என் மலர்
நாமக்கல்
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் குருசாமிபாளையத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி உள்ளனர்.
நேற்று 24 மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்தனர். இவர்களுக்கு காலையில் முள்ளங்கி சாம்பார் சாதம் போடப்பட்டு உள்ளது. இதனை சாப்பிட்டு விட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.
இந்த நிலையில், விடுதியில் சாப்பிட்டு சென்ற மாணவர்களில் சிலருக்கு வயிற்று வலி ஏற்பட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக பாதிக்கப்பட்ட 9 மாணவர்களை பிள்ளால்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
மாணவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பிள்ளா நல்லூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் தவசீலன் தலைமையில் விடுதியில் தங்கி இருந்த மற்ற மாணவர்கள் மற்றும் பள்ளிக்குச் சென்றிருந்த மாணவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
கெட்டுப்போன உணவு காரணமாக மாணவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டி ருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதனிடையே தரமற்ற உணவு வழங்கியதால் மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக பொது மக்கள் குற்றம்சாட்டினர்.
இதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஆதிதிரா விடர் நல அதிகாரி சுகந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை பார்த்து நலம் விசாரித்தார். மேலும் அவர் விடுதிக்குச் சென்று விசாரணை நடத்தினார். ராசிபுரம் ஒன்றிய குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், பிள்ளாநல்லூர் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் சிகிச்சை பெரும் மாணவர் களை சந்தித்து நலம் விசாரித்தனர்.
அதேபோல் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் டாக்டர் சரோஜா, மாணவர்களை சந்தித்து பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தார். மேலும் பிஸ்கட், பழங்கள் கொடுத்து நலம் விசாரித்தார். அவர் மாணவர்கள் தங்கி இருந்த விடுதிக்குச் சென்று அவர்களுக்கு வழங்கப்படும் உணவு போன்றவற்றை பரிசோதித்தார். ராசிபுரம் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் வேம்பு சேகரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் பிள்ளாநல்லூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் தனபால், ராமசாமி ஆகியோரும் சென்று நலம் விசாரித்தனர்.
- மாது (வயது 40). இவர் பரமத்திவேலூர் தாலுகா அலுவலகம் எதிரே கார் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.
- யாரும் இல்லாத நேரத்தில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர், அங்கிருந்த கார் எஞ்சின் பிளாக்கை எடுத்து அவரது மோட்டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள படமுடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாது (வயது 40). இவர் பரமத்திவேலூர் தாலுகா அலுவலகம் எதிரே கார் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை ஒர்க் ஷாப்பில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர், அங்கிருந்த கார் எஞ்சின் பிளாக்கை எடுத்து அவரது மோட்டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசியுள் ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், பரமத்தி போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். தன்பேரில், அங்கு வந்த போலீசார் சந்தேகத்திற்குரிய அந்த நபரை போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில், அவர் கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம், வள்ளுவர் நகரைச் சேர்ந்த லோக நாதன் (27) என்பது தெரியவந்தது.இதனை யடுத்து போலீசார் லோக நாதனை கைது செய்து, பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரமத்தி கிளை சிறையில் அடைத்தனர்.
- சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, முட்டாஞ்செட்டி ஊராட்சியில் அனைவருக்கும் காவிரிக் குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- கடந்த 5-ந் தேதி முட்டாஞ்செட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற ஏற்பா டுகள் செய்யப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், முட்டாஞ்செட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் கமலபிரியா, நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-
சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, முட்டாஞ்செட்டி ஊராட் சியில் அனைவருக்கும் காவிரிக் குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த 5-ந் தேதி முட்டாஞ்செட்டி ஊராட்சி யில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற ஏற்பா டுகள் செய்யப்பட்டது. எனினும், வார்டு உறுப்பி னர்கள் ஒத்துழைப்பு வழங் காததால் கூட்டம் நடத்தப் படவில்லை.
பின்னர் 7-ந் தேதி கிராம பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தடைவிதித்து உத்தரவிட்டார். எனவே கூட்டம் நடத்தப்படவில்லை. இச்சூழலில் ஊராட்சியின் வளர்ச்சிக்காக சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்த, அனுமதியளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது
- அருண்லாலுடைய தாய் சுசிலா முன்னாள் கவுன்சிலர் ஆவார்.
- அருண்லால், தேவிபிரியா, மோனிஷா ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் பகுதியில் உள்ள பொம்மை தெருவை சேர்ந்தவர் அருண்லால். (வயது 51). இவர் ராசிபுரம் கடைவீதியில் நகைக்கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி தேவிபிரியா (வயது 40). இவர் ராசிபுரம் நகராட்சி 13-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்.
