என் மலர்
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகேயுள்ள பனங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் (55) விவசாயி. இவர் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று துரைராஜ் மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் மது குடிக்க கூடாது என்று கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த துரைராஜ் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துரைராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஆலங்குடி அருகேயுள்ள பாண்டிக்குடியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அன்புச்செல்வி (27). இவர்களுக்கு குழந்தை இல்லாததால், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், குழந்தை இல்லாததால், மனமுடைந்த அன்புச்செல்வி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். திருமணம் முடிந்து 9 மாதங்களே ஆனதால் ஆர்.டி.ஓ டெய்சிகுமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். #tamilnews
புதுக்கோட்டை எழில் நகரை சேர்ந்தவர் சுகுமார் (வயது 79). ஓய்வு பெற்ற ஆசிரியரான, இவர் தனது 2 மகள்களையும் திருமணம் செய்து கொடுத்து விட்டார். மேலும் சுகுமாரின் மனைவி இறந்து விட்டதால், எழில்நகரில் உள்ள வீட்டில் அவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டுப்போட்டு பூட்டி விட்டு, தூத்துக்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சுகுமார் சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று காலையில் சுகுமாரின் மூத்த மருமகன் மனோஜ் சசிக்குமார், எழில்நகரில் உள்ள தனது மாமனார் சுகுமார் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தப்போது, வீட்டின் ஒரு அறையில் பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தது. மேலும் அதில் இருந்த 17 பவுன்நகைகள் மற்றும் ரூ.4 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து சுகுமாருக்கும், புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசாருக்கும் மனோஜ் சசிக்குமார் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடங்களை சேகரிக்கப்பட்டது.. இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து 17 பவுன் தங்கநகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் எழில்நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் தூய்மை இந்தியா இயக்க திட்டத்தின் கீழ் தூய்மை சேவை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, தூய்மை பணிகளை தொடங்கி வைத்து, அதற்கான உபகரணங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் சுற்றுலாத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியதன் பயனாக இந்தியாவில் சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இத்தகைய சிறப்புமிக்க சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், அனைத்து சுற்றுலா தலங்களும் தொடர்ந்து தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுலா தலங்களில் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சார்பில் தூய்மைப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல், குடுமியான்மலை, நார்த்தாமலை, ஆவுடையார்கோவில், குன்றாண்டார்கோவில், கொடும்பாளூர், திருக்கோகர்ணம், திருமயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புகழ் பெற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. சுற்றுலா தலங்களில் பயணிகள் வருகையை அதிகரிக்கும் வகையில் அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் தூய்மையாக பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுற்றுலா தலங்களுக்கு வரும் பொதுமக்கள் இதன் மூலம் உரிய விழிப்புணர்வு பெற்று சுற்றுலா தலங்களில் தேவையற்ற குப்பைகள் போடுவதை தவிர்த்து தூய்மையாக பராமரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு தூய்மை பணிகளை மேற்கொண்டனர். இதில் மாவட்ட சுற்றுலா அதிகாரி இளங்கோவன், மன்னர் கல்லூரி பேராசிரியர் வேலு, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் பார்த்தீபன் (வயது 52). நேற்றிரவு விராலிமலை சூரியூர் பஞ்சாயத்து வில்லாரோடை கிராமத்தில் உள்ள கோரையாற்றில் மர்மநபர்கள் சிலர் மணல் கடத்துவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் விராலிமலை வருவாய் ஆய்வாளர் முத்துக்காளை, கிராம உதவியாளர்கள் மதி, பாலுச்சாமி, டிரைவர் சரவணன் ஆகியோருடன் காரில் வில்லாரோடை பகுதிக்கு சென்றார். அங்கு சென்று பார்த்த போது மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த யாரும் இல்லை. இதையடுத்து அவர்கள் இன்று அதிகாலை அலுவலகத்திற்கு திரும்பினர்.
விராலிமலை ராஜகிரி குளவாய்ப்பட்டி பகுதியில் வரும் போது திடீரென நிலை தடுமாறிய கார் சாலையோரமுள்ள மரத்தில் மோதியது. இதில் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த தாசில்தார் பார்த்தீபன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். வருவாய் ஆய்வாளர் முத்துக்காளை, கிராம உதவியாளர்கள் மதி, பாலுச்சாமி, டிரைவர் சரவணன் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாசில்தாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரின் முன்பக்க டயர் வெடித்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததா? அல்லது தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கொலை செய்யும் நோக்கில் மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் விரட்டியதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் விபத்துக்கான காரணம் குறித்து முழு விவரம் வெளியாக வாய்ப்புள்ளது.
