search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private bus accident"

    • பஸ்சின் முன்பக்க மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
    • பஸ் டிரைவரை கைது செய்து விசாரித்ததில் பஸ் டிரைவர் தருமபுரியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகேயுள்ள ஒடசல்பட்டி பத்திரஅள்ளி கிராமத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று காலை திருச்சியில் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் வெல்லும் சனநாயகம் மாநாட்டுக்கு ஒரு தனியார் பஸ்சில் அந்த கட்சியை சேர்ந்த 60 பேர் சென்றனர்.

    அப்போது பொம்மிடி பகுதியில் தருமபுரி சாலையில் உள்ள ரெயில்வே பாலம் அருகே சென்றபோது திடீரென்று பஸ் எதிரே வைக்கோல் பாரம் ஏற்றி லாரி வந்தது. அந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் பஸ்சின் முன்பக்க மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதில் பஸ்சில் பயணித்த கட்சியினர் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து பொம்மிடி போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது மாநாட்டுக்கு செல்லும் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மதுப்போதையில் இருப்பது தெரியவந்தது. எதிரே வந்த லாரி டிரைவர் சாதூர்யமாக செயல்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து பஸ் டிரைவரை கைது செய்து விசாரித்ததில் பஸ் டிரைவர் தருமபுரியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    காயமடைந்தவர்களை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து தனியார் பஸ் நிர்வாகத்தை கண்டித்து பஸ்சில் வந்த விடுதலை கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் தொப்பூர் கணவாய் பகுதில் நடந்த விபத்தில் 4 பேர் இறந்த நிலையில் இன்று பொம்மிடியில் நடந்த விபத்தால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

    சேலம் அருகே கொண்டலாம்பட்டி பட்டர்பிளை பாலத்தில் சாலையோர பள்ளத்தில் தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் பலர் காயம் அடைந்துள்ளதாக தகவல். #SalemBusAccident
    பெங்களூரில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து சாலையோரம்  இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த  பொள்ளாச்சியைச் சேர்ந்த தனசேகர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் 16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்தை 5 கிரேன்களைக் கொண்டு தூக்கும் பணியில் போலீசார் மற்றும்  தீயணைப்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தனியார் பஸ் மீது பள்ளி பஸ் மோதிய விபத்தில் 25 மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது கண்டப்பன் குறிச்சி. இங்கு தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இன்று காலை பள்ளிக்கு சொந்தமான பஸ் ஒன்று கிராம பகுதிகளுக்கு சென்று மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இருந்தனர்.

    இதே நேரத்தில் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து வேப்பூருக்கு தனியார் பஸ் ஒன்று சென்றது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அந்த பஸ் விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் பஸ் நிறுத்தத்தில் நின்றது. பஸ்சில் இருந்து பயணிகள் சிலர் கீழே இறங்கினர்.

    அப்போது அந்த வழியாக பள்ளி மாணவிகளை ஏற்றி வந்த பஸ் அங்கு நின்று கொண்டிருந்த தனியார் பஸ்சின் பின் பகுதியில் மோதியது.

    இதில் மாணவ-மாணவிகள் பயணம் செய்த பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. உள்ளே இருந்த மாணவ-மாணவிகள் கூச்சல்போட்டு அலறினர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்சுக்குள் சிக்கி காயம் அடைந்த மதுமிதா (வயது 11), கவிப்பிரியன் (7), சிவசங்கர் (7), பூங்காஸ்ரீ, வேலமாயி (13), ஏழுமலை (10), புவனேஷ்வரி (13), நித்யா (5), வித்யா (11), கார்முகில் (4), தர்ஷினி (7), கோகுலகிருஷ்ணன் (3), சிவா (3), லோகேஷ் (4), சிவபாலன் (10) உள்பட 25 பேரை மீட்டனர்.

    பின்பு அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் விளாங்காட்டூர் பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    போளூரில் பள்ளி பஸ் மீது தனியார் பஸ் மோதியதில் குழந்தைகள் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.

    போளூர்:

    ஆரணி அடுத்த கஸ்தம் பாடியில் உள்ள தனியார் பள்ளி பஸ், இன்று காலை போளூரில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டிருந்தது.

    அப்போது, திருவண்ணாமலையில் இருந்து வேலூர் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த தனியார் பஸ், பள்ளி பஸ்சின் பின்னால் மோதியது.

    இந்த விபத்தில் பின்பக்க கண்ணாடி உடைந்து பள்ளி பஸ் சேதமடைந்தது. அதேப் போல், தனியார் பஸ் முகப்பு கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியது.

    இந்த விபத்தில் பள்ளிக் குழந்தைகள் 5 பேர் மற்றும் பயணிகள் 15 பேர் என மொத்தம் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பள்ளிக் குழந்தைகள் உயிர் தப்பினர்.

    போளூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், வழக்குப்பதிந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மன்னார்குடி அருகே தனியார் பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் பலியானார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 19). அதே பகுதியைச் சேர்ந்தவர் அபினேஸ் (17). இருவரும் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு இருவரும் வேலை முடிந்து பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ருக்மணி பாளையம் என்ற இடத்தில் பட்டுக்கோட்டையை நோக்கி வந்த ஒரு தனியார் பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த லோகேஸ்வரன் மற்றும் அபினேஸ் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த லோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அபினேஸ் பலத்த காயம் அடைந்தார்.

    இதை பார்த்த அக்கம் பக்கதினர் மன்னார்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அபினேசை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். லோகேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×