என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி அருகே கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு என்ஜின் கடத்தியதாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அறந்தாங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    அறந்தாங்கி:

    கடந்த 2008 ஜூலை 22-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்டுமாவடி பகுதியில் இருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு பயன்படுத்த அதிக பவர் கொண்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான 5 என்ஜீன்கள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடை த்தது.

    அந்த தகவலின் பேரில் அந்த பகுதிக்கு சென்ற க்யூ பிரிவு போலீசார் ஆய்வில் ஈடுபட்ட போது 5 என்ஜீன்களை இலங்கைக்கு கடத்தவுள்ளதை உறுதி செய்து அந்த என்ஜீன்களை பறிமுதல் செய்தனர். மேலும் அதை கடத்த முயன்றவர்களான சென்னை கீழ்பாக்கம் ரெங்க நாதன் மகன் குமரகுருபரன் (வயது 38), கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஜெயசீலன்(45), ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூர் சாமித்துரை(42) ஆகியோர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக கடந்த 10 வருடங்களாக அறந்தாங்கி குற்றவியல் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நேற்று குற்றவியல் மாஜிஸ்திரேட் கலையரசி ரீனா, வழக்கினை விசாரித்து அனைத்து வாதங்களை உறுதி செய்து இதில் ஈடுபட்ட 3 பேர்களுக்கும் 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். #Tamilnews
    புதுக்கோட்டையில் இரு சக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 20 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது அவர்களுக்கு சந்தேகம் வரவே அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சுமார் 20 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபற்றி கேட்டபோது இருவரும் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் கைது செய்தனர்.

    இந்த தங்கம் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. #tamilnews
    புதுக்கோட்டை மாவட்டத்தில் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாளை வரலாறு பேசும் வகையில் சிறப்பாக கொண்டாடுவோம் என அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
    விராலிமலை:

    மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பி.கே. வைரமுத்து தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அம்மாவின் 70-வது பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். தற்போது அம்மா நமக்கு தெய்வமாக இருந்து நம்மை வழிநடத்தும் வேளையில் இந்த ஆண்டு அம்மாவின் 70-வது பிறந்த நாளை புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மிகவும் பிரமாண்டமாக, கோலாகலமாக கொண்டாடி பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்குவதோடு இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும்.

    அம்மா நம்மிடம் நமது ஆட்சி 100 ஆண்டுகள் தொடர வேண்டுமென்றார். அப்படியென்றால் நமது கட்சி, நமது சின்னம், நமது கொடி எல்லாம் ஒன்று தான். அ.தி.மு.க. தான் நமது கட்சி, இரட்டை இலை தான் நமது சின்னம். அதை தொடர வேண்டும் என்று தான் அர்த்தம். நமது கட்சிக்கு ஒரே தலைவர் எம்.ஜி.ஆர்., ஒரே தலைவி அம்மா தான். அவர்களின் ஆசியோடு அ.தி.மு.க. என்ற அகல்விளக்கை அம்மா நம்மிடம் தந்து விட்டுச் சென்றுள்ளார்.

    இந்த அகல்விளக்கு நின்று பிரகாசமாக எரியும், வெளிச்சம் கொடுக்கும். மற்றவர்கள் எல்லாம் வானில் தோன்றி மறையும் மத்தாப்பூ போன்றவர்கள். அதனால் எந்த பயனும் இல்லை. இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக அ.தி.மு.க. உள்ளது.

    அம்மா நமது மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி, காவிரி கூட்டு குடிநீர் திட்டம், நமக்கு கட்சி அலுவலகம் தந்துள்ளார்கள். அண்ணா திமுக தொண்டர்களின் நலனுக்காக எனது உயிரையே கொடுப்பேன். நமது கட்சி அ.தி.மு.க. தான், நமது சின் னம் இரட்டை இலை தான். அதனை தொடர்ந்து பயனித்து 100 ஆண்டுகள் நல்லாட்சியை தந்து அம்மாவின் கனவை நிறைவேற்றுவோம்.