இந்த தம்பதிக்கு 2 மகள்கள். மூத்த மகள் ரித்திகா (21) பெங்களுருவில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இளையமகள் மோனிஷா (16), 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அருண்லால் தனது குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்த வீடு கீழ் தளம், மேல் தளம் கொண்டதாகும். அருண்லாலுடைய தாய் சுசிலா முன்னாள் கவுன்சிலர் ஆவார். வீட்டின் கீழ் தளத்தில் சுசிலா வசித்து வருகிறார். மேல்மாடியில் அருண்லால் தனது மனைவி தேவிபிரியா, மகள் மோனிஷாவுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று சுசிலா வீட்டில் இல்லை. அவர் வெளியே சென்றிருந்தார். அருண்லால், தேவிபிரியா, மோனிஷா ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
இன்று காலை வெகுநேரமாகியும், இவர்கள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர், அங்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டின் கதவு லேசாக திறந்து கிடந்தது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது கீழ் தளத்தில் அருண்லால் தாய் சுசிலா அங்கு இல்லை. இதனால் மேல்மாடிக்கு சென்று பார்த்தார். அங்கு அருண்லால், தேவிபிரியா தம்பதி மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு நிலையில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பக்கத்தில் அவரது மகள் மோனிஷா விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி ராசிபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். ராசிபுரம் டி.எஸ்.பி.செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கம், சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அருண்லால், தேவிபிரியா, மோனிஷா ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
அருண்லால்-தேவிபிரியா தம்பதி மற்றும் அவர்களது மகள் ஆகியோர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என உடனடியாக தெரியவில்லை.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, இவர்கள் தற்கொலைக்கு கடன் பிரச்சினையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என தீவிர விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு அகோரி சாமியார் உட்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை
- தவமணி தலைமையிலான போலீசார் முஸ்தபாவை கைது செய்து திருச்செங்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, சிறை யில் அடைத்தனர்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், சேலம் சாலை, பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் நேற்று மாலை, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கை யில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு அகோரி சாமியார் உட்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
இதையடுத்து போலீசார் அவர்களை, போலீஸ் நிலை யம் அழைத்து வந்து தீவிர விசாரணை செய்தனர். இதில், அந்த அகோரி சாமியார் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சாமியார் வேடத்தில் இருந்தவர், சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடி முஸ்தபா என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் மீது நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசாரிடம் முஸ்தபா கூறுகையில், தன்னை கொலை வழக்குகளில் போலீசார் தொடர்ந்து தேடி வந்ததையடுத்து, காசிக்குச் சென்று முஸ்தபா என்கிற முகாமது ஜிகாத் என்ற தனது பெயரை ஜிக்லினத் அகோரி என மாற்றிக்கொண்டு சாமியாராக ஊர் ஊராக சுற்றித் திரிந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக அவர் போலீசில் தெரிவித்துள்ளார்.
மேலும் திருச்செங்கோடு புறநகர் போலீஸ் நிலையத்தில் 2 கொலை குற்றங்களிலும், ராசிபுரத்தில் நடந்த 2 கொலை வழக்குகளிலும், பரமத்தியில் நடந்த வழிப்பறி வழக்கிலும் மற்றும் சேலம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த கொலை வழக்கு களிலும் சம்பந்தப்பட்டுள்ள தாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் முஸ்தபாவை கைது செய்து திருச்செங்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, சிறை யில் அடைத்தனர். இவரை கைது செய்யும்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்ட ர்கள் இளமுருகன், தங்க வடிவேல், போலீசார் திருமலைவாசன், சின்னதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
- அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பரமேஸ்வரர், மாசாணி அம்மன், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் நன்செய் இடையாரில் உள்ள திருவேலீஸ்வரர் கோவில், பரமத்திவேலூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோயில், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவில், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில், வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில், பாண்டமங்கலம் ஈஸ்வரன் கோவில் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு கால பைரவரை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- பரமத்தி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் 5 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
- இந்நிலையில் திடீர் மழையால் பூமி குளிர்ச்சி அடைந்து குளிர்ச்சியான சீதோசண நிலை ஏற்பட்டுள்ளது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், கோப்பணம் பாளையம், இருக்கூர், சேளூர், கபிலர்மலை, பெரிய சோளிபாளையம், பிலிக்கல் பாளையம், குன்னத்தூர், வடகரை ஆத்தூர் கொத்தமங்கலம் குறும்பல மகாதேவி, ஜமீன் இளம் பள்ளி, சோழசிராமணி, தி.கவுண்டம்பாளையம், திடுமல், சுள்ளிப்பாளையம், பெருங்குறிச்சி, குப்பரிக்கா பாளையம், மணியனூர், குன்னமலை ,கூடச்சேரி, பரமத்தி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் 5 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
அதனை தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இதன் காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், கூலி வேலைக்குச் சென்று வீடுகளுக்கு நடந்த செல்லும் கூலித்தொழிலாளர்கள் நனைந்து கொண்டு சென்றனர்.
