என் மலர்
நாமக்கல்
- வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் தினந்தோறும் ஏராளமானோர் வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பழகுநர் உரிமம் பெற வருகின்றனர்.
- இட வசதி இல்லாததால், பரமத்தியிலிருந்து வேலூர் செல்லும் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வாகனங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் தினந்தோறும் ஏராளமானோர் வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பழகுநர் உரிமம் பெற வருகின்றனர். புதிய இருசக்கர வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் பதிவு மற்றும் தகுதிச் சான்று பெறுவதற்காக கொண்டுவரப்படும் வாகனங்களை நிறுத்தி ஆய்வு மேற்கொள்வதற்கு தனியாக இட வசதி இல்லாததால், பரமத்தியிலிருந்து வேலூர் செல்லும் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வாகனங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனால் பரமத்திவேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆய்வுக்காக நிறுத்தப்பட்ட வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு வாகன ஆய்வுகள் மேற்கொள்வதை தவிர்த்து மாற்று இடத்தில் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பரமத்திவேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) முருகனிடம் கேட்டபோது இந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வாகன ஆய்வு மேற்கொள்வதற்கென தனி இடம் ஒதுக்கப்படாமல் உள்ளதால் சாலை ஓரத்தில் நிறுத்தி ஆய்வு மேற்கொள் ளப்பட வேண்டிய நிலை உள்ளது. பரமத்தி வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு என சொந்த கட்டிடம் கட்டு வதற்கான ஒப்புதல் பெறப் பட்டுள்ள நிலையில் விரைவில் புதிய அலுவலகம் கட்டப்பட்டு அப்பகுதியில் ஆய்வுக்கான தனி இடம் அமைக்கப்படும். அதுவரை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு பணிகள் மேற் கொள்ளப்படும் என்று கூறினார்.
- நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
- இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கின்றனர்.
இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இந்த வாரம் நடந்த ஏலத்தில் 51.84½ குவிண்டால் எடை கொண்ட 14 ஆயிரத்து 233 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.21.45-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.17.01-க்கும், சராசரி விலையாக ரூ.20.60-க்கும் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 2 ஆயிரத்து 475-க்கு விற்பனையானது.
அதேபோல் 256.48 குவிண்டால் எடை கொண்ட 549 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.73.79-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.66.99-க்கும், சராசரி விலையாக ரூ.73.29-க்கும் விற்பனையானது.
2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.72.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.53.89-க்கும், சராசரி விலையாக ரூ.67.79-க்கும் என மொத்தம் ரூ.17லட்சத்து 73ஆயிரத்து 417-க்கு விற்பனையானது.
இந்த வாரம் மட்டும் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 18 லட்சத்து 75 ஆயிரத்து 892-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
- பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
- தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த மாணவர்கள் தற்போது நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 2 முதன்மை தேர்வு எழுதியுள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது. தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த மாணவர்கள் தற்போது நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 2 முதன்மை தேர்வு எழுதியுள்ளனர்.
குரூப் -4 தேர்வில், 17 பேர் சான்றிதழ் சரிபார்ப் புக்கு தேர்வாகியுள்ளனர். 2022-ம் ஆண்டு சீருடைப் பணியாளர்கள் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 5 பேர் தேர்ச்சி பெற்று தற்போது பணியில் உள்ளனர். மேலும் 2022 -ம் ஆண்டு போலீஸ் தேர்வில் 17 பேர் தேர்ச்சி பெற்று தற்போது பணியில் உள்ள னர். தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள, டிஎன்பி எஸ்சி குரூப் -1, 2, 4 தேர்விற்கு, இலவச பயிற்சி வகுப்பு வருகிற 14-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 - 1.30 மணி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு பாட வாரியாக சிறந்த வல்லு நர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
மேலும் இத்தேர்விற்கான மாதிரித் தேர்வுகள் ஒவ் வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை களில் நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை தொலைபேசி எண்கள் மூலமோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன் பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் உமா கூறியுள்ளார்.
- நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் தலைவி பாண்டிமா தேவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் தலைவி பாண்டிமா தேவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அதிகமாக உள்ள காலிப் பணியிடங்களால் ஒரு ஊழியர் 2, 3 மையங்களை பொறுப்பு பார்க்கும் நிலை உள்ளது. 5 ஆண்டு பணி முடித்த குறு மைய ஊழியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
- குப்பாண்டம் பாளையம் கிராமம் இடையார் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
- இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்திக்கு கடந்த 29-ம் தேதி காய்ச்சல் வந்துள்ளது. இதனையடுத்து, அவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம், குப்பாண்டம் பாளையம் கிராமம் இடையார் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்திக்கு கடந்த 29-ம் தேதி காய்ச்சல் வந்துள்ளது. இதனையடுத்து, அவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து 4 மாணவர் களுக்கும் காய்ச்சல் வந்துள்ளது. இதனால் நேற்று பள்ளிக்கு யாரும் வரவில்லை.
