என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை, விராலிமலையில் இன்று போராட்டம் நடத்த திமுக, அதிமுகவுக்கு தடை
புதுக்கோட்டை மற்றும் விராலிமலையில் இன்று திமுக மற்றும் அதிமுக போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #DMK #ADMK
புதுக்கோட்டை:
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மிரட்டல் விடுத்ததாக திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் இன்று விராலிமலையில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதேசமயம் திமுகவின் போராட்டத்திற்கு எதிராக அதிமுக சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இரண்டு கட்சிகள் சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் போராட்டம் நடத்துவதற்கு இரு தரப்புக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. #DMK #ADMK

Next Story