அதேபோல் சாலையோர கடைக்களிலும் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப் பட்டனர். இந்நிலையில் திடீர் மழையால் பூமி குளிர்ச்சி அடைந்து குளிர்ச்சியான சீதோசண நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கிராமப் புறங்களில் பயிரிடப் பட்டுள்ள பயிர்கள் வெயிலின் தாக்கம் காரணமாக வாடிய நிலையில் இருந்தது. இந்த மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- காவிரி ஆறு பாய்ந்து சென்றாலும், இடையில் சுற்றுலாத்தலம் இல்லாமல் இருப்பது, ஒரு குறையாகவே இருந்து வந்தது.
- ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதி மற்றும் அதனை ஒட்டி உள்ள ராஜா வாய்க்காலில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளையம், பள்ளிபா ளையம், ஜேடர்பாளையம், பரமத்திவேலுார், மோகனுார் வழியாக காவிரி ஆறு பாய்ந்து சென்றாலும், இடையில் சுற்றுலாத்தலம் இல்லாமல் இருப்பது, ஒரு குறையாகவே இருந்து வந்தது.
கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஜேடர்பா ளையம் அணைக்கட்டு பகுதியில் பொதுப்பணித் துறை பூங்கா அமைக்கப்பட் டது. மேலும், செயற்கை நீரூற்று, குழந்தைகள் விளை யாடக்கூடிய சீசா போன்ற வையும் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில், ஏராளமான சுற்றுலா பயணிகள், இங்கு வந்து, பூங்காவில் பொழுதை குதூ கலமாக கழித்து ஜேடர்பா ளையம் அணைக் கட்டு பகுதியில் குளித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ள னர்.
இந்நிலையில் தற்போது ஜேடர்பாளையம் அணைக் கட்டு பகுதி மற்றும் அதனை ஒட்டி உள்ள ராஜா வாய்க்காலில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. வாய்க்கால் மற்றும் அணைக்கட்டு பகுதியில் குளிக்கும் இளைஞர்கள் நீரில் மூழ்கி இறக்கின்றனர். கடந்த மாதம் மட்டும் 4 பேர் உயிரிழந்த உள்ளனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அங்கு குடிபோ தையில் இளை ஞர்கள் குளிக்க வருவதால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி, தற்காலிகமாக ஜேடர்பாளை யம் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் குளிக்க தடை விதித்துள்ளனர். ஜேடர்பா ளையம் அணைக்கட்டு பூங்காவிற்கு மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி, குளிக்க அனுமதி கிடையாது என்று பொதுப்ப ணித்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
- பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்து, 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் முதிர்வுத் தொகைக்கு விண்ணப் பிக்கலாம்.
- ஒவ் வொரு மாதமும் 2-வது செவ்வாய் கிழமைகளில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் கட்டிடத்தில் இயங்கும், மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழக முதல்வரின், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்து, 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் முதிர்வுத் தொகைக்கு விண்ணப் பிக்கலாம். அந்த வகையில், ஒவ் வொரு மாதமும் 2-வது செவ்வாய் கிழமைகளில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் கட்டிடத்தில் இயங்கும், மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் கலந்து கொள்ளலாம். முதிர்வுத்தொகை பெறுவதற்கு விண்ணப் பித்து பயனடையலாம். ரூ.1,500 மற்றும் ரூ.15,200 டெபாசிட் தொகை பத்திரம் அசல் மற்றும் நகல், 10-ம் வகுப்பு முடித்ததற்கான சான்றிதழ் நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல் (பயனாளியின் பெயரில்-தனி வங்கிக்கணக்கு), பாஸ் போர்்ட் அளவு புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், ஆதார் கார்டு நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நடக்கும் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித் துள்ளார்.
- அரசு மருத்துவ மனையில் காசநோய் இறப்பில்லா திட்டத்தின் கீழ் எப்-75 ஊட்ட சத்து பானம் வழங்கும் முகாம் நடை பெற்றது.
