என் மலர்
நீங்கள் தேடியது "old woman died"
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதில் அவரது இடது கை மற்றும் இடது கால் செயலிழந்ததாக கூறப்படுகிறது.
- இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி பி.கே. வலசு பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் (80) . இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதில் அவரது இடது கை மற்றும் இடது கால் செயலிழந்ததாக கூறப்படுகிறது. வயதான காலத்தில் இப்படியாகி விட்டதே என்று அவர் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் காளிம்மாள் வீட்டில் இருந்த எலி மருந்து (விஷம்) சாப்பிட்டார்.
இதனை கண்ட அவரது மகன் மகேந்திரன் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த காளியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தக்கலை அருகே அரசு பஸ் மோதியதில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
தக்கலை:
தக்கலை அருகே உள்ள கொல்லன்விளை குற்றக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி கஸ்தூரிபாய் (வயது 78). இவர் நேற்று தக்கலை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு மருந்து வாங்கி விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.
கொல்லன்விளை சந்திப்பில் நடந்து சென்றபோது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற அரசு பஸ், எதிர்பாராதவிதமாக கஸ்தூரிபாய் மீது மோதியது. இதில் கஸ்தூரிபாய் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கஸ்தூரி பாயின் மகன் அஜிகுமார் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் அருமனை அருகே உள்ள கடையாலுமூட்டைச் சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 67). வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் வேலை செய்து வந்தார்.
கடந்த 23-ந் தேதி அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி அவரது மோட்டார்சைக்கிள் கவிழ்ந்தது. இதில் கீழே விழுந்த ராஜகோபாலின் தலையில் பலத்த அடிபட்டது. அவர் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து ராஜகோபாலின் மகன் விவேக் கொற்றியோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
காவேரிபாக்கம் அருகே இன்று காலை சாலையை கடக்க முயன்ற மூதாட்டி லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அரக்கோணம்:
காவேரிபாக்கத்தை சேர்ந்தவர் சின்னப்பையன். இவரது மனைவி வெள்ளச்சி (வயது 45). இவர் இன்று அதிகாலை அதே பகுதியில் உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி வெள்ளச்சி மீது மோதியது. இதில் வெள்ளச்சி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த காவேரிபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.