என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே மனைவி இறந்த துக்கத்தில் இருந்த கணவன் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடியைச்  சேர்ந்தவர் குணபாலன் ( வயது 43). இவருக்கும் இவரது மனைவி ஜெயபாரதி என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஜெயபாரதி கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் எலிமருந்தை சாப்பிட்டு இறந்தார். 

    மனைவி இறந்த துக்கத்தில் குணபாலன் சோகத்துடன் காணப்பட்டு வந்தார். இந்நிலையில், குணபாலன் கடந்த 7-ந்தேதி எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    தமிழகத்தில் உள்ள 42 சுகாதார மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #Vijayabaskar #Swineflu #Dengue
    புதுக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் பலர் பலியாகி உள்ளனர். காய்ச்சல்கள் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.



    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் தாக்கம் காரணமாக தமிழகத்தில் உள்ள 42 சுகாதார மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் செவிலியர்களை நியமித்துக் கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். #Vijayabaskar #Swineflu #Dengue
    புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்ததாவது. புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 09.11.2018 வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

    இம்முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை கல்வித் தகுதிகளையுடைய இளைஞர்கள் பங்கேற்று பயனடைய வேண்டும் என அவர் கூறினார்.
    பொன்னமராவதி அருகே லாரி டிரைவர் அடித்துக் கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொன்னமராவதி, நவ. 7-

    பொன்னமராவதி அருகே லாரி டிரைவர் அடித்துக் கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள திருமயம் முருகாண் டிபட்டி விலக்கு சாலையில் அமைந்துள்ள அம்மனிப் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரையா (வயது 40). திரும ணம் ஆகவில்லை. இவர் அதே பகுதியில் உள்ள கல் குவ ரியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கல் குவாரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டி ருந்தது. இதற்கிடையே குவாரிக்குள் காவலாளி சென்று பார்த்தபோது அங்கு வீரையா கொலை செய்யப் பட்டு பிணமாக கிடந்தார்.

    அருகிலேயே ரத்தக்கறை படிந்த கற்கள் கிடந்தன. எனவே அவரை யாரோ மர்ம நபர்கள் அடித்துக்கொலை செய்திருப்பது உறுதியானது. இதுகுறித்த தகவல் அறிந்த பனையப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீரையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை நடந்த இடத்திற்கு சென்ற துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன் விசாரணை நடத்தினார். திருமணமாகாத அவருக்கு சில பெண்களுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்ப டுகிறது. எனவே அது தொடர் பான பிரச்சினையில் வீரையா கொலை செய்யப் பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தீபாவளி நாளில் லாரி டிரைவர் கொலை செய்யப் பட்டது.அந்த பகுதியில் பரப ரப்பை ஏற்படுத்தியது. * * * குவாரியில் கொலையுண்ட லாரி டிரைவர் வீரையா பிணமாக கிடந்த காட்சி.

    புதுக்கோட்டை மாவட்டம் குரும்பட்டியில் 3 வயது குழந்தை கொலை வழக்கில், பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். #HumanSacrifice
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள குரும்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, கூலித்தொழிலாளி. இவரது மகள் ஷாலினி (வயது 3) கடந்த மாதம் 26-ம் தேதி மாலை விளையாடுவதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் அவள் வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் ஷாலினி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அப்பகுதி கிராம எல்லை காட்டுப் பகுதியில் ஷாலினி இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஷாலினி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தாள்.



    ஷாலினி இறந்து கிடந்த இடம் அருகே பிளேடுகள் கிடந்தன. இதனால் பிளேடால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதன்பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த சின்னப்பிள்ளை என்ற பெண் மந்திரவாதியை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, குழந்தையை  கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். தனக்கு மந்திர சக்தியை அதிகரிக்க சிறுமியை நரபலி கொடுத்ததை கொடுத்ததாக கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி பெண்கள் சிறையில் அடைத்துள்ளனர். #HumanSacrifice
    மணமேல்குடி அருகே கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் டிரைவர் படுகாயமடைந்தார்.
    மணமேல்குடி:

    தூத்துக்குடியிலிருந்து, காரைக்காலுக்கு கிரானைட் கல் ஏற்றிக்கொண்டு நேற்று கன்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை முரளிதரன் என்பவர் ஓட்டி வந்தார். அந்த லாரி மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து கொண்டிருந்தது.

