என் மலர்
செய்திகள்

கீரனூர் கடைவீதியில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30-க்கு விற்பனை
கீரனூர் கடைவீதியில் சின்ன வெங்காயம் வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெண்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.
கீரனூர்:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் விலை ரூ.180 வரை விற்பனையானது. தட்டுப்பாட்டை போக்க வெளிமாநிலங்களிலிருந்தும் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. விமானத்திலும் வெங்காய மூட்டைகள் வந்தது.
சின்ன வெங்காயத்தை தொடர்ந்து பல்லாரி என்ற பெரிய வெங்காயம் விலை ஏறியது. இதனால் பெரிய ஓட்டல் முதல் சிறிய கடைகள் வரை வெங்காயம் இல்லாத சாம்பார் வைக்கப்பட்டது. ஆம்லெட் விலையும் ஏறியது.
தற்போது சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து இருப்பதால் விலையும் மளமளவென குறைந்து கிலோ ரூ.30-க்கு தள்ளுவண்டியில் கூவி கூவி விற்கப்படுகிறது. விலை குறைவால் பெண்கள் மற்றும் ஏராளமானோர் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். #tamilnews
Next Story






