search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராலிமலையில் இன்று அதிமுக-திமுகவினர் பயங்கர மோதல்- பெட்ரோல் பங்க் மீது கல்வீச்சு
    X

    விராலிமலையில் இன்று அதிமுக-திமுகவினர் பயங்கர மோதல்- பெட்ரோல் பங்க் மீது கல்வீச்சு

    விராலிமலையில் அதிமுக-திமுகவினர் மோதிக் கொண்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். #dmk #gutkha
    விராலிமலை:

    குட்கா ஊழலை கண்டித்தும், ஊழலில் சிக்கிய அமைச்சர்கள் பதவி விலக வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் கடந்த 18-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. சார்பில் அங்குள்ள திலகர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பேசினர். இதில் விராலிமலை ஒன்றிய தி.மு.க. செயலாளரும், கடந்த 2016 சட்டமன்ற தேர்த லில் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிட்டவருமான தென்னலூர் பழனியப்பன் மற்றும் அரிமளம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் பொன்.ராமலிங்கம் ஆகியோர் அமைச்சர் விஜயபாஸ்கரை தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசில் அ.தி.மு.க. நிர்வாகி கருப்பையா என்பவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் தென்னலூர் பழனியப்பன், பொன்.ராமலிங்கம் ஆகியோர் மீது அவதூறாக பேசுதல் 294, 323, 301 ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதைதொடர்ந்து தென்னலூர் பழனியப்பனையும், பொன்.ராமலிங்கத்தையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

    இந்தநிலையில் பொன்ராமலிங்கத்தை கொடைக்கானலில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதனிடையே தி.மு.க. நிர்வாகிகளை கண்டித்து விராலிமலையில் இன்று அ.தி.மு.க.வினர் பேரணி நடத்தினர். அப்போது விராலிமலை மெயின்ரோட்டில் தி.மு.க. நிர்வாகி பழனியப்பனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் அருகே வரும் போது அ.தி.மு.க.வினருக்கும், பழனியப்பனின் ஆதரவாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பெட்ரோல் பங்க்கில் கல்வீசப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். #dmk #gutkha
    Next Story
    ×