    அப்போது காரக்கோட்டை பாலம் அருகே வளைவில் திரும்பும்போது, குறுக்கே மாடு ஒன்று சென்றது. இதனால் மாடு மீது லாரி மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பிரேக் பிடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் லாரியின் இடிபாடுகளில் சிக்கி, டிரைவர் முரளிதரன் படுகாயமடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் மணமேல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லாரியின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த முரளிதரனை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்திற்குள்ளான லாரியில் இருந்த கிரானைட் கற்கள் அனைத்தும் மாற்று லாரி மூலம் காரைக் காலுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    இந்த விபத்து குறித்து மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    ஆலங்குடி அருகே கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவியை மீட்ட போலீசார் பெற்றோருக்கும், மாணவிக்கும் அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.
    ஆலங்குடி:

     தஞ்சை மாவட்டம், ஆவணத்தை சேர்ந்த முத்துக்கருப்பன் மகள் கவுதமி (வயது 18). இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். நேற்று கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர், தன்னை மர்ம நபர்கள் கடத்தி சென்று விட்டதாகவும், ரூ.5 லட்சம் பணம் கொடுத்தால்தான் விடுவார்கள் என்றும் கூறியதாக அவரது தந்தைக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். 

    இதனால் அதிர்ச்சி யடைந்த அவரது பெற்றோர் ஆலங்குடி போலீசில் புகார் செய்தனர். டி.எஸ்.பி. அய்யனார் தலைமை யிலான போலீசார் விசாரணை நடத்தி, மர்மநபர்களிடம் இருந்து கவுதமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கவுதமி மீண்டும் அவரது பெற்றோருக்கு போன் செய்தார். அப்போது, தன்னை கடத்திச்சென்ற மர்ம நபர் கீரனூர் அருகே உள்ள களமாவூரில் இறக்கி விட்டு சென்று விட்டதாகவும், தன்னை வந்து கூட்டி செல்லுமாறும் கூறியுள்ளார். 

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று கவுதமியை மீட்டனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், கவுதமிக்கு கல்லூரிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் இருந்ததும், மனநலத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. இதனால் தான் கடத்தப்பட்டதாக நாடகமாடி ரூ.5 லட்சம் கேட்டதாக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கவுதமிக்கும், அவரது பெற்றோருக்கும் போலீசார் அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை, ஆதனக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லேசான தூரலுடன் மழை பெய்து வருகிறது.
    அறந்தாங்கி:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங் களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பகல் வரை இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. அதன்பிறகு மழை பெய்யாமல் வானம் மேகமூட்டத்துடன் மட்டும் காணப்பட்டது. இன்று காலை முதல் திருச்சி மாவட்டத்தில் வெயில் அடித்து வருகிறது. இதேபோல் கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ங்களிலும் இன்று காலை முதல் வெயில் அடித்து வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று பகல் வரை பெய்தது. அதன்பிறகு மழை பெய்ய வில்லை. இந்தநிலையில் இன்று காலை முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்திற்குட்பட்ட அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை, ஆதனக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லேசான தூரலுடன் மழை பெய்து வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதி மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடித்து வருகின்றனர். மழை அதிகம் பெய்யும் நேரங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படும். நேற்று வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்தநிலையில் இன்று மழை பெய்த போதிலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.


    திருவரங்குளம் மேற்கு ஒன்றியம் தி.மு.க. சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    ஆலங்குடி:

    திருவரங்குளம் மேற்கு ஒன்றியம் தி.மு.க. சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆலங்குடிசட்ட மன்ற உறுப்பினர் சிவ மெய்ய நாதன் தலைமை வகித்தார்.

