என் மலர்
நீலகிரி
- வக்பு திருத்த மசோதாவை எதிர்த்து ஆ.ராசா பெயரில் நாளை வழக்கு.
- நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையை பெரிய அளவில் இழக்க நேரிடும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, ரூ.727 கோடியில் 56 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15,634 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-
நாங்கள் உழைப்பது, இந்தியா முழுமைக்கும் சமூக நீதி மாநில சுயாட்சி, கூட்டாட்சி மத நல்லிணக்கம் ஆகிய உயர்ந்த கருத்துக்களை வென்றெடுக்கத்தான். அதனால் தான் நம் கழக எம்.பி.க்கள் எல்லோரும் மக்களவையில் மாநிலங்க ளவையில் எடுத்து வைக்க கூடிய வாதங்கள் இந்தியா வையே காப்பாற்றக் கூடிய அளவுக்கு அமைந்து உள்ளது. இதைப் பார்த்து இப்போது என்ன செய்கிறார்கள்?
தமிழ்நாட்டின் நாடாளு மன்ற எண்ணிக்கையை குறைக்க சதி செய்கி றார்கள். தொகுதி மறுசீர மைப்பு என்ற பெயரில் மிகப் பெரிய சதி நடக்க இருப்பதை முதன் முதலில் உணர்ந்து மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்த மாநிலம் தான் நம்முடைய தமிழ்நாடு.

வர இருக்கக் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்ப டையில் மேற்கொள்ளப்படும் தொகுதி மறுசீரமைப்பு நம்மை போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கப்போகுது.
மக்கள் தொகையை பல்வேறு பல திட்டங்கள் மூலமாக கட்டுப்படுத்திய நம்மைப் போன்ற மாநிலங்கள் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையை பெரிய அளவில் இழக்க நேரிடும்.
இதைப்போல தென் மாநிலங்களும் தொகுதி எண்ணிக்கையை இழப்பார்கள். உடனே இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினேன்.
அந்த கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவின்படி இது போல பாதிக்கப்படும் மாநிலங்களை இணைத்து சென்னையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. 7 மாநிலங்களை சார்ந்த 22 கட்சிகள் அதில் கலந்து கொண் டார்கள்.
அந்த கூட்ட முடிவின்படி அகில இந்திய அளவிலான கூட்டு நடவடிக்கை குழுவை அமைத்து உள்ளோம்.
அந்த குழுவின் சார்பில் பிரதமர் மோடியை சந்திக்க தேதி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளோம். பிரதமர் விரைவில் நேரம் ஒதுக்குவார் என்ற நம்பிக்கையோடு நாங்கள் இருக்கிறோம். இன்னும் சில மணி நேரத்தில் தமிழ்நாட்டுக்கு, ராமேசுவரத்துக்கு பிரதமர் வர இருக்கிறார்.
நீலகிரி விழாவில் கலந்து கொள்வதால் ராமேசுவரம் விழாவில் என்னால் பங் கேற்க முடியாத நிலைமை. இந்த சூழ்நிலையை அவருக்கு நான் தெரிவித்து விட்டேன். அந்த விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் பங்கேற்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியின் மூல மாக உங்கள் மூலமாக தமிழ்நாட்டுக்கு வரும் மோடியை, நான் கேட்க விரும்புவது, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நியாயமான அச்சத்தை நீங்கள் போக்க வேண்டும்.
தென்மாநிலங்கள் உள் ளிட்ட மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் தொகுதி விழுக்காடு குறையாது என்ற உறுதி மொழியை தமிழ்நாட்டு மண்ணில் நின்று நீங்கள் வழங்க வேண்டும்.
அதற்கான அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்திலும் நிறைவேற்ற வேண்டும். இது ஏதோ தொகுதி எண்ணிக்கையை பற்றிய கவலை மட்டுமல்ல, நம் அதிகாரம், உரிமைகள் மற்றும் எதிர்காலம் பற்றிய கவலை.
இந்த எண்ணிக்கையும் குறைந்தால் தமிழ்நாட் டையும் நசுக்கி விடுவார்கள். அதனால்தான் நம் வலிமையை குறைக்க பா.ஜ.க. துடிக்கிறது.
வக்பு வாரிய திருத்த சட்டத்தை நள்ளிரவு 2 மணிக்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றியதை பார்த்திருப்பீர்கள். தொடக்கம் முதல் தமிழ்நாடு அரசும் தி.மு.க.வும் கடுமையாக எதிர்த்தோம். வக்பு திருத்த சட்டம் ஜனநாயகத்துக்கு விரோத மான முறையில் நிறை வேற்றப்பட்டு உள்ளது.
