என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • நாமக்கல் (தெற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் நேற்று திடீர் வாகன சோதனை மேற்கொண்டார்.
    • உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட கழிவுநீர் வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாமக்கல் (தெற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் நேற்று திடீர் வாகன சோதனை மேற்கொண்டார்.

    இந்த வாகன சோதனை யில் பள்ளி குழந்தைகளை அனுமதியின்றி ஏற்றிச் சென்ற வாகனம் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட கழிவுநீர் வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    உரிய அனுமதியின்றி 13 பள்ளி குழந்தைகளை அரசு பள்ளிக்கு அழைத்துச் சென்ற தனியார் ஆம்னி வேன், பறிமுதல் செய்யப் பட்டு பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    மேலும் தார்பாய் போடாமல் சென்ற 2 மணல் லாரிகளுக்கு தணிக்கை சீட்டு வழங்கி, தார்ப்பாய் போட்டபின் பயணத்தை தொடர அனுமதிக்கப் பட்டது. அனுமதியின்றி ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம், உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட மேக்சி கேப் ஆகியவற்றுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது.

    இந்த வாகன சோதனை பரமத்திவேலூர் வட்டார பகுதியில் தொடர்ந்து நடைபெறும் என நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார். 

    • கொல்லிமலை செங்கரையில், அரசு ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது.
    • இந்த பள்ளியில் உள்ள விடுதிக்கு சமையல் செய்திட 6 பணி யாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலி கமாக நியமிக்கப்பட உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை செங்கரை யில், அரசு ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள விடுதிக்கு சமையல் செய்திட 6 பணி யாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலி கமாக நியமிக்கப்பட உள்ளனர்.

    சமையல் கலை தெரிந்த பழங்குடியினர் இனத்தி லிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது உச்ச வரம்பு 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    சமையலர் (ஆண்) 2 பணியிடத்திற்கு மாத தொகுப்பூதியம் ரூ. 12 ஆயிரம் வீதம் வழங்கப்ப டும். உதவி சமையலர் (பெண்) 3 பணியிடங்க ளுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 12 ஆயி ரம் வீதம் வழங்கப்படும். துப்புரவா ளர் (ஆண், பெண்) 1 பணியிடத்திற்கு மாத தொகுப்பூதியம் ரூ. 5,200 வழங்கப்படும்.

    இந்த பணியிடங்களுக்கு விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை, வருகிற 31-ந் தேதி மாலை 5 மணிக்குள் கொல்லிமலை, தாலுகா அலுவலகத்தில் உள்ள, பழங்குடியினர் நல திட்ட அலுவலகம் அல்லது செங்கரை, ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு வந்துசேருமாறு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக் கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
    • தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதி காலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக் கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

    தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயி கள் விற்பனை செய்கின்ற னர். நாமக்கல் உழவர் சந்தையில் இன்று காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

    கத்தரி ஒரு கிலோ ரூ.40 முதல் 60, தக்காளி ரூ.80 முதல் 90, வெண்டை ரூ.28 முதல் 32, அவரை ரூ.40 முதல் 70, கொத்தவரை ரூ.40, முருங்கைக்காய் ரூ.50, முள்ளங்கி ரூ.36, புடல் ரூ.28 முதல் 32, பாகல் ரூ.50 முதல் 70, பீர்க்கன் ரூ.40 முதல் 56, வாழைக்காய் ரூ.24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.25, பூசணி ரூ.20, சுரைக்காய் (1) ரூ.10 முதல் 15, மாங்காய் ரூ.20, தேங்காய் ரூ.25, எலுமிச்சை ரூ.50, கோவக்காய் ரூ.40, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.50 முதல் 70, பெ.வெங்காயம் ரூ.25 முதல் 27, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.70 முதல் 90, கேரட் ரூ.60 முதல் 64, பீட்ரூட் ரூ.40 முதல் 50, உருளைக்கிழங்கு ரூ.25 முதல் 27, சவ்சவ் ரூ.28, முட்டைகோஸ் ரூ.16 முதல் 20, காளிபிளவர் ரூ.15 முதல் 30.

