என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் காலை முதல் மாலை வரை அசைவ விருந்து வழங்கப்பட்டது.
    • அசைவ விருந்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ராமதேவம் பொன்காளியம்மன், கருப்பண்ணசாமி, வாழையடி முத்துசாமி, பெரியசாமி, சப்த கன்னிமார்கள் மற்றும் பரிவார தெய்வங்களின் ஆலய மகா கும்பாபிஷேக விழா கடந்த மே மாதம் 25-ந் தேதி நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 47 நாட்களாக தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்தது. நேற்று 48-வது நாள் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் 108 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு, சங்குகளில் புனித நீர் ஊற்றப்பட்டு அதில் பல்வேறு வகையான மலர்களை போட்டு வைத்தனர்.

    பின்னர் காளியம்மன், கருப்பண்ணசாமி ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று குடிப்பாட்டு மக்கள் சார்பில் தலைக்கட்டு பொங்கல் விழா நடைபெற்றது.

    இதில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிப்பாட்டு மக்கள் தங்கள் நேர்த்திக்கடனாக கருப்பண்ணசாமிக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 2,500-க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகளை பலியிட்டனர். பின்னர் பிரமாண்டமான சமையல் கூடம் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு ஆடு, கோழிகளின் கறியை சமைத்து கருப்பண்ணசாமிக்கு படையல் போட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் காலை முதல் மாலை வரை அசைவ விருந்து வழங்கப்பட்டது. இந்த அசைவ விருந்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் குடிப்பாட்டு மக்கள் செய்திருந்தனர். கோவில் வளாகமே விழாக்கோலம் பூண்டது. வேலகவுண்டன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மகாராஷ்டிராவில் லாரியில் செல்லும் போது, கடந்த 7-ந் தேதி சாலை விபத்து ஏற்பட்டு, அவரது கால் துண்டாகி விட்டது.
    • மருத்துவ உதவிக்கு நகை அடமானம் வைக்க சென்ற தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக மகேஸ்வரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்சங்கோடு அடுத்த எலச்சிபாளையம் அருகே நல்லம்பாளையத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் சங்கர் (வயது 50). இவர் மகாராஷ்டிராவில் லாரியில் செல்லும் போது, கடந்த 7-ந் தேதி சாலை விபத்து ஏற்பட்டு, அவரது கால் துண்டாகி விட்டது.

    இதையடுத்து மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் டிரைவர் சங்கரின் மருத்துவ செலவுக்காக, அவரது வீட்டில் உள்ள 3 பவுன் நகையை அடமானம் வைக்க அவரது மனைவி மகேஸ்வரி (40), எலச்சிப்பாளையம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றுள்ளார்.

    இந்த நிலையில், மகேஸ்வரி அடமானம் வைக்க கொடுத்த நகை போலி என்று கூறி, வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் வாங்க மறுத்து விட்டனர். மேலும் அவரை அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    மருத்துவ உதவிக்கு நகை அடமானம் வைக்க சென்ற தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக மகேஸ்வரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் தெரிவித்தனர்.

    இதனை அடுத்து, ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் முன்னிலையில் எலச்சிபாளையம் வங்கி முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலை 11 மணி முதல் மாலை 3.30 வரை போராட்டத்தில் ஈடுபட்டும், வங்கி நிர்வாகத்தினர் இதை கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், எலச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மெயின் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து எலச்சிபாளையம் போலீஸ் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் செல்லதுரை, கிராம நிர்வாக அலுவலர் சுகந்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில், இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணுவதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • குமாரபாளையத்தில் பூஜ்ய கழிவுநீர் சுத்திகரிப்பு முறை இயக்க ஆலோசனை கூட்டம் மாவட்ட மாசுக்கட்டுபாட்டுத் துறை அலுவலர் மணி வண்ணன் தலைமையில் நடைபெற்றது.
    • இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் உமா பங்கேற்று பேசினார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பூஜ்ய கழிவுநீர் சுத்திகரிப்பு முறை இயக்க ஆலோசனை கூட்டம் மாவட்ட மாசுக்கட்டுபாட்டுத் துறை அலுவலர் மணி வண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் உமா பங்கேற்று பேசினார்.

