search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வட மாநிலங்களில் கனமழை- தமிழ்நாடு முழுவதும் லோடு கிடைக்காமல் 2 லட்சம் லாரிகள் நிறுத்திவைப்பு
    X

    வட மாநிலங்களில் கனமழை- தமிழ்நாடு முழுவதும் லோடு கிடைக்காமல் 2 லட்சம் லாரிகள் நிறுத்திவைப்பு

    • லாரிகளுக்கு தானியங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், இரும்பு பொருட்கள், சிமெண்ட் என பலவகையில் லோடுகள் கிடைக்கிறது.
    • தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் சரியாக செயல்படவில்லை. மேலும் அங்கு விவசாய பணியும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

    நாமக்கல்:

    இந்தியா முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகிறது. தமிழகத்தில் 4 லட்சத்து 75 ஆயிரம் லாரிகள் இயங்குகிறது. இந்த தொழிலை நம்பி டிரைவர், கிளீனர் உட்பட லட்சக்கணக்கானோர் உள்ளனர். இதில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் 1 லட்சம் லாரிகளுக்கு மேல் அடங்கும்.

    இந்த லாரிகளுக்கு தானியங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், இரும்பு பொருட்கள், சிமெண்ட் என பலவகையில் லோடுகள் கிடைக்கிறது. சரக்குகள் கையாளுவது மூலம் நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் லாரி உரிமையாளர்களுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.

    சமீப காலமாக டீசல், சுங்க கட்டணம், லாரிகளுக்கான பொருட்கள் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம் உட்பட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக வட மாநிலங்களில் பெரும்பாலான தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் சரியாக செயல்படவில்லை. மேலும் அங்கு விவசாய பணியும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தை சேர்ந்த லாரிகளுக்கு சரிவர லோடு கிடைக்காமல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    லாரி தொழில் பாதித்தால் அதைச் சார்ந்த தொழில் அனைத்தும் பாதிக்கும். மகாராஷ்டிராவில் இருந்து பெரிய வெங்காயம், பூண்டு, கொண்ட கடலையும், மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து துவரை, உழுந்து, பச்சை பயிறு, குஜராத்திலிருந்து மசாலா பொருட்களும் தமிழகத்திற்கு லாரிகள் மூலம் வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குஜராத்தில் புயல் தாக்கியது. இதன் காரணமாக அங்கு சாகுபடி செய்த பல நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளது. பல மாவட்டங்களில் சாலைகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வர வேண்டிய லோடுகளின் எண்ணிக்கை 30 முதல் 40 சதவீதம் வரை சரிந்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய சவ்வரிசி, மஞ்சள், கல் மாவு, அரிசி, வெல்லம், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை வட மாநிலங்களுக்கு செல்லவில்லை.

    இதனால் காரணமாக தமிழக முழுவதும் லோடு கிடைக்காமல் 30 சதவீதத்துக்கும் மேலாக சுமார் 2 லட்சம் லாரிகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் டிரைவர், கிளீனர், சுமை தூக்குவோர் உள்ளிட்டவர்கள் போதிய வருமானம் இல்லாமல் உள்ளனர். அதே போல் லாரி உரிமையாளர்களுக்கும் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×