இதில் அ.தி.மு.க. உறுப்பினர் தம்பித்துரை 1 நிமிடம்தான் பேசினார். ஆனால் நாங்கள் சட்ட மன்றத்தில் கறுப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்தோம். தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்துள்ளேன்.
நாளை துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பெயரில் வழக்கு தொடுக்கப் படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இந்தியாவில் தமிழகம் மட்டும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.
- பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
ஊட்டி:
நீலகிரியில் இன்று 2-வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டார். ரூ.353 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மருத்துவ ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதையடுத்து அரசு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* உங்களுக்கு நன்மை செய்வதில் முதலாவது நபராக இருப்பவர்கள் நாங்கள் தான்.
* 2019-ம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்டபோது 2 நாட்கள் நான் இங்கேயே தங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக இருந்தேன்.
* அன்றைய ஆட்சியாளர்கள் தூக்கத்தில் இருந்தபோது அவர்களை எழுப்பி நீலகிரிக்கு வர வைத்தது தி.மு.க.
* இந்தியாவில் தமிழகம் மட்டும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.
* பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் என மத்திய அரசே கூறி உள்ளது.
* தனித்துவமும் தலைமைத்துவமும் தான் திராவிட மாடல், அதனால் தான் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதன்மையில் உள்ளது.
* உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்
* உதகை மருத்துவக்கல்லூரி கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டாலும் எந்த பணிகளும் நடக்கவில்லை.
* வாகனங்கள் செல்லாத இடங்களில் கூட மக்களை தேடி மருத்துவம் திட்டம் சென்றுள்ளது.
* வனவிலங்கு தாக்கி உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது.
* குன்னூர், கோத்தகிரியில் அதிநவீன வசதிகளுடன் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
* அழிவின் நிலையில் இருந்த வரையாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நிதி ஒதுக்கப்பட்டது.
* இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக நீலகிரியில் மினி டைடல் பார்க் வர உள்ளது.
* நீலகிரி மாவட்டம் கூடலூரில் 300 வீடுகள் கொண்ட கலைஞர் நகர் அமைக்கப்படும்.
* பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
* பழங்குடியின மக்களுக்கு 1,000 கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.
- வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஆ.ராசா பெயரில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.
இதனிடையே வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நீலகிரியில் மக்களிடையே உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பெயரில் நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்" என்று தெரிவித்தார்.
- நீலகிரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டார்.
- இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நிச்சயமாக நீட் விலக்கு கிடைத்திருக்கும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்றும் நீலகிரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டார்.
இன்று 2-வது நாளாக நீலகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பணியை தொடர்ந்தார். ரூ.353 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மருத்துவ ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளே சென்று, அதனை பார்வையிட்டார்.
இதையடுத்து அரசு விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்"பாஜக கூட்டணிக்கு செல்லும் முன், நீட் தேர்வு விலக்கு தந்தால்தான் கூட்டணி என்று வெளிப்படையாக அறிவிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா?
ராகுல்காந்தி மூலமாக, இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு அளிக்கப்படும் என நாங்கள் சொல்ல வைத்தோம். ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நிச்சயமாக நீட் விலக்கு கிடைத்திருக்கும்" என்று தெரிவித்தார்.
- உதகையில் உள்ளவர்களை பார்த்தார் கொஞ்சம் பொறாமையாக தான் உள்ளது.
- கூடலூர் பகுதியில் 10,000 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
ஊட்டி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்றும் நீலகிரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டார்.
இன்று 2-வது நாளாக நீலகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பணியை தொடர்ந்தார். ரூ.353 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மருத்துவ ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்டார்.
இதையடுத்து அரசு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* மலைகளின் அரசியான உதகைக்கு வந்து இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
* திரும்பிய பக்கமெல்லாம் இயற்கை எழில் சூழ்ந்தது உதகை.
* கொளுத்தும் கோடை வெயிலுக்கு இதமாக ஊட்டியில் அரசு விழாவில் பங்கேற்கிறேன்.
* உதகையில் உள்ளவர்களை பார்த்தார் கொஞ்சம் பொறாமையாக தான் உள்ளது.
* நீலகிரியின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது தி.மு.க.
* தி.மு.க. ஆட்சியில் நீலகிரியின் வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* தி.மு.க. ஆட்சியில் தான் உதகை ஏரி புதுப்பிப்பு, சுற்றுலா மாளிகை, படுகர் நலச்சங்க கட்டடம், முதுமலை சரணாலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
* இந்தியாவே திரும்பி பார்க்கும் அறிவு சார்ந்த பாராளுமன்ற வாதி ஆ.ராசா
* நீலகிரி மக்களின் நெஞ்சுக்கு நெருக்கமானவராக இருக்கிறார் ஆ.ராசா.