    கூட்டத்தில் பறக்கும் படை சுற்றுச்சூழல் பொறி யாளர் வனஜா, பள்ளி பாளையம், குமாரபாளை யம், நாமக்கல் நகராட்சி ஆணையர்கள் தாமரை, ராஜேந்திரன்(பொ) சென்னுகிருஷ்ணன், மாசுக்கட்டுபாட்டு வாரிய உதவி பொறியாளர்கள் சந்தான கிருஷ்ணன், குண சேகரன், உதயன் சாயப் பட்டறை சங்க நிர்வாகிகள் அசோகன், பிரபாகரன் உள்ளிட்ட உட்பட அரசுத் துறை அலுவலர்கள், சாய மற்றும் சலவை தொழிற் சாலை உரிமையாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    பின்னர் கலெக்டர் உமா நிருபர்களிடம் கூறியதாவது:-

    சாயப்பட்டறை கழிவுகள் காவிரி ஆற்றில் கலப்பதாக புகார்கள் வரபெற்றன. இதன் அடிப்படையில் பல்வேறு சாயப்பட்டறை களில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. சாயப்பட்டறை மற்றும் சலவைத் தொழில் நலிவடையாமலும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம், பொதுமக்களின் சுகாதாரம் பாதிப்படையாமல் இருக்க பூஜ்ய கழிவு நீர் சுத்திகரிப்பு முறை இயக்கத்தினை நல்ல முறையில் நடைமுறைப்படுத்துவது அவசியமாகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே பூஜ்ய கழிவு நீர் சுத்திகரிப்பு முறையினை தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் 122 சலவை மற்றும் சாயப்பட்டறைகள் உள்ளன. மேலும் இந்த தொழிலை பாதுகாத்திட தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் நடந்தாய் வாழி காவேரி என்ற திட்டத்தின் கீழ் 303 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கையினை தயார் செய்து தமிழ்நாடு அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பரிசீலினை செய்து நிதி ஒப்பளிப்பிற்கு மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

    நிதி ஒப்புதல் செய்யப்பட்டவுடன் தேர்வு செய்யப்பட்டுள்ள பல்லக்கா பாளையம், எலந்தகுட்டை மற்றும் சவுதாபுரம் ஆகிய இடங்களில் பொது சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த பொது சுத்திகரிப்பு மையம் அமைப்பதன் மூலம் சலவை மற்றும் சாயப்பட்டறை கழிவு நீரற்ற சுத்திகரிப்பு முறை உறுதி செய்யப்படும். அதன் அடிப்படையில் பொது சுத்திகரிப்பு மையம் அமைக்கவுள்ள இடத்தினை நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மத்திய, மாநில அரசின் நிதி ஒதுக்கீடு பெறுவதற்காக அனைத்து பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் பொது சுத்திகரிப்பு மையம் அமைத்து சலவை மற்றும் சாயப்பட்டறைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வேலூரில் உள்ள முக்கிய சாலைகளில் 4 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகவும், விபத்துகள் ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் செல்வதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சிறுவர்களிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டக்கூடாது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில், சில இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை பள்ளி மற்றும் கல்லூரி தொடங்கும், விடும் நேரங்களில் அதிவேகமாகவும், அனைவரையும் அச்சுறுத்தும் வகையிலும் ஓட்டி செல்கின்றனர்.