    குடைமிளகாய் ரூ.50, கொய்யா ரூ.30 முதல் 40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூர வள்ளி ரூ.50, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ.50, மல்லிதழை ரூ.50, புதினா ரூ.30, இஞ்சி ரூ.300, பூண்டு ரூ.50, பச்சை மிளகாய் ரூ.60 முதல் 80, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.30, மக்காச்சோளம் ரூ. 30.

    வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 70, சேனைக்கிழங்கு ரூ. 60, கருணைக்கிழங்கு ரூ.50, பப்பாளி ரூ.25, நூல்கோல் ரூ.32 முதல் 36, பச்சை பட்டாணி ரூ.70, நிலக்கடலை ரூ.50, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.50, மாம்பழம் ரூ.60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.40, தர்பூசணி ரூ. 20, விலாம்பழம் ரூ.40.

    • கேரவேன் பார்க் இயக்கு பவர்கள் உள்ளிட்ட சுற்றுலா சம்மந்தமான தொழிலில் ஈடுபட்டுள்ள வர்கள் அனைவரும், https//www.tntourismtorscom என்ற சுற்றுலாத்துறை வெப்சைட்டில் தங்களின் விபரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
    • பதிவு செய்யாமல் இயங்கும் தொழில் நிறு வனங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தி லுள்ள உணவு மற்றும் உறைவிட சுற்றுலாத்திட்டம் , சாகச சுற்றுலா இயக்கு பவர்கள், கூடார சுற்றுலா இயக்குபவர்கள் , கேரவேன் சுற்றுலா இயக்குபவர்கள், கேரவேன் பார்க் இயக்கு பவர்கள் உள்ளிட்ட சுற்றுலா சம்மந்தமான தொழிலில் ஈடுபட்டுள்ள வர்கள் அனைவரும், https//www.tntourismtorscom என்ற சுற்றுலாத்துறை வெப்சைட்டில் தங்களின் விபரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

    பதிவு செய்யாமல் இயங்கும் தொழில் நிறு வனங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பதிவு செய்வது மற்றும் வழிமுறைகள் குறித்த அரசாணைகள் மேற்குறிப்பிட்ட வெப்சைட்டில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

    கூடுதல் தகவல்களுக்கு, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடு தல் கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை அணுகலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 55), கூலி தொழிலாளி.
    • நாமக்கல்லில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக சென்ற கார், பொன்னுசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 55), கூலி தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் பரமத்தியில் இருந்து வேலூர் நோக்கி சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, இவரது பின்னால் நாமக்கல்லில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக சென்ற கார், பொன்னுசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதையடுத்து கார் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    கார் மோதியதில் பொன்னுசாமி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி உயிரிழந்தார். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலை மறைவான கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    • பரமத்திவேலூர் தாலுகா இருக்கூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
    • இம்முகாமிற்கு பரமத்திவேலூர் எம்.எல்.ஏ. சேகர் முன்னிலை வகித்தார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா இருக்கூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு பரமத்திவேலூர் எம்.எல்.ஏ. சேகர் முன்னிலை வகித்தார். முகாமிற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமை தாங்கி 303 பயனாளிகளுக்கு ரூ4.33 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இதனைத்தொடர்ந்து ரூ.1.19 இலட்சம் மதிப்பீட்டில் பஞ்சபாளையம் புது காலனியில் சாலை அமைக்கும் பணிக்கும், ரூ.4.79 லட்சம் மதிப்பீட்டில் இருக்கூர் கிராமம், வடக்கு செல்லப்பம்பாளையம் குமரன் நகரில் சாலை அமைக்கும் பணிக்கும், ரூ.23.96 லட்சம் மதிப்பிட்டில் வலசுபாளையம் கிராமத்தில் மண்சாலையை ஒரடுக்கு கப்பி சாலையாக அமைக்கும் பணிக்கும், ரூ.23.96 இலட்சம் மதிப் பிட்டில் வலசுப்பாளை யத்தில் மண்சாலையை ஓரடுக்கு கப்பி சாலையாக அமைக்கும் பணிக்கும் மொத்தம் ரூ.53.90 லட்சம் மதிப்பிட்டில் 4 புதிய திட்டப்பணிகளுக்கு நிர்வாக அனுமதியினையும் கலெக்டர் டாக்டர் உமா வழங்கினார்.