* கூடலூர் பகுதியில் 10,000 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
* நான் உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோது நீலகிரிக்கு 3-வது குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
- இன்று 2-வது நாளாக நீலகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பணியை தொடர்ந்தார்.
ஊட்டி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
நேற்றும், இன்றும் அவர் நீலகிரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டார். கோத்தகிரி சாலையில் குஞ்சப்பனை அருகே மண்சரிவை தடுக்கும் வகையில், நடந்து வரும் மண் ஆணி அமைக்கும் பணியை நேற்று நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மேலும் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்திலும் பங்கேற்று பேசினார். இரவு ஊட்டி விருந்தினர் மாளிகையில் அவர் ஓய்வெடுத்தார்.
இன்று 2-வது நாளாக நீலகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பணியை தொடர்ந்தார். ரூ.353 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மருத்துவ ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளே சென்று, அதனை பார்வையிட்டார்.
- நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 52 பேர் பங்கேற்றனர்.
- நீலகிரியில் உள்ள 3 தொகுதிகளையும் வென்றேடுப்போம்.
ஊட்டி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திற்கு கள ஆய்வுக்கு செல்லும் போதும், அந்த பகுதியை சேர்ந்த மாவட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் நேற்று நீலகிரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தி.மு.க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 52 பேர் பங்கேற்றனர். ஆலோசனையின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரவிருக்கும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாக வேண்டும். இப்போது இருந்தே தேர்தலுக்கான வேலைகளை தொடங்க வேண்டும் என கூறினார்.
2026-ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் நாம் தான் வெல்வோம். நீலகிரியில் உள்ள 3 தொகுதிகளையும் வென்றேடுப்போம். அதற்கான பணிகளை நீங்கள் இப்போதே செய்திட வேண்டும்.
நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகளும் அதற்கான பணியை சிறப்பாக செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டம், மகளிருக்கு இலவச பஸ் பயண திட்டம், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை திட்டம் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த திட்டங்கள் பற்றி மக்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் எடுத்து கூறி தேர்தல் பணியாற்ற வேண்டும். மாவட்டத்தில் நிர்வாகிகள் மேற்கொள்ளும் பணிகளை அவ்வப்போது தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சாமிநாதன், மா.சுப்பிரமணியன், ஆ.ராசா எம்.பி., அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- கார் மூலமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பிளாக் தண்டருக்கு சென்றார்.
- நீலகிரிக்கு சென்றுள்ள முதலமைச்சருக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று நீலகிரி மாவட்டத்திற்கு கள ஆய்வுக்காக சென்றுள்ளார்.
இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு கோவை விமான நிலையம் சென்றடைந்தார்.
அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கார் மூலமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பிளாக் தண்டருக்கு சென்றார்.
அங்கு அவர் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுத்துவிட்டு, மாலை 5 மணிக்கு பிளாக்தண்டரில் இருந்து கார் மூலமாக நீலகிரிக்கு சென்றார்.
நீலகிரிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில் 3 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் உள்ள குஞ்சப்பனை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டிருந்த பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
- தி.மு.க சார்பில் 3 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கிறார்.
ஊட்டி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 5-ந்தேதி மற்றும் 6-ந்தேதி என 2 நாட்கள் நீலகிரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
இதற்காக அவர் வருகிற 5-ந்தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கார் மூலமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பிளாக் தண்டருக்கு செல்கிறார்.
அங்கு அவர் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுக்கிறார். மாலை 5 மணிக்கு பிளாக்தண்டரில் இருந்து கார் மூலமாக நீலகிரிக்கு புறப்படுகிறார்.
நீலகிரிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில் 3 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
கோத்தகிரி கஞ்சப்பனை, கட்டபெட்டு, ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் தி.மு.க.வினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு அளிக்க உள்ளனர்.
பின்னர் இரவு 7 மணிக்கு ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் வென்றெடுக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என கட்சியினருக்கு, நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்.
மறுநாள் 6-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஊட்டி விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு காலை 10 மணிக்கு ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதிக்கு காரில் செல்கிறார்.
அங்கு 143.69 கோடி செலவில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.
அதனை தொடர்ந்து கார் மூலமாக ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்திற்கு வருகிறார்.
அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேரூரையாற்ற உள்ளார். நீலகிரி நிகழ்ச்சியை முடித்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலையில் கோவை வருகிறார்.
