என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பொன்னன்விடுதியில் பிரசித்தி பெற்ற காப்புமுனிக்கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு உள்ள உண்டியலில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் என பலரும் காணிக்கை செலுத்தி செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் கோவில் பூசாரி பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்றார். அப்போது கோவில் முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந் ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மழையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதை யடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் மழையூரில் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அந்த வாலிபர் பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த முருகேசன் (வயது 38) என்பதும், அவர் காப்புமுனிக் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது. எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்ற விவரத்தை போலீசார் கூற மறுத்து விட்டனர். இதையடுத்து முருகேசனை மழையூர் போலீசார் கைது செய்து, ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து நீதிபதி கலைநிலா, முருகேசனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் அழைத்து சென்று புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை:
குட்கா ஊழலை கண்டித்தும், ஊழலில் சிக்கிய அமைச்சர்கள் பதவி விலக வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் கடந்த 18-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. சார்பில் அங்குள்ள திலகர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் அரசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பேசினர்.
இதில் விராலிமலை ஒன்றிய தி.மு.க. செயலாளரும், கடந்த 2016 சட்டமன்ற தேர்த லில் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிட்டவருமான தென்னலூர் பழனியப்பன் மற்றும் அரிமளம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் பொன்.ராமலிங்கம் ஆகியோர் அமைச்சர் விஜயபாஸ்கரை தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசில் அ.தி.மு.க. நிர்வாகி கருப்பையா என்பவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் தென்னலூர் பழனியப்பன், பொன்.ராமலிங்கம் ஆகியோர் மீது அவதூறாக பேசுதல் 294, 323, 301 ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைதொடர்ந்து தென்னலூர் பழனியப்பனையும், பொன்.ராமலிங்கத்தையும் கைது செய்ய தேடினர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் தென்னலூர் பழனியப்பன் வீடு திருச்சி மன்னார்புரம் நடுத்தெருவில் உள்ளது. அவரை கைது செய்ய இன்று அதிகாலை புதுக்கோட்டை போலீசார், போலீஸ் வாகனத்தில் வந்தனர்.
அவரது வீட்டில் பழனியப்பனை தேடினர். ஆனால் அவர் வீட்டில் இல்லை. அவர் வெளியில் சென்றுவிட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து புதுக்கோட்டை போலீசார் அவரது வீட்டின் அருகிலேயே நீண்ட நேரமாக காத்திருந்தனர். இதனால் அப் பகுதியில் இன்று காலை பரபரப்பு நிலவியது. இதேபோன்று அரிமளம் ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஊராட்சி தலைவருமான பொன்.ராமலிங்கத்தையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் இன்று திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டையில் அ.தி. மு.க. சார்பில் கலைவிழா நடந்தது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு நலிந்த நாட்டுப்புற கலைஞர்கள் 116 பேருக்கு விருதுகள் மற்றும் தலா ரூ.5 ஆயிரம் பொற்கிழி வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், என்னை வசைபாடியவர்களின் முகத்திரையை ஒரு வார காலத்திற்குள் கிழித்து எறிவேன். அவர்களின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றுவேன்.

அத்துடன் வருமான வரி உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் அவர் சிக்கி தவிப்பதாகவும், அதிலிருந்து தன்னை காப்பாற்றினால் விசுவாசமாக இருப்பேன் என்று தன்னிடம் கூறியதாகவும் பொதுக்கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஒரு வாரத்தில் புதுக்கோட்டையில் கூட்டம் நடத்தப்போவதாக கூறி டி.டி.வி.தினகரனுக்கு சவால் விடுத்துள்ளார். அந்த கூட்டத்தில் தினகரன் குறித்து பல்வேறு விமர்சனங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. #ADMK #TNMinister #Vijayabaskar #TTVDhinakaran
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு எருதுபட்டியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.க.வுடன் நாங்கள் அரசு ரீதியான உறவு மட்டுமே வைத்துள்ளோம். கூட்டணி என்பது கிடையாது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து இருந்தால் ஜி.எஸ்.டி. முத்தலாக் ஆகிய சட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்க மாட்டோம்.
ஆனால் தி.மு.க.தான் எப்படியாவது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க துடிக்கிறது. அதற்காகத்தான் அமித் ஷாவை அழைத்து வர திட்டமிட்டனர்.
அ.தி.மு.க.வில் கருத்து சுதந்திரம் உள்ளது. நான் பேசுவது என்னுடைய சொந்த கருத்து. அ.தி.மு.க. 2016-ம் ஆண்டு தேர்தலில் தனித்து தான் போட்டியிட்டது, கூட்டணி வைத்து அல்ல. ஜெயலலிதா வழியை தான் பின்பற்றி உள்ளோம். கூட்டணி குறித்து பேசுவதற்கு இது நேரமல்ல.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக எந்த சட்டச்சிக்கலும் இல்லை. ஆகையால் ஆளுனர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார். இதை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம்.
துமிழகத்தில் மின் தட்டுப்பாடு என்பது இல்லை. நிலக்கரியை கையிருப்பு வைப்பதற்கு முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் மக்களவை துணை சபாநாயகர்என்ற முறையில் நானும் மத்திய அரசிடம் பேசியுள்ளேன்.
