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வனத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    இதனிடையே நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தும் காட்டுக் கருவேல முட்செடிகள் மரமாக அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. இது மாங்குரோவ் காடுகளின் வளர்ச்சியை பாதிக்கிறது. எனவே அலையாத்தி காடுகளுக்கு இடையே வளரும் காட்டு கருவேல மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×