என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே உள்ள மண்டையூரில் காரை வழிமறித்து 100 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊரான விராலிமலைக்கு ராஜ்குமார் என்பவர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரது காரை வழிமறித்து 4 பேர் கொண்ட கும்பல், வழிப்பறி செய்துள்ளது. கொள்ளையடித்துச் சென்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #tamilnews
புதுக்கோட்டை:
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மக்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் தற்காலிக ஊழியர்கள் மூலம் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆனால் போதிய அனுபவம் இல்லாத டிரைவர்களால் தினந்தோறும் விபத்துக்கள் நிகழ்ந்து வருகிறது. இதுவரை 3 பேர் பலியாகியும் உள்ளனர். அத்துடன் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு இன்று காலை தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் ரெகு நாதபுரம் அருகே சென்ற போது அந்த வழியாக கறம்பக்குடியில் இருந்து தஞ்சையை நோக்கி தற்காலிக டிரைவர் ஓட்டிய அரசு பஸ் வந்தது. அதில் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இருந்தனர்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதின. இதில் 2 பஸ்களின் முன் பகுதி கண்ணாடிகள் சுக்கு நூறாக நொறுங்கின. அதிர்ஷ்டவசமாக 2 பஸ்களிலும் இருந்த மாணவர்கள் மற்றும் பயணிகள் காயமின்றி உயிர் தப்பி னர். விபத்துக்குள்ளான அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது.
இந்த விபத்தால் அப்ப குதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.
இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் அரசு பேருந்தை தற்காலிக டிரைவர் ஒருவர் ஓட்டிச் சென்றார். அப்போது பஸ்சை பின்னோக்கி இயக்குவதில் தற்காலிக டிரைவர் திணறினார். இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த வழியாக தனியார் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் சந்துரு என்பவர், தான் ஓட்டி வந்த பஸ்சில் இருந்து இறங்கி அரசு பஸ் டிரைவருக்கு உதவி செய்தார். #tamilnews
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சிதம்பரத்துக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை கன்னியாகுமரியை சேர்ந்த பினு (வயது 36) என்பவர் ஓட்டி வந்தார். இதில் கன்னியாகுமரி, மதுரையை சேர்ந்த சுமார் 40 பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த பஸ் இன்று அதிகாலை 3.45 மணியளவில் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் பக்கம் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் கடுமையான பனி மூட்டம் இருந்ததோடு, சாரல் மழையும் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.
இதில் நிலை தடுமாறிய ஆம்னி பஸ் சாலை தடுப்பில் மோதி தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சின் முன்வரிசையில் அமர்ந்திருந்த மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த நிர்மலா (60) இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியரான இவர் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பஸ்சில் பயணம் செய்த 15 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் விபரம் வருமாறு:-
மதுரை ஜோசப் (45) மதுரை, கன்னியாகுமரி சகாய அஸ்வினி (30), ரவிக்குமார் (29), லட்சுமி (28), ராணா ரீடு (36), ஆரோ மினிசா (2), காரைக்கால் கவுதம் (17), திருவனந்தபுரம் சிலுவின் (26), முட்டம் சகாயபிரதீப், ஜான், ஜார்ஜ் பென்னாட் உள்பட படுகாயம் அடைந்த 15 பேரும் மணப்பாறை மற்றும் திருச்சி அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
முன்னதாக விபத்து குறித்த தகவல் கிடைத்த தும் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன், சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார், மீட்பு குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை காப்பாற்றினர்.
தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கந்தர்வக்கோட்டை:
கந்தர்வக்கோட்டை அடுத்த வடுகப்பட்டியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (வயது40). விவசாயியான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இன்று காலை பன்னீர் செல்வம் தனது மகனை கந்தர்வக்கோட்டை உள்ள அரசு பள்ளியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது நாவல் ஏரி அருகே மோட்டார் சைக்கிள் பெட்ரோல் காலியானதால் நின்றது. இதனால்சாலையின் ஒரத்தில் பன்னீர் செல்வம் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
அப்போது திருச்சியில் இருந்து கந்தர்வக்கோட்டை நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக பன்னீர் செல்வம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பன்னீர் செல்வம் தன் மகன் கண் எதிரிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கந்தவர்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குமுளூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, விவசாயி. இவரது மனைவி கனகாம்பாள் (வயது 48). மாரிமுத்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றிருந்தார். இதனால் வீட்டில் கனகாம்பாள் (வயது 48) மட்டும் தனியாக இருந்தார். இன்று அதிகாலை மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர்.
பின்னர் தூங்கி கொண்டிருந்த கனகாம்பாளை கழுத்தை அறுத்துள்ளனர். இதனால் அவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். மேலும் ஆத்திரம் தீராத மர்மநபர்கள் அவர் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் கனகாம்பாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காலையில் நீண்ட நேரமாகியும் கனகாம்பாள் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் உடல் கருகிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் கரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. செல்வராஜ், டி.எஸ்.பி. தெட்சிணாமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கனகாம்பாள் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் நகை, பணத்திற்காக கனகாம்பாள் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #TamilNews
புதுக்கோட்டை:
ஊதிய உயர்வு தொடர்பாக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தமிழக அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை,கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று 3-வது நாளாக ஸ்டிரைக் நீடிக்கிறது. இதனால் பெரும்பாலான பஸ்கள் இன்றும் இயக்கப் படவில்லை.
புதுக்கோட்டை மண்டலத்தில் மொத்தம் 9 பணிமனைகள் உள்ளது. இங்கிருந்து 438 பஸ்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 2800 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஸ்டிரைக் காரணமாக 90 சதவீத பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்காலிக டிரைவர்கள் - கண்டக்டர்கள் நியமிக்கப் பட்டதையடுத்து இன்று காலை 25 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. பணி மனைகளில் இருந்து மொத்தம் 80 பஸ்கள் வெளியே சென்றன.
மற்ற பஸ்கள் அனைத்தும் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று மாலைக்குள் இயக்குவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டத்தில் பணிமனைகள் உள்ளது. இதில் அரியலூர் பணிமனையில் உள்ள 96 பஸ்களில் இன்று காலை 17 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. ஜெயங்கொண்டம் பணிமனையில் உள்ள 98 பஸ்களில் 29 பஸ்கள் இயக்கப்பட்டன.
அரியலூர் பணிமனையில் தினமும் ரூ.8 லட்சம் வசூல் ஆகும். ஆனால் நேற்று ரூ. 1.75 மட்டுமே வசூலானது. ஜெயங்கொண்டம் பணிமனையில் தினமும் 9 லட்சம் வசூல் ஆகும் ஆனால் நேற்று ரூ.4.5 லட்சம் மட்டுமே வசூலானது.
கரூர் மாவட்டம் திருமாநிலையூரில் 3 பணி மனைகள் மற்றும் குளித்தலை, அரவக்குறிச்சியில் என மொத்தம் 5 பணிமனைகள் உள்ளது. இந்த பணி மனைகளில் இருந்து 240 பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்று காலை 7 மணி நிலவரப்படி 130 பஸ்கள் இயக்கப்பட்டன. 9 மணி ஆகியதும் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன.
பெரம்பலூர் துறை மங்கலம் பணி மனையில் மொத்தம் 105 பஸ்கள் உள்ள நிலையில் இன்று காலை 15 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
பஸ்கள் இயக்கப்படாததன் காரணமாக புதுக்கோட்டை உள்பட 4 மாவட்டங்களிலும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். #tamilnews






