என் மலர்
செய்திகள்

தக்கலை அருகே அரசு பஸ் மோதி மூதாட்டி பலி
தக்கலை அருகே அரசு பஸ் மோதியதில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
தக்கலை:
தக்கலை அருகே உள்ள கொல்லன்விளை குற்றக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி கஸ்தூரிபாய் (வயது 78). இவர் நேற்று தக்கலை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு மருந்து வாங்கி விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.
கொல்லன்விளை சந்திப்பில் நடந்து சென்றபோது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற அரசு பஸ், எதிர்பாராதவிதமாக கஸ்தூரிபாய் மீது மோதியது. இதில் கஸ்தூரிபாய் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கஸ்தூரி பாயின் மகன் அஜிகுமார் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் அருமனை அருகே உள்ள கடையாலுமூட்டைச் சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 67). வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் வேலை செய்து வந்தார்.
கடந்த 23-ந் தேதி அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி அவரது மோட்டார்சைக்கிள் கவிழ்ந்தது. இதில் கீழே விழுந்த ராஜகோபாலின் தலையில் பலத்த அடிபட்டது. அவர் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து ராஜகோபாலின் மகன் விவேக் கொற்றியோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
Next Story