இதனால் அதிகாரிகள் பள்ளி குழந்தைகள் 17 பேரின் வீட்டிற்கு சென்று மருத்துவ குழு பரிசோதனை செய்தனர். எலச்சிபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் கருணாகரன் தலைமையில், நடமாடும் மருத்துவ குழு டாக்டர் வசந்தபிரியா, பள்ளி சிறார் மருத்துவக்குழு டாக்டர் கிருஷ்ணகாந்த் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சுகாதார கிராம செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ குழு இடையார்பாளையம் வந்து முகாமிட்டு அனைத்து குழந்தைகளையும் பரிசோதித்து ரத்த பரிசோதனை செய்து காய்ச்சலுக்கான காரணங்களை ஆய்வு செய்தனர்.
பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிகிச்சைகள், மாத்திரைகள் அளிக்கப்பட்டது. மலேரியா, டெங்கு காய்ச்சலுக்கான ரத்த பரிசோதனை நடைபெற்றது. அதில் யாருக்கும் மலேரியா, டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படவில்லை
அதுமட்டுமல்லாது, இடையார்பாளையம் கிராமம் முழுவதும் கொசுப்புழு ஒழித்தல், புகை மருந்து அடித்தல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், இருமல், சளி தொந்தரவுகள் உள்ளதா? எனவும் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மாத்திரை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- கடந்த ஜூன் 30-ந்தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது.
- என்.இ.சி.சி. கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கடந்த மே மாதம் 1-ந்தேதி முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), வியாபாரிகளுக்கு ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத, பண்ணைக்கொள்முதல் விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையாளர்களும் பின்பற்றி வருகின்றனர்.
கடந்த ஜூன் 30-ந்தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது. பின்னர் நாள்தோறும் படிப்படியாக விலை குறைந்து, கடந்த 9-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4.30 ஆனது. நேற்று மாலை நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை-480, பர்வாலா-392, பெங்களூரு-460, டெல்லி-410, ஹைதராபாத்-425, மும்பை-485, மைசூர்-462, விஜயவாடா-425, ஹொஸ்பேட்-420, கொல்கத்தா-490.
பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.93 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.78 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.
நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உள்பட பல பகுதிகளில் 25 லட்சத்துக்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. கறிக்கோழி உற்பத்தி மற்றும் அதன் தேவை குறித்தும் ஆலோசித்து பின்னர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த மாதம் தொடக்கத்தில் ஒரு கிலோ 143 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை, படிப்படியாக சரிந்து தற்போது ஒரு கிலோ 93 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வடமாநிலங்களில் கறிக்கோழி தேவை குறைந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
- ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர், சாந்த சொரூபியாக வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
- அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேரில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரம் வலம் வந்து தேரோட்டம் நடைபெறும். தங்கத்தேர் இழுப்பதற்காக நாள் ஒன்றுக்கு ஒரு பக்தர் மட்டுமே, ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி முன் பதிவு செய்ய வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் கோட்டை பகுதியில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர், சாந்த சொரூபியாக வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாமக்கல் வந்து ஆஞ்சநேயரை தரித்து செல்கின்றனர்.
பதிவு செய்துள்ள கட்டளைதாரர்கள் மூலம், தினசரி காலை 9.30 மணிக்கு சுவாமிக்கு 1,008 வடைமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனையும், தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், திருமஞ்சள், நல்லெண்ணை, பஞ்சாமிர்தம் போன்ற வாசனை திரவியங்களால் சுவாமிக்கு அபிசேகமும் நடைபெற்று வருகிறது.
மதியம் 1 மணியளவில் அபிசேகம் நிறைவு பெற்று சுவாமிக்கு அலங்காரம் நடைபெறும். கட்டளை தாரர்கள் பதிவு செய்வதன் அடிப்படையில் சுவாமிக்கு வெள்ளிக்கவசம், தங்க கவசம், முத்தங்கி, மலர் அங்கி போன்ற அலங்காரம் நடைபெறும். பின்னர் தீபாராதணை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
மாலை 6 மணிக்கு சுவாமி உற்சவர், அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேரில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரம் வலம் வந்து தேரோட்டம் நடைபெறும். தங்கத்தேர் இழுப்பதற்காக நாள் ஒன்றுக்கு ஒரு பக்தர் மட்டுமே, ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி முன் பதிவு செய்ய வேண்டும். நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணிகள் செய்து, கும்பாபிசேகம் நடத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.
இதையொட்டி கடந்த ஜனவரி மாதம் முதல் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. கோவில் உட்பிரகாரத்தில் தடுப்புகள் மற்றும் சாரங்கள் அமைக்கப்பட்டு திருப்பணி வேலைகள் மற்றும் கோவில் சுவர்கள் மற்றும் மேற்கூரையில் வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் தங்கத் தேரோட்டம் கடந்த 5 மாதங்களாக நடைபெறவில்லை.
