என் மலர்
நீங்கள் தேடியது "தி.மு.க ஆலோசனை கூட்டம்"
- நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 52 பேர் பங்கேற்றனர்.
- நீலகிரியில் உள்ள 3 தொகுதிகளையும் வென்றேடுப்போம்.
ஊட்டி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திற்கு கள ஆய்வுக்கு செல்லும் போதும், அந்த பகுதியை சேர்ந்த மாவட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் நேற்று நீலகிரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தி.மு.க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 52 பேர் பங்கேற்றனர். ஆலோசனையின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரவிருக்கும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாக வேண்டும். இப்போது இருந்தே தேர்தலுக்கான வேலைகளை தொடங்க வேண்டும் என கூறினார்.
2026-ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் நாம் தான் வெல்வோம். நீலகிரியில் உள்ள 3 தொகுதிகளையும் வென்றேடுப்போம். அதற்கான பணிகளை நீங்கள் இப்போதே செய்திட வேண்டும்.
நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகளும் அதற்கான பணியை சிறப்பாக செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டம், மகளிருக்கு இலவச பஸ் பயண திட்டம், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை திட்டம் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த திட்டங்கள் பற்றி மக்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் எடுத்து கூறி தேர்தல் பணியாற்ற வேண்டும். மாவட்டத்தில் நிர்வாகிகள் மேற்கொள்ளும் பணிகளை அவ்வப்போது தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சாமிநாதன், மா.சுப்பிரமணியன், ஆ.ராசா எம்.பி., அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆலோசனை நடைபெற்றது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி எம்.எல்.ஏவுமான செந்தில்குமார் தலைமை தாங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிலால் உசேன் மற்றும் உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கல்லூரிகளில் அமைப்பு ஏற்படுத்தல், திராவிட பயிற்சி பாசறை நடத்துதல், மண்டல அளவிலான கருத்தரங்கம் நடத்துதல், இளைஞர் அணி, மாணவர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி வளர்ச்சி குறித்த ஆலோசனை நடைபெற்றது.