பெருந்துறையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடந்த விழாவில் ஒரே நேரத்தில் 16 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்று, வள்ளி கும்மி நடனமாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
கின்னஸ் சாதனை படைத்த 16 ஆயிரம் கலைஞர்களுக்கும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கோவை கொடிசியா மைதானத்தில் பாராட்டு விழா நடக்கிறது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார். அங்கு 10 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்கும் வள்ளி கும்மி நடனத்தையும் அவர் பார்வையிடுகிறார்.
பின்னர் நீலகிரி, கோவை நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார்.
- கூடுதல் ஊழியர்கள் இல்லாததால், இ-பாஸ் சோதனை செய்வதில் சிரமம் ஏற்பட்டது.
- இ-பாஸ் பதிவு செய்யாமல் வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களை, ஊட்டிக்கு செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர்.
ஊட்டி:
மலைகளின் அரசியான ஊட்டிக்கு சாதாரண நாட்களில் வரும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும். அதுவும் கோடை விடுமுறை சீசனில் கட்டுக்கடங்காமல் இருக்கும்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், நீலகிரிக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, கடந்த ஆண்டு மே மாதம் 7-ந்தேதி முதல் நீலகிரிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வருகிறது.
தற்போது கோடை சீசன் தொடங்க உள்ளதால், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரநாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டது.
இந்த கட்டுப்பாடு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லாறு மற்றும் கோத்தகிரி வழியாக ஊட்டி செல்லும் வாகனங்களை இ-பாஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என கல்லாறு, குஞ்சப்பனை சோதனை சாவடிகளில் போலீசாரும், வருவாய்த்துறையினரும் சோதனை செய்கிறார்கள். இதன் பின்னரே மேற்கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல் கேரள, கர்நாடக மாநிலங்களின் எல்லையில் உள்ள கூடலூர் நாடுகாணி, சோலாடி, தாளூர், பாட்டவயல், நம்பியார் குன்னு, கக்கநல்லா ஆகிய சோதனை சாவடிகளிலும் சுற்றுலா வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது.
இ-பாஸ் பதிவு செய்யாமல் வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களை, ஊட்டிக்கு செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர்.
இந்நிலையில் 'இ-பாஸ்' முறையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள். இ-பாஸ் நடைமுறையை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 24 மணி நேர கடையடைப்பு உள்பட பொது வேலைநிறுத்தம் இன்று நடைபெறுகிறது.
- நீங்களும் பொட்டு வைத்து, கயிறு கட்டுகிறீர்கள். சங்கிகளும் இதைத்தான் செய்கிறார்கள்.
- யார் சங்கி, யார் திமுக-காரன் என வித்தியாசம் தெரியாமல் போய்விடும்.
நீலகிரி மாவட்டம் உதகையில் மாநில மாணவரணி கருத்தரங்கில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ. ராசா பேசும்போது கூறியதாவது:-
* கடவுளை வணங்க வேண்டாம் என கூறவில்லை. கடவுள் மீது எந்த கோபமும் இல்லை.
* நெற்றியில் பொட்டு வைப்பதும், கைகளில் கயிறு கட்டுவதும் சங்கிகளின் அடையாளம்.
* கரை வேட்டி கட்டிக்கொண்டு பொட்டு வைக்க வேண்டாம்.
* கரைவேட்டி கட்டிவிட்டால் நெற்றிப்பொட்டை அழித்துவிட்டு வெளியே வந்துவிட வேண்டும்.
* நீங்களும் பொட்டு வைத்து, கயிறு கட்டுகிறீர்கள். சங்கிகளும் இதைத்தான் செய்கிறார்கள்.
* யார் சங்கி, யார் திமுக-காரன் என வித்தியாசம் தெரியாமல் போய்விடும்.
* கொள்கை இல்லாமல் போனால் அந்த கட்சி அழிந்து போய் விடும்.
* அப்படி அழிந்து கொண்டிருக்கும் ஒரு கட்சிதான் அதிமுக.
இவ்வாறு ஆ. ராசா பேசினார்.
- கோடை சீசனை வரவேற்க நீலகிரி மாவட்டம் ஊட்டி தயாராகி வருகிறது.
- தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான 7 பூங்காக்களில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊட்டி:
கோடை சீசனை வரவேற்க நீலகிரி மாவட்டம் ஊட்டி தயாராகி வருகிறது. சீசனை அனுபவிக்க ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் மலர் கண்காட்சி, காய், கனி கண்காட்சி, ரோஜா கண்காட்சி என பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா என பூங்காக்களில் இந்த கண்காட்சிகள் நடைபெற உள்ளன. கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தொடங்கி நடப்பதால் பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பு நடத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் 5-ந் தேதி வரை இந்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான 7 பூங்காக்களில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