    புதுக்கோட்டை மாவட்டம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை அதை நிரூபிக்கும் வகையில் தொடர்ந்து களப்பணியாற்றுவதோடு அம்மாவின் பிறந்தநாளை வரலாறு பேசும் வகையில் சிறப்பாக கொண்டாடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர்,கிளை கழக நிர்வாகிகள் சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அறுசுவை விருந்து பரிமாரப்பட்டது.முடிவில் நகரச்செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார். #tamilnews
    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் ஏப்ரல் 12-ந்தேதி முதல் மீண்டும் தொடர் போராட்டம் நடைபெறும் என நெடுவாசல் கிராம மக்கள் அறிவித்துள்ளனர். #Neduvasal #HydroCarbon
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெடுவாசல் உள்பட அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதை கண்டித்து நெடுவாசலில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    இதையடுத்து போராட்ட களத்திற்கு சென்ற புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், அங்கிருந்த பொதுமக்களிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று உறுதி கூறியதோடு, அதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ் குழாய் கிணறுகளை 9 மாதத்திற்குள் அகற்றி, நிலத்தை உரிமையாளர்களிடம் ஒப்படைப்போம் என்றும் தெரிவித்தார்.

    ஆனால் ஆழ்குழாய் கிணறுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் நேற்று நெடுவாசலில் பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதற்கு ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு குழு தலைவர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ., மெய்ய நாதன் உள்பட விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


    ஆர்ப்பாட்டத்தில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து வற்புறுத்திய பின்னரும், கடந்த 5-ந்தேதி பாராளுமன்றத்தில் தமிழக அரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் அனுமதியை பெற்ற பின்பே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தியை தொடங்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் மத்திய அரசு இத்திட்டத்தை கைவிடவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

    எனவே தமிழக அரசு நெடுவாசலில் வணிக ரீதியான உற்பத்திக்கு சுரங்க குத்தகை உரிமத்தை வழங்கக்கூடாது. ஏற்கனவே கலெக்டர் கூறியதை போன்று ஆழ்குழாய் கிணறுகளை அகற்றிவிட்டு நிலத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனத்தினர் நில உரிமையாளர்களிடம் செய்துள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

    இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால் வருகிற ஏப்ரல் 12-ந்தேதி முதல் பல்வேறு கிராம மக்களை ஒன்று திரட்டி மீண்டும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #Tamilnews
    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட டி.டி.வி தினகரன் அணியின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சை சாலையிலுள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட டி.டி.வி தினகரன் அணியின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சை சாலையிலுள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் பரணி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். முன்னதாக அனைவரையும் கந்தர்வ கோட்டை ஒன்றிய கழக செயலாளர் எஸ்.ஜி.செங்கொடியான் வரவேற்றார்.

    கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசும் போது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளையும் டிடிவி தினகரன் அணி வெற்றி பெற அனைத்து பொறுப்பாளர்களும் பணியாற்ற வேண்டு மென்றும் உள்ளாட்சி தேர்தல்களில் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன், அறந்தாங்கி நகரச் செயலாளர் சுபா சண்முகம், புதுக்கோட்டை நகரச்செயலாளர் வீரமணி, மாவட்ட துணைச் செயலாளர் குணசேகரன், மாவட்ட பொருளாளர் விடந்தன், கறம்பக்குடி ஒன்றிய செயலாளர் முருகேசன், நகரச்செயலாளர் சதக்கத்துல்லா, அம்மா பேரவை சக்திவேல், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அண்ணாதுரை, சரவணன், எஸ்.ஆர்.முருகேசன், குழந்தைவேல், வீரமணி, மட்டங்கால் பிரவீன், வடிவேல் உள்பட கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, குன்றான்டார் கோயில் ஒன்றியங்களைச்சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவாக சோம நாகராஜன் நன்றியுரையாற்றினார். #tamilnews

    பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.- தோழமை கட்சிகள் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை திலகர் திடலில் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகளின் சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருமயம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரகுபதி தலைமை தாங்கினார். 

    வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார். 

    இதில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, ஆலங்குடி மெய்யநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. கவிதைப்பித்தன், நகர செயலாளர் நைனாமுகமது, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்கள் முருகேசன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி விடுதலை கனல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செங்கோடன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    பஸ் தொழிலாளர்களின் விரோத போக்குடனேயே அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வந்துள்ளது, தற்போதும் செயல்படுகிறது என ஆ.ராசா கூறியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ரகுபதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 1996 முதல் 2001 வரை ஆட்சி நடத்திய தி.மு.க. பஸ் கட்டணத்தை சிறிதும் உயர்த்தவில்லை. அத்துடன் 15 ஆயிரம் புதிய பஸ்களையும் வாங்கினோம். பஸ் தொழிலாளர்களின் போனசும் 20 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

    ஆனால் ஜெலலிதா ஆட்சிக்கு வந்ததும் அந்த போனஸ் தொகையில் 8.3 சதவீதத்தை குறைத்துவிட்டார். தொழிலாளர் விரோத போக்குடனேயே அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வந்துள்ளது. தற்போதும் செயல்படுகிறது.

