என் மலர்
செய்திகள்

கந்தர்வக்கோட்டையில் டி.டி.வி. தினகரன் அணியின் ஆலோசனை கூட்டம்
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட டி.டி.வி தினகரன் அணியின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சை சாலையிலுள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் பரணி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். முன்னதாக அனைவரையும் கந்தர்வ கோட்டை ஒன்றிய கழக செயலாளர் எஸ்.ஜி.செங்கொடியான் வரவேற்றார்.
கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசும் போது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளையும் டிடிவி தினகரன் அணி வெற்றி பெற அனைத்து பொறுப்பாளர்களும் பணியாற்ற வேண்டு மென்றும் உள்ளாட்சி தேர்தல்களில் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன், அறந்தாங்கி நகரச் செயலாளர் சுபா சண்முகம், புதுக்கோட்டை நகரச்செயலாளர் வீரமணி, மாவட்ட துணைச் செயலாளர் குணசேகரன், மாவட்ட பொருளாளர் விடந்தன், கறம்பக்குடி ஒன்றிய செயலாளர் முருகேசன், நகரச்செயலாளர் சதக்கத்துல்லா, அம்மா பேரவை சக்திவேல், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அண்ணாதுரை, சரவணன், எஸ்.ஆர்.முருகேசன், குழந்தைவேல், வீரமணி, மட்டங்கால் பிரவீன், வடிவேல் உள்பட கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, குன்றான்டார் கோயில் ஒன்றியங்களைச்சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவாக சோம நாகராஜன் நன்றியுரையாற்றினார். #tamilnews






