என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஊட்டியில் சினிமா படப்பிடிப்புக்கு தடை
- கோடை சீசனை வரவேற்க நீலகிரி மாவட்டம் ஊட்டி தயாராகி வருகிறது.
- தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான 7 பூங்காக்களில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊட்டி:
கோடை சீசனை வரவேற்க நீலகிரி மாவட்டம் ஊட்டி தயாராகி வருகிறது. சீசனை அனுபவிக்க ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் மலர் கண்காட்சி, காய், கனி கண்காட்சி, ரோஜா கண்காட்சி என பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா என பூங்காக்களில் இந்த கண்காட்சிகள் நடைபெற உள்ளன. கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தொடங்கி நடப்பதால் பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பு நடத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் 5-ந் தேதி வரை இந்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான 7 பூங்காக்களில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story






