search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜேடர்பாளையம் பகுதியில் சுமூக நிலை திரும்ப அமைதி பேச்சுவார்த்தை

    • பரமத்திவேலூர் வட்டம், ஜேடர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது.
    • பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து நட வடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், ஜேடர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது.

    இதனைத் தொடரந்து இப்பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வருவாய் துறையை சேர்ந்த வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களும் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது,

    பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து நட வடிக்கைகளும் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக, ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் தகாத சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுமூக நிலைக்கு கொண்டு வர இரு பிரிவினருக்கான அமைதி பேச்சுவார்த்தை மாவட்ட கலெக்டர் உமா தலை மையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

    பின்னர் ஜேடர் பாளையம் அருகே எம்.குன்னத்தூர் பகுதியில் பாதிப்புக்கு உள்ளான விளைநிலங்களை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

    அசம்பாவித சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொதுமக்கள் தங்கள் கிராமங்களுக்கு உட்பட்ட பகுதியில் சந்தே கப்படும்படியான நபர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நிகழ்வுகள் அறியப்பட்டால் உடனடியாக 94981 81340 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரி விக்குமாறு அறிவுறுத்தப் பட்டு உள்ளது.

    மேலும், இதுபோன்று 2 சமுதாய பிரிவினருக்கு இடையேயான பிரச்ச னையில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்ப டுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிகழ்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ரமேஷ், உதவி இயக்குநர் (ஊராட்சி) அசோக்குமார், ஆகியோர் உட்பட காவல் துறையினர் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×