- அதி தீவிர சிகிச்சை கீழ் உள்ள காசநோயாளிகள் 6 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் சார்பாக குமார பாளையம் அரசு மருத்துவ மனையில் காசநோய் இறப்பில்லா திட்டத்தின் கீழ் எப்-75 ஊட்ட சத்து பானம் வழங்கும் முகாம் நடை பெற்றது. அதி தீவிர சிகிச்சை கீழ் உள்ள காசநோயாளிகள் 6 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய ஊட்டச்சத்து வழங்கப்பட்டது.
தன்னார்வலர் பிரபு, மாவட்ட காசநோய் துணை இயக்குனர் வாசுதேவன், குமாரபாளையம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பாரதி, உதவி டாக்டர் ஆர்த்தி, முதுநிலை சிகிச்சை மேற்பாற்வையாளர் அருள்மணி, சுகாதார பார்வையாளர் கெளதம், ஆய்வக பொறுப்பாளர் சரண்யா மற்றும் செவிலியர்கள் பலரும் பங்கேற்றனர்.
- தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறை சார்பில் ராஜா வாய்க்காலில் முறை வைத்து தண்ணீர் விடுவது சம்பந்தமாக விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்திற்கு நாமக்கல் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் ஆனந்தன் தலைமை வகித்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சரபங்கா வடிநில கோட்ட பிரிவு அலுவலகத்தில், தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறை சார்பில் ராஜா வாய்க்காலில் முறை வைத்து தண்ணீர் விடுவது சம்பந்தமாக விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நாமக்கல் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சுரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நீரேற்று பாசன சங்கங்கள் முறையற்ற முறையில் தண்ணீர் எடுப்பதை நிறுத்தாவிட்டால் ராஜா, பொய்யேரி, கொமரபாளையம் மற்றும் மோகனூர் வாய்க்கால்களில் முறை வைத்து தண்ணீர் விடும் பாசன முறையை அமுல்படுத்த கூடாது என விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முறை வைத்து தண்ணீர் விடும் பாசன முறையை அமல்படுத்தினால் மோகனூர் ராஜாவாய்க்காலில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே ராஜா, பொய்யேரி, கொமராபாளையம் மற்றும் மோகனூர் வாய்க்கால் பாசன விவசாயிகளின் நலன் கருதி முறை வைத்து தண்ணீர் விடும் முடிவை பொதுப்பணித்துறையினர் கைவிட வேண்டும்.
காவிரி ஆற்றின் கீழ் பகுதிகளுக்கு தண்ணீர் செல்வது தாமதம் ஏற்படுவதால் காவிரி ஆற்றில் குறுக்கே மணல் எடுப்பதற்காக போடப்பட்டுள்ள மணல் தடுப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஆலோசனை கூட்டத்தில் வேலூர் ராஜா வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் வையாபுரி, செயலாளர் பெரியசாமி, தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க செயலாளர் வையாபுரி, தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் அஜித்தன், மோகனூர் விவசாயிகள் சங்க தலைவர் சுந்தரம், செயலாளர் வரதராஜன், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங் கள் இயங்கி வருகின்றன.
- இவற்றில் தற்போது 2023-24-ம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது.
நாமக்கல்:
தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங் கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங் கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2023-24-ம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது.
தொழிற்பயிற்சி நிலையங் களில் அரசு ஒதுக்கீட்டிற் கான இடங்களுக்கு, சேர்க்கை விவரங்கள் ஜூலை 10-ந் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் முன் கூட்டியே கடந்த 4-ந் தேதி வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விண்ணப் பதாரர்களும் தங்களது தற்காலிக ஒதுக் கீட்டிற்கான விவரத்தை மேற்கண்ட வெப்சைட்டில் லாக் இன் செய்து அறிந்து கொள்ளலாம்.
அதன் பிறகு நாமக்கல், கீரம்பூரில் அமைந்துள்ள, அரசினர் தொழிற்பயிற்சி நிலையதற்திற்கு நேரில் சென்று, தற்காலிக ஒதுக் கீட்டு கடிதத்தை பெற்று, அசல் சான்றிதழ் சரிபார்த்து உரிய கட்டணம் செலுத்தி, சேர்க்கையினை உறுதி செய்து கொள்ளலாம்.
இதற்கான கடைசி தேதி வரும் 12-ந் தேதி (நாளை) ஆகும். மேலும் விவரங் களுக்கு கீரம்பூர் அரசு ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையத்தை, தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.






