விஷம் குடித்து மூதாட்டி பலி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதில் அவரது இடது கை மற்றும் இடது கால் செயலிழந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விஷம் குடித்து மூதாட்டி பலி
Published on

கொடுமுடி:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி பி.கே. வலசு பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் (80) . இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதில் அவரது இடது கை மற்றும் இடது கால் செயலிழந்ததாக கூறப்படுகிறது. வயதான காலத்தில் இப்படியாகி விட்டதே என்று அவர் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் காளிம்மாள் வீட்டில் இருந்த எலி மருந்து (விஷம்) சாப்பிட்டார்.

இதனை கண்ட அவரது மகன் மகேந்திரன் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த காளியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com