அ.தி.மு.க. சட்ட விதிகள் திருத்தம் தொடர்பாக ஏற்கனவே தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கி இரட்டை இலை சின்னம், கொடி மற்றும் அ.தி.மு.க. ஆகியவை எங்களிடம் உள்ளது. அந்த நிலை எப்போதும் தொடரும். தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #bjp #admk
புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு பேச்சு மற்றும் கருத்துரிமையை பறித்து வருகிறது. தமிழகத்தில் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியை பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் எடுத்து வருகிறது. நேற்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, புதுக்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் காவல் துறையையும் நீதிமன்றத்தையும் இழிவாக பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. அவர் மீது உடனடியாக காவல் துறை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் மின்சார தட்டுப்பாடே இல்லை என்று கூறுவது நகைப்புக்கு உரியது. நிலக்கரி தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து ஆளுனர் மாளிகையின் கருத்து என்பது அவர்கள் விடுதலையை காலதாமதப்படுத்தும் முயற்சியாகும்.
டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதி வரை இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் பயிர்கள் கருகி வருகிறது. எனவே டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து போதிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பல்வேறு புகார்கள் இருந்தாலும் அவருக்கு கட்சியின் உயர் பதவி அளித்து இருப்பது ஊழல் செய்தால் அவருக்கு பதவி என்ற ரீதியில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அவர் மீது கை வைத்தால் அவர் மற்றவர்கள் தலையில் கை வைத்து விடுவார் என்று தான், அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இறுதி போரின் போது மத்திய அரசு உள்ளிட்ட பல நாடுகள் எங்களுக்கு உதவி செய்தது என்று ராஜபக்சே கூறியிருப்பது அகம்பாவத்தின் உச்சகட்டம். போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும்.
தி.மு.க. ஆட்சியில் பின்பற்றிய டெண்டர் முறை தான் தற்போதும் பின்பற்றபடுகிறது என்றும் மேலும் சிங்கிள் டெண்டர் முறை தி.மு.க. ஆட்சியில் தான் இருந்தது என்றும் அதனால் தி.மு.க. ஆட்சியில் தான் ஊழல் நடந்துள்ளதாக முதல்வர் கூறியிருக்கிறார். அப்படி தி.மு.க. ஆட்சியில் ஊழல் நடந்தது என்றால் ஏன்? இதுநாள் வரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போதைய தமிழக அரசில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது பல்வேறு புகார்கள் உள்ளதால் அவர்கள் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள். இனி ஒரு நொடியும் இந்த ஆட்சி தமிழகத்தில் நீடிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார். #CPI #Mutharasan #PuzhalJail
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு பேச்சு மற்றும் கருத்துரிமையை பறித்து வருகிறது. தமிழகத்தில் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியை பா.ஜ.க. மற்றும் இந்துஅமைப்புகள் எடுத்து வருகிறது. நேற்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, புதுக்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் காவல்துறையையும் நீதிமன்றத்தையும் இழிவாக பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. அவர் மீது உடனடியாக காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் மின்சார தட்டுப்பாடே இல்லை என்று கூறுவது நகைப்புக்கு உரியது. நிலக்கரி தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து ஆளுனர் மாளிகையின் நேற்றைய கருத்து என்பது அவர்கள் விடுதலையை காலதாமதப்படுத்தும் முயற்சியாகும்.
டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதி வரை இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் பயிர்கள் கருகி வருகிறது. எனவே டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து போதிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறைத்துறை அதிகாரிகள் அமைச்சருக்கு நாங்கள் மாதம் ரூ.5லட்சம் வழங்க வேண்டும். ஆகையால் கைதிகளிடம் பணத்தை கொடுத்துவிட்டு உல்லாசமாக இருங்கள் என்று கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து துறைகளிலும் இந்த ஆட்சியில் ஊழல் செய்து வருகின்றனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பல்வேறு புகார்கள் இருந்தாலும் அவருக்கு கட்சியின் உயர் பதவி அளித்து இருப்பது ஊழல் செய்தால் அவருக்கு பதவி என்ற ரீதியில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அவர் மீது கை வைத்தால் அவர் மற்றவர்கள் தலையில் கை வைத்து விடுவார் என்று தான், அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இறுதி போரின் போது மத்திய அரசு உள்ளிட்ட பல நாடுகள் எங்களுக்கு உதவி செய்தது என்று ராஜபக்சே கூறியிருப்பது அகம்பாவத்தின் உச்ச கட்டம். போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும்.
தி.மு.க. ஆட்சியில் பின்பற்றிய டெண்டர் முறை தான் தற்போதும் பின்பற்றபடுகிறது என்றும் மேலும் சிங்கிள் டெண்டர் முறை தி.மு.க. ஆட்சியில் தான் இருந்தது என்றும் அதனால் தி.மு.க. ஆட்சியில் தான் ஊழல் நடந்துள்ளதாக முதல்வர் கூறியிருக்கிறார். அப்படி தி.மு.க. ஆட்சியில் ஊழல் நடந்தது என்றால் ஏன்? இதுநாள் வரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போதைய தமிழக அரசில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது பல்வேறு புகார்கள் உள்ளதால் அவர்கள் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள். இனி ஒரு நொடியும் இந்த ஆட்சி தமிழகத்தில் நீடிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார். #mutharasan #rajapaksa #hraja #ministervijayabaskar
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் குறித்து அவர் கீழ்தரமாக பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.
இந்நிலையில், திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்பட 8 பேர் மீது இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சட்டத்தை மதிக்காதது, இரு தரப்பினருக்கு இடையே மோதலை தூண்டுவது, நீதிமன்றத்தை பற்றி அவதூறாக பேசியது என 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #HRaja