    மேற்கு ஒன்றியச் செய லாளர் தங்கமணி, நகரச் செயலாளர் பழனிகுமார், ஒன்றிய விவசாய அணி செய லாளர் விஜயன், கவுன்சிலர் மூர்த்தி, கருணாஸ், ஒன்றிய பிரதிநிதி அருளாந்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரணி சந்தைபேட்டையில் உள்ள தி.மு.க அலுவலகத்திலிருந்து புறப் பட்டு கலைஞர் சாலை, திருவள்ளுவர் சாலை, காந்தி சாலை வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது. முன்னதாக கட்சி அலுவல கம், வடகாடு முக்கம் பஸ் நிறுத்தம், அரச மரம் பஸ் நிறுத்தம், காமராஜ் சிலை, பேருந்து நிலையம், ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்திருந்த நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை எம்.எல்.ஏ. சிவமெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் டெங்கு ஒழிப்பு பற்றிய வாசகங்கள் அடங்கிய துண்டுச்பிரசுரங் கள் வழங்கியும், இலவச நிலவேம்பு கசாயம் வழங்கியும், முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான தி.மு.க கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
    தமிழக அரசுக்கு வழங்கவேண்டிய ரூ.18 ஆயிரம் கோடி நிதியை உடனே மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார். #ADMK #ThambiDurai
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை திறந்து இருப்பது வரவேற்கத்தக்கது.

    மத்திய அரசிடமிருந்து தமிழக அரசிற்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி வரவேண்டும் அதை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு திட்டங்களாக இருந்தாலும் அதை மாநில அரசு தான் செயல்படுத்த வேண்டும்.

    எல்லாத் திட்டங்களும் மத்திய அரசு திட்டங்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளைத்தான் நான் மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறுகிறேன்.


    இதேபோன்று தமிழக அரசு குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் என்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் தான் சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

    எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. சந்திக்க தயாராக உள்ளது. அதற்காகத்தான் தொகுதி பொறுப்பாளர்களை அ.தி.மு.க. நியமித்துள்ளது. தற்போது நாங்கள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டமான கிராமங்களை தத்தெடுக்கும் திட்டத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் நிதி ரூ.5 கோடியில் இருந்து தான் நான் கிராமங்களை தத்து எடுப்பதற்கு நிதி ஒதுக்கி வருகிறேன்.

    கிராமங்களை தத்தெடுக்கும் திட்டத்திற்கு உடனடியாக மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai
    வன்னியன்விடுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதியில் உள்ள மின்மாற்றிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீரென பழுதானது. இதனால் இப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யபடவில்லை. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வன்னியன்விடுதி பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் ஆலங்குடி-அறந்தாங்கி சாலையில் அமர்ந்து குடிநீர் கேட்டும், பழுதான மின்மாற்றிகளை சரிசெய்யகோரியும் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஜானகிராமன், ஆலங்குடி மேற்கு மின்வாரிய பொறியாளர் ஞானசேகரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் மின்மாற்றிகளை சரிசெய்து, குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    ஆலங்குடியில் சீரான குடிநீர் வழங்ககோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஆலங்குடி:

    ஆலங்குடி வன்னியன் விடுதி அருகே வன்னியன் விடுதிதெரு, தொண்டைமான் குடியிருப்பு, மற்றும் காட்டுப்பகுதியில் 3 மின்சார டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. இவைகளிலிருந்து பொது குடிநீர் திட்டத்திற்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தொண்டைமான் குடியிருப்பில் உள்ள மின் மாற்றி பழுதானது. இதனால் மின்சாரம் இல்லாமல கிராம மக்கள் குடிநீருக்காக அவதிப்படும் நிலை ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த வன்னியன் விடுதி பொதுமக்கள் மின்சாரடிரான்ஸ் பார்மரை பழுது நீக்கி தராமல் புதிய மின்டிரான்ஸ் பார்மர்களை அமைத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆலங்குடி- அறந் தாங்கி சாலையில் திடீர் சாலை மறியல் செய்தனர். மேலும் அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறை பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குடிபோலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்திய நாதன், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஜானகிராமன்,மற்றும் ஆலங் குடி மேற்கு மின் வாரிய பொறியாளர் ஞானசேகரன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர்.

    2 நாட்களில் புதிய மின் டிரான்ஸ்பார்மர் அமைத்து சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி கூறினர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ×