என் மலர்
செய்திகள்

கந்தர்வக்கோட்டையில் கபடி போட்டி வருகிற 5-ந் தேதி நடக்கிறது
கந்தர்வக்கோட்டையில் 5-1-2018 வெள்ளிக்கிழமை இரவு 65 கிலோ எடை பிரிவிற்கான மாபெரும் கபடிப் போட்டி நடைபெறுகிறது.
கந்தர்வக்கோட்டை:
கந்தர்வக்கோட்டையில் 5-1-2018 வெள்ளிக்கிழமை இரவு 65 கிலோ எடை பிரிவிற்கான மாபெரும் கபடிப் போட்டி நடை பெறுகிறது. வெற்றி பெறும் அணிகளுக்கு மொத்த பரிசுத்தொகை ரூ.1லட்சமும், சுழற்கோப்பையும் வழங்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வெள்ளை முனியன் கோவிலில் திடலில் வருகிற வெள்ளிக்கிழமை இரவு 65 கிலோ எடை பிரிவிற்கான செல்லப்பா-முரளி நினைவு கபடிப்போட்டியை கந்தர்வக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் மன்னர் மன்னன் தொடங்கி வைக்கிறார். இறுதி ஆட்டத்தை திரைப்பட நடிகரும் புதுக்கோட்டை ஐஐ.பி.எச்.எஸ். கல்லூரி தாளாளருமான முருகானந்தம் தொடங்கி வைக்கிறார்.
போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக 20,001ம்,மொத்த பரிசுத் தொகையாக 1,00,000-ம் மற்றும் 30,000 மதிப்புள்ள சுழற்கோப்பையும் வழங்கப்படுகிறது. அணி நுழைவுக்கட்டணம் ரூ.300 ஆகும். போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர். #tamilnews
Next Story