விபத்தில் பலியான தாசில்தார் பார்த்தீபனுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். புதுக்கோட்டை காந்திநகரில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில் மணல் கடத்தலை தடுக்க சென்ற அவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #PudukkottaiAccident
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சிறுபான்மையினர் நலத்திட்டங்களை செயல்படுத்தக்கூடிய அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனரும், டாம்கோ மேலாண்மை இயக்குனருமான வள்ளலார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-
தமிழக அரசால் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில் தமிழகத்தில் வாழும் பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ள சிறுபான்மையினர் முன்னேற்றம் அடையும் வகையில் பல்வேறு கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. டாம்கோ நிறுவனத்தின் மூலம் பயனாளிகளுக்கு தனிநபர் கடன், கல்விக்கடன், சுயஉதவிக்குழுக்களுக்கான சிறுகடன் உள்ளிட்ட கடன்கள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தாய்கோ வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
டாம்கோ திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2017-18-ம் நிதியாண்டில் 252 பேருக்கு ரூ.84 லட்சத்து 37 ஆயிரம் சுயஉதவிக்குழு கடன்கள் வழங்கப்பட்டு உள்ளது. தனிநபர் கடன்களை பயனாளிகளுக்கு வழங்கும்போது சம்பந்தப்பட்ட தொழிலுக்கு கடன் தொகையை பயனாளி பயன்படுத்துவதை அலுவலர்கள் உறுதி செய்வதுடன், பெறப்பட்ட கடன்தொகையை குறிப்பிட்ட கால அளவிற்குள் பயனாளிகளை திருப்பி செலுத்த செய்ய வேண்டும்.
டாம்கோ திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு மாதமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் விவரம் குறித்து தெரிவிக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் டாம்கோ திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கடன்கள் குறித்து அலுவலர்கள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் தமிழக அரசால் சிறுபான்மையினர் நலனுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை அலுவலர்கள் தகுதியானவர்களுக்கு கொண்டு சேர்க்க முனைப்புடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் மிருணாளினி, ஆவின் பொது மேலாளர் குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி செல்வராஜ், சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் வேளாண்மை கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள வயலோகத்தை சேர்ந்தவர் கனகவேல். இவரது மகன் சேவுகன் (வயது32). இவரது மனைவி தேவி. இவர்களுக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தேவி அவரது தந்தை திட்டியதாக கூறி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட சேவுகன் பலரிடம் மனைவி இறந்தது குறித்து பேசி புலம்பிய வண்ணம் இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 21-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து வீட்டினுள் மயங்கி கிடந்தார்.
தமிழகத்தில் தஞ்சை- மதுரை, சென்னை-சேலம், கரூர்-கோவை உள்ளிட்ட 9 பசுமை வழிச்சாலை திட் டங்களுக்கு ரூ.43 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற் காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் அந்தந்த பகுதிகளில் நடந்து வருகிறது.
சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். விவசாயிகள் வழக்கு தொடர்ந்ததால் பணியை தொடர ஐகோர்ட்டு தடை விதித்தது.
இந்தநிலையில் தஞ்சையில் இருந்து புதுக்கோட்டை வழியாக மதுரைக்கு 4 வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்த அளவீடு செய்யும் பணி சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை-மதுரை இடையேயான 200 கிலோ மீட்டர் தொலைவுள்ள நிலங்களை அளவீடு செய்யும் பணிக்காக 6 குழுக்களில் 50 பேர் இடம் பெற்றுள்ளனர். கந்தர்வக்கோட்டை, ஆதனக்கோட்டை, பெருங்களூர், புதுக்கோட்டை, திருவரங்குளம் பகுதியில் உள்ள நிலங்களில் அளவீடு செய்து கற்களை ஊன்றி அதில் மஞ்சள் வர்ணத்தை பூசி வருகின்றனர். இதையறிந்ததும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலங்களின் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
திருவரங்குளம், பெரிய நாயகிபுரம், தோப்புக் கொல்லை கிராமங்களில் உள்ள விவசாயிகள் பம்பு செட் பாசனம் மூலம் வெண்டை, கத்திரி போன்ற காய்கறிகளை சாகுபடி செய்துள்ளனர். அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் இவர்களுடைய நிலங்களில் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை எதிர்த்து ஏற்கனவே ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ள சமூக ஆர்வலர் பாஸ்கர் கூறுகையில், தற்போது புழக்கத்தில் உள்ள சாலையை 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கு போதுமான இடவசதி உள்ளது. அதை தவிர்த்து விட்டு வேண்டுமென்றே விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பல ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை பெய்யாததால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். தற்போது அவர்கள் நிலத்தையும் இழந்துவிட்டால் வாழமுடியாத நிலை ஏற்படும். எனவே விவசாயிகளுக்கு நியாயமான நீதி கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். #Farmers #Opposition
இலங்கை தமிழர் படுகொலையில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சியினரை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பங்கேற்று பேசியதாவது:-
இலங்கையில் இறுதி கட்ட போரின் போது அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்க அப்போதைய காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி மத்திய அரசு உதவி செய்ததாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். எனவே ஐ.நா. சபை தி.மு.க- காங்கிரஸ் கட்சிகளை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்.
மேலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இருந்தே விலகவேண்டும்.
டி.டி.வி.தினகரன் பணத்தை கொண்டு எதையும் வாங்கி விடலாம் என்று நினைக்கிறார். பணத்தை கொடுத்து தான் கூட்டங்களை கூட்டி வருகிறார். தினகரனுக்கு துணிவு இருந்தால் சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டையில் நின்று பார்க்கட்டும். நானும் நிற்கிறேன். என்னை வென்று காட்டட்டும்.

அ.தி.மு.க.வை விமர்சனம் செய்வதற்கு தகுதி வேண்டும். அது தி.மு.க.விற்கு கிடையாது. தி.மு.க.வோடு நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார். யார் ஆட்சியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று நான் விவாதிக்க தயார். 10 ஆண்டு காலம் பதுங்கு குழியில் இருந்தவர் தான் தினகரன். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க பார்க்கிறார். தினகரன் வைத்துள்ள விஷமே அவருக்கு வினையாக முடியும்.
அ.தி.மு.க.வை எதிர்ப்பவர்கள் தி.மு.க.வாக இருந்தாலும் சரி, தினகரனாக இருந்தாலும் சரி. நெல்லிக்காய் மூட்டையை போன்று சிதறி ஓடி விடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Vijayabaskar #TTVDhinakaran
கீரனூர்:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த ஒடுக்கூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 35). இவர் மீது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட போலீஸ் நிலையங்களில் கொள்ளை உள்பட ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளது.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள குளத்தூரில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கோபால கிருஷ்ணனை கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை விராலிமலை சாலை ஆம்பூர்பட்டி நால்ரோடு பகுதியில் சாலை யோரத்தில் உள்ள மரத்தில் கார் ஒன்று மோதி கிடப்பதாகவும், அதில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாகவும் மாத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்தது கோபாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.
பின்னர் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதை மயக்கத்தில் காரை ஓட்டி சென்றதால் விபத்தில் சிக்கி கோபாலகிருஷ்ணன் இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஜாமீனில் வெளியே வந்த கோபால கிருஷ்ணன் மீண்டும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கீரனூரில் நடந்த கொள்ளை தொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்துள்ளனர்.
நேற்று ஆம்பூர்பட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக கோபாலகிருஷ்ணன் காரில் வரவே அவரை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் போலீஸ் பிடியில் சிக்காமல் காரை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளார். இதையடுத்து போலீசார் தங்களது வாகனத்தில் அவரை விரட்டி சென்றுள்ளனர். ஆம்பூர் பட்டி நால்ரோடு பகுதியில் செல்லும் போது கோபால கிருஷ்ணனின் கார் நிலை தடுமாறி மரத்தில் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது.
அதில் பலத்த காயமடைந்து கோபாலகிருஷ்ணன் இறந்துள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை போலீசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதனால் கோபாலகிருஷ்ணன் இறந்தது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் காருக்குள் ஆண்கள் அணியக்கூடிய ஒரு ஜோடி செருப்பு கிடந்துள்ளது. இதனால் கோபால கிருஷ்ணனுடன் அவரது கூட்டாளி ஒருவரும் வந்துள்ளார். கார் விபத்தில் சிக்கியதும் லேசான காயத்துடன் அவர் அங்கிருந்து தப்பி சென்றிருக்கலாம் என தெரிகிறது. அவர் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர்.
பலியான கோபாலகிருஷ்ணனுக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.மேலும் அவருக்கு ஒடுக்கூரில் மிகப்பெரிய வீடு மற்றும் கட்டிடங்கள் உள்ளது. போலீசாரால் தேடப்பட்டு வந்த கொள்ளையன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரையூர் அருகே உள்ள அரசமலை பகுதியில் இருந்து மணல் கடத்தி செல்லப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் அரசமலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, காரையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல அன்னவாசல் அருகே உள்ள மாங்குடி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அதில் உரிய அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து, அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மிரட்டல் விடுத்ததாக திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் இன்று விராலிமலையில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதேசமயம் திமுகவின் போராட்டத்திற்கு எதிராக அதிமுக சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இரண்டு கட்சிகள் சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் போராட்டம் நடத்துவதற்கு இரு தரப்புக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. #DMK #ADMK






