search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sea cucumber"

    • கடல் அட்டைகள் மருத்துவ குணம் நிறைந்தது. வெளிநாடுகளில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
    • கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    ராமநாதபுரம்:

    மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் 39 வகையான கடல் அட்டைகள் காணப்படுகின்றன. நிலத்தில் விவசாயிகளின் நண்பனாக மண்புழு உள்ளதைப்போல், கடலில் மீனவர்களுக்கு நண்பனாக கடல் அட்டை விளங்குகிறது. கடல் அட்டை 2001-ல் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

    கடல் அட்டைகள் மருத்துவ குணம் நிறைந்தது. வெளிநாடுகளில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக கடல் அட்டைகளை கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே உள்ள ஆற்றாங்கரை வழியாக இலங்கைக்கு கடத்தி செல்லும் நோக்கத்துடன் ஆம்னி காரில் சுமார் 1 டன் எடை உள்ள கடல் அட்டைகள் கடத்தி செல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வனத்துறை உதவி உயிரின காப்பாளர் (பயிற்சி) சுரேஷ்குமார் தலைமையில் இன்று காலை பனைக்குளம்-ஆற்றாங்கரை சாலையில் ரகசிய கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

    அப்போது பனைக்குளத்தில் இருந்து வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் 1 டன் எடை உள்ள கடல் அட்டை மற்றும் 3 பேர் இருந்தனர். இதையடுத்து கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனா். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளையும், கைது செய்யப்பட்ட 3 பேரையும் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் இந்த சம்பவத்தில் மேலும் பலர் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்தது. அவர்களை தேடி வருகின்றனர்.

    கடத்தலில் பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால் கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர் வெளியிட அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

    • போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சாக்கு மூட்டைகளில் 250 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தி செல்வதற்கு பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, வேதாளை, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடல்பகுதிகள் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக நாட்டுப் படகுகளில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டை, சமையல் மஞ்சள், கடல் பல்லி, கஞ்சா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தி செல்வது அதிகரித்துள்ளது.

    மேலும் இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்திற்கு தங்கம் கடத்திவரப்படுவதால் இந்திய-இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படை போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மண்டபம் அடுத்த வேதாளை-அரியமான் இடையே வடக்கு கடற்கரை பகுதியில் கடலோர இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து சென்றனர். அப்போது கடற்கரை ஓரமாக கிடந்த சாக்கு மூட்டைகளை பிரித்து சோதனை செய்தனர். இதில் சாக்கு மூட்டைகளில் 250 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தி செல்வதற்கு பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது.

    இதனையடுத்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படையினர் அதனை மண்டபம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் ராமேசுவரம் சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் சாக்கு மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 

    தேவகோட்டை அருகே ரூ.70 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல் செய்த போலீசார் 5 பேரை கைது செய்தனர்.
    தேவகோட்டை:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தேவகோட்டை பகுதிக்கு கடல் அட்டைகள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தேவகோட்டை போலீஸ் ஏட்டுகள் ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, இளங்கோ, நடராஜன் மற்றும் போலீசார் தேவகோட்டை அருகே உள்ள மூப்பையூர் ரோட்டில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இன்று காலை அந்த வழியாக வந்த மினி லாரியை போலீசார் மறித்து விசாரணை நடத்தினர். அப்போது அதில் இருந்த 5 பேர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மினிலாரியை சோதனை செய்தனர்.

    அதில் தடை செய்யப்பட்ட கடல் அட்டை, கடல் பல்லிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும். இதையடுத்து போலீசார் அதனையும், மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.

    கடல் அட்டைகளை கடத்தி வந்த திருவாடானை அஞ்சுக்கோட்டை செங்கலான்வயலைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது43), தொண்டியைச் சேர்ந்த விக்னேஷ் (23), திருவாடானை தம்பிக்கோட்டை சிவா (27), எஸ்.பி.பட்டினம் அருகே உள்ள பாசிபட்டணத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் மற்றும் தேவகோட்டை வாடிநன்னீயூரைச் சேர்ந்த வேடப்பன் (60) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொண்டி கொடிபங்கு கிராமத்தைச் சேர்ந்த காசி என்பவரை தேடி வருகின்றனர்.

    ×