    முன்னதாக வேளாண் பொறியியல் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்பு துறை, பட்டு வளர்ச்சி துறை, சமூக நலத்துறை, தாட்கோ, வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட துறை, முதல்- அமைச்சர் மற்றும் பிரதமரின் மருத்துவ அடையாள அட்டைகள் வழங்கும் முகாம் உள்ளிட்ட அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் கபிலர்மலை யூனியன் சேர்மன் ஜே.பி ரவி, கபிலக்குறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் ஜானகி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பிரபாகரன், மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) நடராஜன், வேளாண்மைத்துறை (இணை இயக்குநர்) துரை சாமி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ராமசாமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 440 காசுகளாக இருந்த முட்டை விலை, 445 காசுகளாக உயர்ந்தது.
    • முட்டை கோழி விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 78 ரூபாயாக நீடிக்கிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முட்டை உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் முட்டை விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 440 காசுகளாக இருந்த முட்டை விலை, 445 காசுகளாக உயர்ந்தது.

    பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 93 ரூபாயாக நீடிக்கும் என அறிவுறுத்தப்பட்டது. இதேபோல முட்டை கோழி விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 78 ரூபாயாக நீடிக்கிறது.

    • காவிரி ஆற்றில், வடகி ழக்கு பருவ மழையை முன்னிட்டு வேலா யுதம்பாளையம் தீயணைப் புதுறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
    • ஆற்றில் சிக்கிக் கொண்ட வர்களை எப்படி காப்பாற்றுவது? பல்வேறு வகை யான நிகழ்வுகள் குறித்து ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில், வடகி ழக்கு பருவ மழையை முன்னிட்டு வேலா யுதம்பாளையம் தீயணைப் புதுறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    இதில், தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு, காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, ஆற்றில் சிக்கிக் கொண்ட வர்களை எப்படி காப்பாற்று வது? காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டால் எப்படி மீட்பது? வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து கொண்டால், அவர்களை எப்படி காப்பாற் றுவது ? மரம் விழுந்தால் எப்படி தப்பிப்பது? உள்ளிட்ட பல்வேறு வகை யான நிகழ்வுகள் குறித்து ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது, பிளாஸ்டிக் போட்டை நடு காவிரி ஆற்றில் நங்கூரம் போட்டு நிறுத்தி பொதுமக்களை காப்பாற்றுவது போன்ற ஒத்திகைகளையும், வாழை மரங்கள், தென்னை மட்டைகள், வாட்டர் பாட்டில்கள், தண்ணீர் கேன்கள், ரப்பர் குடம், பிளாஸ்டிக் பேரல், லைப் ஜாக்கெட், கயிறு போன்ற வற்றின் மூலம் காவிரி ஆற்றில் ஒத்திகை பயிற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

    • விஜயநகர் காலனியில் வசித்து வருபவர் நவீன். பந்தல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி திவ்யா. இவர்களது மகன் பிரகாஷ் கண்ணன் (வயது 5), குமாரபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தான்.
    • வேகமாக வந்த கார் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், கத்தேரி பிரிவு சாலை அருகே உள்ள விஜயநகர் காலனியில் வசித்து வருபவர் நவீன். பந்தல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி திவ்யா. இவர்களது மகன் பிரகாஷ் கண்ணன் (வயது 5), குமாரபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தான்.

