search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு ஆய்வுக்காக வரும் வாகனங்களை சாலையில்  நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு
    X

    பரமத்தி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் முன்பு சாலை ஓரத்தில் நெடுகிலும் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை படத்தில் காணலாம்.

    ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு ஆய்வுக்காக வரும் வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு

    • வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் தினந்தோறும் ஏராளமானோர் வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பழகுநர் உரிமம் பெற வருகின்றனர்.
    • இட வசதி இல்லாததால், பரமத்தியிலிருந்து வேலூர் செல்லும் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வாகனங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் தினந்தோறும் ஏராளமானோர் வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பழகுநர் உரிமம் பெற வருகின்றனர். புதிய இருசக்கர வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் பதிவு மற்றும் தகுதிச் சான்று பெறுவதற்காக கொண்டுவரப்படும் வாகனங்களை நிறுத்தி ஆய்வு மேற்கொள்வதற்கு தனியாக இட வசதி இல்லாததால், பரமத்தியிலிருந்து வேலூர் செல்லும் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வாகனங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதனால் பரமத்திவேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆய்வுக்காக நிறுத்தப்பட்ட வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு வாகன ஆய்வுகள் மேற்கொள்வதை தவிர்த்து மாற்று இடத்தில் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து பரமத்திவேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) முருகனிடம் கேட்டபோது இந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வாகன ஆய்வு மேற்கொள்வதற்கென தனி இடம் ஒதுக்கப்படாமல் உள்ளதால் சாலை ஓரத்தில் நிறுத்தி ஆய்வு மேற்கொள் ளப்பட வேண்டிய நிலை உள்ளது. பரமத்தி வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு என சொந்த கட்டிடம் கட்டு வதற்கான ஒப்புதல் பெறப் பட்டுள்ள நிலையில் விரைவில் புதிய அலுவலகம் கட்டப்பட்டு அப்பகுதியில் ஆய்வுக்கான தனி இடம் அமைக்கப்படும். அதுவரை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு பணிகள் மேற் கொள்ளப்படும் என்று கூறினார்.

    Next Story
    ×