என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
- முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
- இன்று 2-வது நாளாக நீலகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பணியை தொடர்ந்தார்.
ஊட்டி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
நேற்றும், இன்றும் அவர் நீலகிரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டார். கோத்தகிரி சாலையில் குஞ்சப்பனை அருகே மண்சரிவை தடுக்கும் வகையில், நடந்து வரும் மண் ஆணி அமைக்கும் பணியை நேற்று நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மேலும் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்திலும் பங்கேற்று பேசினார். இரவு ஊட்டி விருந்தினர் மாளிகையில் அவர் ஓய்வெடுத்தார்.
இன்று 2-வது நாளாக நீலகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பணியை தொடர்ந்தார். ரூ.353 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மருத்துவ ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளே சென்று, அதனை பார்வையிட்டார்.