    இந்த நிலையில், நேற்று மாலை சிறுவனின் தாத்தா கோவிந்தன், தாய் திவ்யா இருவரும் மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் மீது பிரகாஷ்கண்ணனை உட்கார வைத்துகொண்டு சேலம் - கோவை புறவழிச்சாலையில் கத்தேரி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது, பின்னால் வேகமாக வந்த கார் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் நிற்காமல் சென்று விட்டது.

    இதனிடையே பலத்த காயமடைந்த 3 பேரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே மாணவன் பிரகாஷ் கண்ணன் உயிரிழந்தான்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவிந்தன், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திவ்யா குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்துக்கு காரணமான கார் டிரைவரை தேடி வருகின்றனர். 

    • ராமதேவம் மகாகணபதி , பொன்காளியம்மன், கருப்பண்ணசாமி, வாழையடி முத்துசாமி, பெரியசாமி, சப்த கன்னிமார்கள் மற்றும் பரி வார தெய்வங்களின் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 47 நாட்க ளாக தொடர்ந்து மண்டலா பிஷேகம் நடைபெற்று வந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ராமதேவம் மகாகணபதி , பொன்காளியம்மன், கருப்பண்ணசாமி, வாழையடி முத்துசாமி, பெரியசாமி, சப்த கன்னிமார்கள் மற்றும் பரி வார தெய்வங்களின் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 47 நாட்க ளாக தொடர்ந்து மண்டலா பிஷேகம் நடைபெற்று வந்தது. இன்று 48 நாள் மண்டலபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளா கத்தில் 108 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு சங்குகளில் புனித நீர் ஊற்றப்பட்டு அதில் பல்வேறு வகையான மலர்களை போட்டு வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் அக்னி குண்டம் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதினார்கள். அதைத் தொடர்ந்து பொன்காளி யம்மன், கருப்பணசாமி, வாழையடி முத்துசாமி மற்றும் பரிவார தெய்வங்க ளுக்கு பால் , தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்ச னம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்க ளும், குடிப்பாட்டு மக்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    மண்டலாபிஷேக விழா வில் கலந்து கொண்ட பக்தர் கள் மற்றும் குடிப்பாட்டு மக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப் பட்டது. விழாவுக்கான ஏற்பா டுகளை குடிப்பாட்டு மக்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • ராசிபுரம் அருகே நாமகி ரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத் தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
    • ஆர்.சி.எம்.எஸ். சங்கம் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சார்பில் நடந்த ஏலங்களில் 580 மஞ்சள் மூட்டைகள் ரூ.29 லட்சத்து 22 ஆயிரத்து 475-க்கு ஏலம் விடப்பட்டது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகி ரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத் தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் அரியாக்க வுண்டம்பட்டி, நாமகிரிப் பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா உள்பட பல் வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஏலத்திற்கு மஞ்சளை கொண்டு வந்திருந்தனர்.

    அதேபோல் ஒடுவன் குறிச்சி, ஈரோடு, சேலம், ஆத்தூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மஞ்சளை ஏலம் எடுப்பதற்காக வந்தி ருந்தனர். இதில் விரலி ரகம் 330 மூட்டைகளும், உருண் டைய ரகம் 100 மூட்டைகளும், பனங்காலி ரகம் 20 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன.

