என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gutka Padukya"

    • கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் பகுதியில் பரமத்தி போலீஸ் சப் -இன்ஸ் பெக்டர் சரண்யா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • 2 மூட்டைகளிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 386 கிலோ பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் ஆகியவை இருந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் பகுதியில் பரமத்தி போலீஸ் சப் -இன்ஸ் பெக்டர் சரண்யா தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண் டிருந்தனர்.

    அப்போது இருக்கூர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் 2 பேர் மூட்டைகளுடன் நின்று கொண்டு இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்த சப்- இன்ஸ்பெக்டர் சரண்யா, இருவரையும் பிடித்து அவர்கள் வைத் திருந்த 2 சாக்கு மூட்டை களையும் பிரித்து சோதனை மேற்கொண்டார். இதில் 2 மூட்டைகளிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 386 கிலோ பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் ஆகியவை இருந்தது.

    இதையடுத்து தொடர்ந்து 2 பேர்களிடம் விசாரணை நடத்தியதில் கபிலர்மலை அருகே உள்ள வேட்டுவம் பாளையத்தை சேர்ந்த கருப்பண்ணன் மகன் நல்லசிவம் மற்றும் கரூர் அண்ணாநகரை சேர்ந்த விஸ்வநாதன் என்பது தெரிய வந்ததது. பரமத்தி போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 386 கிலோ பான் குட்காவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டு நீதிபதி உத்தரவின் பேரில் அவர்கள் இருவரும் பரமத்தி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×