தற்போது கோவில் உட்பிரகாரத்தில் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்று சாரங்கள் மற்றும் தடுப்புகள் அகற்றப்பட்டுவிட்டன. இதனால் 9-ந் தேதி முதல் தங்கத்தேர் இழுப்பதற்காக பக்தர்கள் முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது. விருப்பமுள்ள பக்தர்கள் கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து தங்கத்தேர் இழுக்கலாம் என கோவில் உதவி கமிஷனர் இளையராஜா தெரிவித்துள்ளார்
- கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் பகுதியில் பரமத்தி போலீஸ் சப் -இன்ஸ் பெக்டர் சரண்யா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- 2 மூட்டைகளிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 386 கிலோ பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் ஆகியவை இருந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் பகுதியில் பரமத்தி போலீஸ் சப் -இன்ஸ் பெக்டர் சரண்யா தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண் டிருந்தனர்.
அப்போது இருக்கூர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் 2 பேர் மூட்டைகளுடன் நின்று கொண்டு இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்த சப்- இன்ஸ்பெக்டர் சரண்யா, இருவரையும் பிடித்து அவர்கள் வைத் திருந்த 2 சாக்கு மூட்டை களையும் பிரித்து சோதனை மேற்கொண்டார். இதில் 2 மூட்டைகளிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 386 கிலோ பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் ஆகியவை இருந்தது.
இதையடுத்து தொடர்ந்து 2 பேர்களிடம் விசாரணை நடத்தியதில் கபிலர்மலை அருகே உள்ள வேட்டுவம் பாளையத்தை சேர்ந்த கருப்பண்ணன் மகன் நல்லசிவம் மற்றும் கரூர் அண்ணாநகரை சேர்ந்த விஸ்வநாதன் என்பது தெரிய வந்ததது. பரமத்தி போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 386 கிலோ பான் குட்காவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டு நீதிபதி உத்தரவின் பேரில் அவர்கள் இருவரும் பரமத்தி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
- பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் மாவுரெட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
- காலை 6 மணிக்கு மளிகை கடையை திறக்க வந்த சுப்பிரமணி, கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பணம் வைக்கும் டேபிள் கடைக்கு வெளியே உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் மாவுரெட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த சுதாகரன் என்பவர் செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.
சுதாகரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடையை திறக்கவில்லை. சுப்பிரமணி மளிகை கடையில் நேற்று இரவு 10 மணி வரை வியாபாரம் செய்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
இன்று காலை 6 மணிக்கு மளிகை கடையை திறக்க வந்த சுப்பிரமணி, கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பணம் வைக்கும் டேபிள் கடைக்கு வெளியே உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அருகில் இருந்த சுதாகரனுக்கு சொந்தமான செல்போன் கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், மளிகை கடையில் வைத்திருந்த ரொக்கம் ரூ.80 ஆயிரம் மற்றும் பொருட்களும், செல்போன் கடையில் வைத்திருந்த ரூ.55 ஆயிரம் ரொக்கம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
மேலும் செல்போன் கடையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களையும் மர்ம நபர்கள் உடைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பரமத்திவேலூர் வட்டம், ஜேடர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது.
- பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து நட வடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், ஜேடர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடரந்து இப்பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வருவாய் துறையை சேர்ந்த வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களும் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது,
பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து நட வடிக்கைகளும் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் தகாத சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுமூக நிலைக்கு கொண்டு வர இரு பிரிவினருக்கான அமைதி பேச்சுவார்த்தை மாவட்ட கலெக்டர் உமா தலை மையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.
பின்னர் ஜேடர் பாளையம் அருகே எம்.குன்னத்தூர் பகுதியில் பாதிப்புக்கு உள்ளான விளைநிலங்களை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
அசம்பாவித சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொதுமக்கள் தங்கள் கிராமங்களுக்கு உட்பட்ட பகுதியில் சந்தே கப்படும்படியான நபர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நிகழ்வுகள் அறியப்பட்டால் உடனடியாக 94981 81340 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரி விக்குமாறு அறிவுறுத்தப் பட்டு உள்ளது.
மேலும், இதுபோன்று 2 சமுதாய பிரிவினருக்கு இடையேயான பிரச்ச னையில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்ப டுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ரமேஷ், உதவி இயக்குநர் (ஊராட்சி) அசோக்குமார், ஆகியோர் உட்பட காவல் துறையினர் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- லாரிகளுக்கு தானியங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், இரும்பு பொருட்கள், சிமெண்ட் என பலவகையில் லோடுகள் கிடைக்கிறது.
- தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் சரியாக செயல்படவில்லை. மேலும் அங்கு விவசாய பணியும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்:
இந்தியா முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகிறது. தமிழகத்தில் 4 லட்சத்து 75 ஆயிரம் லாரிகள் இயங்குகிறது. இந்த தொழிலை நம்பி டிரைவர், கிளீனர் உட்பட லட்சக்கணக்கானோர் உள்ளனர். இதில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் 1 லட்சம் லாரிகளுக்கு மேல் அடங்கும்.
இந்த லாரிகளுக்கு தானியங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், இரும்பு பொருட்கள், சிமெண்ட் என பலவகையில் லோடுகள் கிடைக்கிறது. சரக்குகள் கையாளுவது மூலம் நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் லாரி உரிமையாளர்களுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.
சமீப காலமாக டீசல், சுங்க கட்டணம், லாரிகளுக்கான பொருட்கள் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம் உட்பட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக வட மாநிலங்களில் பெரும்பாலான தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் சரியாக செயல்படவில்லை. மேலும் அங்கு விவசாய பணியும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தை சேர்ந்த லாரிகளுக்கு சரிவர லோடு கிடைக்காமல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
லாரி தொழில் பாதித்தால் அதைச் சார்ந்த தொழில் அனைத்தும் பாதிக்கும். மகாராஷ்டிராவில் இருந்து பெரிய வெங்காயம், பூண்டு, கொண்ட கடலையும், மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து துவரை, உழுந்து, பச்சை பயிறு, குஜராத்திலிருந்து மசாலா பொருட்களும் தமிழகத்திற்கு லாரிகள் மூலம் வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குஜராத்தில் புயல் தாக்கியது. இதன் காரணமாக அங்கு சாகுபடி செய்த பல நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளது. பல மாவட்டங்களில் சாலைகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வர வேண்டிய லோடுகளின் எண்ணிக்கை 30 முதல் 40 சதவீதம் வரை சரிந்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய சவ்வரிசி, மஞ்சள், கல் மாவு, அரிசி, வெல்லம், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை வட மாநிலங்களுக்கு செல்லவில்லை.
இதனால் காரணமாக தமிழக முழுவதும் லோடு கிடைக்காமல் 30 சதவீதத்துக்கும் மேலாக சுமார் 2 லட்சம் லாரிகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் டிரைவர், கிளீனர், சுமை தூக்குவோர் உள்ளிட்டவர்கள் போதிய வருமானம் இல்லாமல் உள்ளனர். அதே போல் லாரி உரிமையாளர்களுக்கும் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.
- கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது.
- நாமக்கல் மண்டலத்தை பொறுத்தவரை பள்ளிக்களுக்கான சத்துணவு முட்டைகள் தொடர்ந்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் சுமார் 8 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படு கின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது. பின்னர் தொடர்ந்து படிப்படியாக சரிவடைந்து கடந்த 8-ம் தேதி ரூ. 4.70 ஆக இருந்த முட்டை விலை மேலும் 20 பைசா குறைக்கப்பட்டு ரூ.4.50 ஆனது. நேற்று நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 20 பைசா குறைக் கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.30 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த 10 நாட்களில் மட்டும் முட்டை விலை 120 காசுகள் குறைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள மற்ற மண்டங்களில் முட்டை விலை சரிவடைந்து வருவதால், நாமக்கல் மண்டலத்தில் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாட்களில் ஒரு முட்டைக்கு ரூ. 1.20 விலை சரிவு ஏற்பட்டதால் கோழிப் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு :-
சென்னை-500, பர்வாலா-392, பெங்களூர்-460, டெல்லி-410, ஹைதராபாத்-425, மும்பை-530, மைசூர்-480, விஜயவாடா-425, ஹொஸ்பேட்-420, கொல்கத்தா-490.
பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 98 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 82 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.
முட்டைவிலை சரிவு குறித்து பண்ணையாளர்கள் கூறியதாவது:-
நாமக்கல் மண்டலத்தை பொறுத்தவரை பள்ளிக்களுக்கான சத்துணவு முட்டைகள் தொடர்ந்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கி சிறப்பாக கேரளாவில் பொழிந்து கொண்டிருப்பதால் கேரளா விற்பனை நன்றாக உள்ளது. ஏற்றுமதிக்கான முட்டைகளும் தொடர்ந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
வயது முதிர்ந்த கோழிகள் அதிக அளவில் பிடிக்கப்படுவதாலும் கடந்த காலங்களில் பண்ணைகளில் சராசரி அளவை விட குறைந்த கோழிக்குஞ்சு விடப்பட்டதாலும் முட்டை உற்பத்தி குறைந்து காணப்படுகிறது.
நாமக்கல் மண்டலத்தில் உள்ள பண்ணைகளில் முட்டை பற்றாக்குறை தொடர்வதால், வரும் நாட்களில் முட்டை விலை மேலும் ஏறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது, என்றனர்.