    நான் கியூபா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளேன். அங்கெல்லாம் அந்த நாட்டு தலைவர்களின் சாதனைகளை அவர்களின் கல்லறை கல்வெட்டுக்களில் எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஜெயலலிதாவின் கல்லறையில் அவரின் சாதனைகளாக எதனை எழுதப் போகிறார்கள் என்று முன் கூட்டியே தெரிவித்தால் நல்லது.

    ஒருவேளை அவர் குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்ததை குறிப்பிடுவார்களா? கொள்ளையடித்து சொத்துக்களை பாதுகாக்கவே சசிகலா குடும்பத்தினரை தன்னுடன் வைத்திருந்தார். இதற்கெல்லாம் முடிவு கட்ட தி.மு.க. விரைவில் ஆட்சிக்கு வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக ஆ.ராசா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறந்ததை எதிர்ப்பவர்கள் ஆண் ஆதிக்க சக்தி மிகுந்தவர்கள். பெண் இனத்திற்கு எதிரானவர்கள் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பெண் என்பதால் என்ன குற்றம் செய்தாலும் பொறுத்துக்கொள்ள வேண்டுமா. அதனை எதிர்ப்பவர்களை பெண் இனத்திற்கு எதிரானவர்கள் என்று கூற முடியுமா. ஆண் ஆதிக்கம், பெண் ஆதிக்கம் குறித்து பெரியார் கூறியதை அவர்கள் படித்து பார்க்க வேண்டும்.

    முரசொலி மாறன் வளரும் நாடுகளுக்காக பாடுபட்டு தோகா மாநாட்டில் தோகா ஒப்பந்ததை பெற்றார். இந்தியாவின் தொழிற் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். அவரையும் ஜெயலலிதாவையம் ஒப்பிட கூடாது.

    2ஜி வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் மன்மோகன் சிங் மீது குற்றச்சாட்டு கூறவில்லை. அமைதியாக இருந்தார்கள் என்று தான் கூறினேன். செய்ய வேண்டிய நேரத்தில் அவர்கள் செய்திருந்தால் இந்த வழக்கே வந்திருக்காது.

    ரஜினி கமல் அரசியலுக்கு வருவது தி.மு.க.விற்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுக்கோட்டை அருகே விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    சென்னை பல்லவாரம், தாம்பரம், பொழிச்சலூர், அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த உறவினர்கள் 15 பேர் நேற்று மாலை ராமேசுவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ஒரு வேனில் சுற்றுலா புறப்பட்டனர்.

    வேனை குரோம்பேட்டை சஞ்சய்காந்தி நகரை சேர்ந்த நித்தியானந்தம் (வயது 22) என்பவர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 5.45 மணியளவில் அந்த வேன் புதுக் கோட்டை மாவட்டம் கட்டியா வயல்-காரைக்குடி சாலையில் அகரப்பட்டியை அடுத்த வெள்ளாற்றுப்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென கட் டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடியது. அதிகாலை நேரம் என்பதால் ஆழ்ந்த தூக்கத்தில் வேனில் இருந்தவர்கள் கண்விழித்து அலறினர். அதற்குள் அந்த வேன் சாலையோர பள்ளத்தில் கலைகுப்புற கவிழ்ந்தது.

    இதில் வேனில் முன் இருக்கையில் அமர்ந்து வந்த பல்லாவரத்தை சேர்ந்த காமராஜ் (60) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்கள் பலத்த காயங்களுடன் தங்களை காப்பாற்றுமாறு கூச்சல் போட்டனர்.

    தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து பலத்த காயம் அடைந்த சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த கோகிலா பிரியா (18) மற்றும் பஞ்சவர்ணம் (70), கார்த்திக் (35), செல்வம் (45), பவித்ரன் (28), விஜயா (45), மாலா (45), சிவகாமி ஆகிய 7 பேரை மீட்டு ஆம்புலன்சு வேன் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கா அனுப்பி வைத்தனர்.

    டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கந்தர்வக்கோட்டையில் வருவாய்த் துறையின் சார்பில் சிறப்பு அம்மா திட்ட முகாம் கந்தர்வக்கோட்டை கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் வருவாய்த் துறையின் சார்பில் சிறப்பு அம்மா திட்டமுகாம் கந்தர்வக்கோட்டை கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு மண்டல துணைவட்டாச்சியர் வரத.ராமசாமி தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர் செந்தில் முன்னிலை வகித்தார். 

    முகாமில் முதியோர் உதவித் தொகை கேட்டு 23 மனுக்களும், வாரிசு சான்று கேட்டு 1 மனுவும், வீட்டு மனைப்பட்டா கேட்டு 2 மனுக்களும், இலவச தையல் இயந்திரம் கேட்டு 1 மனுவும், பட்டா வினை கிராம க்கணக்கில் போக்குவரத்து செய்யக் கோரி 1 மனுவும் பெறப்பட்டது. பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடி க்கை எடுக்க உத்தர விடப்பட்டது. 

    முகாமில் வருவாய் அலுவலர் கலா, கிராம உதவியாளர்கள் செந்தில், துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக கிராம நிர்வாக அலுவலர் த.கருப்பையா நன்றி கூறினார். #tamilnews
    புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூரில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்ற சிவகாசியை சேர்ந்த ஐயப்பன் என்ற வீரர் மாரடைப்பால் உயிரிழந்தார். #Pudhukottai #KabaddiPlayer

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூரில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்ற சிவகாசியை சேர்ந்த ஐயப்பன் என்ற வீரர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூரில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் சிவகாசியை அடுத்த திருத்தங்கல் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்ற கபடி வீரர் கலந்து கொண்டு விளையாடினார். அவர் கபடி விளையாடிவிட்டு தண்ணீர் குடிக்கும் போது திடீர் என மயங்கி விழுந்து உயிரிழந்தார். #Pudhukottai #KabaddiPlayer #tamilnews
    ஜல்லிக்கட்டு போட்டியில் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை உயிரிழந்தது. பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கண்ணீர் மல்க மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். #jallikattu #ministervijayabhaskar

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள திருநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில் தைத்திருவிழாவையொட்டி இன்று ஜல்லிக் கட்டு போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

    போட்டியை மாவட்ட கலெக்டர் கணேஷ் தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி, இலுப்பூர் டி.எஸ்.பி. கோபாலசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போட்டி தொடங்கியதும் வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் கொம்பன் காளை அவிழ்த்து விடப்பட்டபோது, சீறிப் பாய்ந்து சென்று அதே வேகத்தில் அங்குள்ள கம்பத்தில் பயங்கர வேகத்தில் மோதி மயங்கியது.

    இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் காளையை பரிசோதித்த போது அது உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் அமைச்சர் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர் மற்றும் போட்டியை காண வந்திருந்த பொதுமக்கள் சோகமடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து உயிரிழந்த காளை, இலுப்பூர் அருகே ஓலைமான்பட்டியில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கண்ணீர் மல்க மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    உயிரிழந்த கொம்பன் காளையை அமைச்சர் விஜயபாஸ்கர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியை சேர்ந்த ஒருவரிடம் இருந்து வாங்கினார். பொங்கலையொட்டி அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற இந்த காளை, வெற்றி பெற்று பரிசுகளையும் வென்றது. இந் நிலையில் இன்று திடீரென உயிரிழந்து விட்டது. #tamilnews #jallikattu #ministervijayabhaskar

    கீரனூர் கடைவீதியில் சின்ன வெங்காயம் வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெண்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.





    கீரனூர்:

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் விலை ரூ.180 வரை விற்பனையானது. தட்டுப்பாட்டை போக்க வெளிமாநிலங்களிலிருந்தும் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. விமானத்திலும் வெங்காய மூட்டைகள் வந்தது. 
    சின்ன வெங்காயத்தை தொடர்ந்து பல்லாரி என்ற பெரிய வெங்காயம் விலை ஏறியது. இதனால் பெரிய ஓட்டல் முதல் சிறிய கடைகள் வரை வெங்காயம் இல்லாத சாம்பார் வைக்கப்பட்டது. ஆம்லெட் விலையும் ஏறியது. 

    தற்போது சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து இருப்பதால் விலையும் மளமளவென குறைந்து கிலோ ரூ.30-க்கு தள்ளுவண்டியில் கூவி கூவி விற்கப்படுகிறது. விலை குறைவால் பெண்கள் மற்றும் ஏராளமானோர் போட்டி போட்டு  வாங்கி செல்கின்றனர். விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். #tamilnews
    ×