search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒப்பிலான் ஊராட்சி முழுவதும் காவிரி கூட்டுக்குடிநீர் வசதி
    X

    அப்துல் ஹக்கீம்

    ஒப்பிலான் ஊராட்சி முழுவதும் காவிரி கூட்டுக்குடிநீர் வசதி

    • ஒப்பிலான் ஊராட்சி முழுவதும் காவிரி கூட்டுக்குடிநீர் வசதி வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.
    • பள்ளிவாசல் முன்பு பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    சாயல்குடி

    கடலாடி ஒன்றியம் ஒப்பிலான் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் அப்துல் ஹக்கீம். இவர் தனது மக்கள் பணி குறித்து கூறியதாவது:-

    மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவரும், இந்தப்பகுதி மாவட்ட கவுன்சிலருமான வேலுச்சாமியின் நிதியில் இருந்து ஒப்பிலான் ஒத்தவீடு வரை சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. அழக்குடி கிராமத்திற்கு தார்ச்சாலை, ஒப்பிலான் கிராமத்தில் இருந்து அழக்குடி மற்றும் ஒப்பிலான் ஒத்த வீடு வரை பைப் லைன் விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது.

    ஒப்பிலான் கிராமத்தில் வாலிநோக்கம் சாலை முதல் ஒப்பிலான் தபால் நிலையம் வரை பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. வாலிநோக்கம் சாலையில் இருந்து ஒப்பிலான் ரசூல் தெரு வரை சிமெண்டு சாலை போடப்பட்டுள்ளது. ஒப்பிலான் கிராமம் முழுவ தும் பைப் லைன் அமைத்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பிலான் பள்ளிவாசல் முன்பு பேவர் பிளாக் சாலை அமைக்கப் பட்டுள்ளது.

    ஒப்பிலான் கிராமத்தை பசுமை கிராமமாக மாற்றுவ தற்கு 700 மரக்கன்றுகள் நட்டு மினி பாரஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவராக உள்ள நான் எனது சொந்த நிதியில் ஒப்பிலான் கிராமத்தில் பழுதடைந்து இருந்த மின் கம்பங்களை மாற்றி 24 புதிய மின் கம்பங்கள் அமைத்து பொது மக்களுக்கு மின்சார பற்றாக்குறை இல்லாத நிலையை உருவாக்கி தந்துள்ளேன்.

    மேலும் ஒப்பிலான் ஊராட்சிக்கு கலெக்டர் மற்றும் மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கி தரும் பட்சத்தில் கீழ்க்கண்ட பணிகளை மேற்கொள்வேன்.

    ஒப்பிலான் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இது வரை காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் கொண்டு வரப்படவில்லை. ஆகையால் கடுகு சந்தை கிராமத்தில் இருந்து ஒப்பிலான்- வாலிநோக்கம் சாலை வழியாக புதியதாக பைப் லைன் அமைத்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் ஒப்பி லான் ஊராட்சி முழுவதும் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒப்பிலான் ஊராட்சி முழுவதும் உள்ள தெருக்களில் பேவர் பிளாக் சாலை, ஒப்பிலான் கிரா மத்தில் புதியதாக ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட வேண்டும். அரசு இடத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பிலான் மற்றும் ஒத்த வீடு கிராமங்களில் இடியும் நிலையல் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அகற்றி விட்டு ஒப்பிலான் கிராமத்திற்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் ஒத்த வீடு கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஒப்பிலான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும். வாலிநோக்கம்-ஒப்பிலான் சாலையில் இருந்து ஒப்பிலான் கடற்கரை செல்லும் சாலையை தார்சாலையாக அமைக்க வேண்டும்.

    ஒப்பிலான் கிராமத்தில் இருந்து ஒத்தப்பனை மாடசாமி கோவில் செல்லும் சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும். பிள்ளையார்கோவில் பகுதியில் இருந்து ஒப்பிலான் கண்மாய் வரை தார்சாலை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×