    விரலி ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 322 முதல் அதிகப்பட்சமாக ரூ.9 ஆயிரத்து 999-க்கும், உருண்டை ரகம் குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரத்து 138-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 312-க்கும், பனங்காலி ரகம் குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரத்து 999-க்கும், அதிகப்பட்சமாக ரூ.14 ஆயிரத்து 269-க்கும் ஏலம் விடப்பட்டது. மொத்தம் 450 மஞ்சள் மூட்டைகள் ரூ.22 லட்சத்துக்கு ஏலம் போ னதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

    அதேபோல் நாமகிரிப் பேட்டையில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த மஞ்சள் ஏலத்தில் 130 மஞ்சள் மூட்டைகள் ரூ.7 லட்சத்து 22 ஆயிரத்து 475-க்கு ஏலம் விடப்பட்டது. இதில் விரலி ரகம் குறைந்த பட்சம் ரூ.8 ஆயிரத்து 802 முதல் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்து 705-க்கும் ஏலம் விடப்பட்டது. உருண்டை ரகம் குறைந்த பட்சம் ரூ. 8 ஆயிரத்து 399 முதல் அதிகபட்சமாக ரூ. 8 ஆயிரத்து 802-க்கும் ஏலம் விடப்பட்டது.

    இதன்படி, ஆர்.சி.எம்.எஸ். சங்கம் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சார்பில் நடந்த ஏலங்களில் 580 மஞ்சள் மூட்டைகள் ரூ.29 லட்சத்து 22 ஆயிரத்து 475-க்கு ஏலம் விடப்பட்டது.

    • வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் நீண்ட வருடங்களாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
    • தற்போது, பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத் திற்கு சொந்த கட்டிடம் கட்டு வதற்காக அரசிடம் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் விரைவில் புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தியில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் நீண்ட வருடங்களாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

    புதிய வாகன பதிவு மற்றும் தரச் சான்றிதழ் பெற வரும் கனரக வாகனங்களை பரமத்தியில் இருந்து வேலூர் செல்லும் பிரதான சாலையில் நிறுத்தி ஆய்வு மேற்கொள்வதால் போக்குவரத்து பாதிப்பும் விபத்தும் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இங்கே தினசரி வாகன ஓட்டுனர் உரிமம் பெற மற்றும் பழகுனர் உரிமை பெற வருகின்றனர். தற்போது, பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத் திற்கு சொந்த கட்டிடம் கட்டு வதற்காக அரசிடம் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் விரைவில் புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது.

    பரமத்தியில் பெரும் பாலான அரசு அலுவலகங்கள் பரமத்தி மெயின் சாலையிலேயே உள்ளதால், இப்பகுதியில் போக்கு வரத்து நெரிசலும் வாகன விபத்தும் ஏற்படுகிறது. இந்த அரசு அலுவலகங்க ளுக்கு வேலை நாட்களில் தினசரி 10 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் வந்து செல்கின்றனர்.

    மேலும் திருச்செங்கோடு செல்லும் பிரதான சாலை மற்றும் கபிலர்மலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையாக பரமத்தி உள்ளதால் மக்கள் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது.

    இதனால் சேலம், கரூர் செல்லும் தனியார் பஸ்கள், பரமத்தி நகருக்குள் நுழைவதை தவிர்த்து பைபாஸ் சாலையிலே சென்று விடுகின்றன.

    தற்போது வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்திற்கு இடம் தேர்வு செய்ய ஆய்வு நடைபெற்று வருகிறது. மேலும் போக்குவரத்து மிகுந்த பரமத்திக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் புதிய கட்டடம் கட்டினால், மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    அதனால் மக்களின் நலன் கருதி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பரமத்தி வேலூரில் அமைய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து பரமத்தி வேலூர் வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் முருகனிடம் கேட்டபோது, தற்போதுள்ள வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்கு வாகன ஆய்வு மேற்கொள் வதற்கு என தனி இடம் ஒதுக்கப்படாமல் உள்ளதால் சாலை ஓரத்தில் நிறுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை உள்ளது.

    சொந்த கட்டிடம் கட்டுவதற்கான ஒப்புதல் பெறப் பட்டுள்ள நிலையில் விரைவில் புதிய அலுவலகம் கட்டப்பட்டு, அப்பகுதியில் ஆய்வுக்கான தனி இடம் அமைக்கப்படும். அதுவரை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள் ளப்படும் என கூறினார்.

    ×