என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "namakkaldistrict: பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர் Involved in various murder cases"

    • சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு அகோரி சாமியார் உட்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை
    • தவமணி தலைமையிலான போலீசார் முஸ்தபாவை கைது செய்து திருச்செங்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, சிறை யில் அடைத்தனர்.


    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், சேலம் சாலை, பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் நேற்று மாலை, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கை யில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு அகோரி சாமியார் உட்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை, போலீஸ் நிலை யம் அழைத்து வந்து தீவிர விசாரணை செய்தனர். இதில், அந்த அகோரி சாமியார் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சாமியார் வேடத்தில் இருந்தவர், சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடி முஸ்தபா என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் மீது நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து போலீசாரிடம் முஸ்தபா கூறுகையில், தன்னை கொலை வழக்குகளில் போலீசார் தொடர்ந்து தேடி வந்ததையடுத்து, காசிக்குச் சென்று முஸ்தபா என்கிற முகாமது ஜிகாத் என்ற தனது பெயரை ஜிக்லினத் அகோரி என மாற்றிக்கொண்டு சாமியாராக ஊர் ஊராக சுற்றித் திரிந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக அவர் போலீசில் தெரிவித்துள்ளார்.

    மேலும் திருச்செங்கோடு புறநகர் போலீஸ் நிலையத்தில் 2 கொலை குற்றங்களிலும், ராசிபுரத்தில் நடந்த 2 கொலை வழக்குகளிலும், பரமத்தியில் நடந்த வழிப்பறி வழக்கிலும் மற்றும் சேலம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த கொலை வழக்கு களிலும் சம்பந்தப்பட்டுள்ள தாகவும் கூறியுள்ளார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் முஸ்தபாவை கைது செய்து திருச்செங்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, சிறை யில் அடைத்தனர். இவரை கைது செய்யும்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்ட ர்கள் இளமுருகன், தங்க வடிவேல், போலீசார் திருமலைவாசன், சின்னதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×