என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் தி.மு.க ஆலோசனை கூட்டம்
    X

    கூட்டத்தில் செந்தில்குமார் எம்.எல்.ஏ பேசினார்.

    திண்டுக்கல்லில் தி.மு.க ஆலோசனை கூட்டம்

    • திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆலோசனை நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி எம்.எல்.ஏவுமான செந்தில்குமார் தலைமை தாங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிலால் உசேன் மற்றும் உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கல்லூரிகளில் அமைப்பு ஏற்படுத்தல், திராவிட பயிற்சி பாசறை நடத்துதல், மண்டல அளவிலான கருத்தரங்கம் நடத்துதல், இளைஞர் அணி, மாணவர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி வளர்ச்சி குறித்த ஆலோசனை நடைபெற்றது.

    Next Story
    ×