    இதனால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் சாலையில் நடந்தும், சைக்கிள்களில் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வேலூரில் உள்ள முக்கிய சாலைகளில் 4 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகவும், விபத்துகள் ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் செல்வதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில், போலீசார் மோகனூர் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாக ஓட்டிச் சென்ற 16 மற்றும் 17 வயது நிரம்பிய 4 சிறுவர்களை பிடித்து அவர்கள் ஓட்டி வந்த 4 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும், சிறுவர்களிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டக்கூடாது. அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுவதால் விபத்து ஏற்படும் என்பதை எடுத்துக் கூறி அவர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டினால் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அவர்களது பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    • கிருத்திகையை முன்னிட்டு பரமத்திவேலூர் பகுதி முருகன் கோவில்களில் சிறப்பு ஆராதனையும் 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள பாலமுருகனுக்கு ஆனிமாத கிருத்திகையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிகார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவில், கபிலர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர் கோவில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், ராஜா சுவாமி கோவில் உள்ள ராஜா சுவாமி, பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன், மற்றும் சுள்ளிப்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வான சமேத சுப்பிரமணியர் கோவில் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உடல் நலம் பாதிப்பு.
    • குருசாமிபாளையம் அரசு மருத்துவமனையில் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குருசாமி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    இதில், 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்த குருசாமிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அங்கு மாணவ, மாணவிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

    மாணவர்களுக்கு தேவையான அடிப் படை வசதிகள் உள்ளனவா என்பதனை ஆய்வு

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காரைக்குறிச்சி கிராமத்தில் கட்டப்பட்டு ள்ள, பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தினை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது, குடிநீர், கழிவறை, சாய்தளம், மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதா என்பதை பார்வையிட்டார்.தொடர்ந்து மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியினை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு, மாணவர களுக்கு தேவையான அடிப் படை வசதிகள் உள்ளனவா என்பதனை ஆய்வு மேற் கொண்டார்.மேலும் குமரிபாளையம் கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தி னையும் கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு மேற் கொண்டார். இந்த ஆய்வின் போது மோகனூர் தாசில்தார் சுப்பிரமணியன், பிடிஓக்கள் அசோகன், சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி

    திருச்செங்கோடு:

    எலச்சிபாளையம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலமாக 600 விவசாயிகளுக்கு இடுபொருட்கள், தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி பெரியமணலியில் நடைபெற்றது. விழாவில் எலச்சிபாளையம் கிழக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளரும், அட்மா குழு தலைவருமான தங்கவேல் விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார். வேளாண்மை துறை துணை இயக்குனர் ஜெயமணி, வேளாண் அதிகாரிகள் ராஜதுரை, சக்திவேல், பெரியமணலி ஊராட்சி மன்ற தலைவர் சேகர், கட்சி நிர்வாகிகள் பெரியசாமி, மோகன், குழந்தைவேலு, விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • சவுந்தரவல்லி அம்பாள் உடனுறை சோமேஸ்வரர் மற்றும் லட்சுமி நாராயண பெருமாள் கோவில்கள் அமைந்துள்ளன.
    • சேந்தமங்கலம் சிவாலயம் அருகில் அமைந்துள்ள தெப்பக்குளம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் சுகாதார சீர்கேட்டுடன் நோய் பரப்பும் மையமாக திகழ்ந்து வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில், பிரசித்திபெற்ற சவுந்தரவல்லி அம்பாள் உடனுறை சோமேஸ்வரர் மற்றும் லட்சுமி நாராயண பெருமாள் கோவில்கள் அமைந்துள்ளன.

    சேந்தமங்கலம் சிவாலயம் அருகில் அமைந்துள்ள தெப்பக்குளம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் சுகாதார சீர்கேட்டுடன் நோய் பரப்பும் மையமாக திகழ்ந்து வருகிறது. மேலும் இது பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற முறையில் அமைந்துள்ளது.

    உப திருக்கோவில்களின் முதன்மையான உற்சவமாகிய மாசி மக திருத்தேர் விழாவின்போது, மாசி பவுர்ணமி அன்று சிவபெருமான் திருமண வைபவம் முடிந்தவுடன், குதிரை வாகனத்தில் சிவபெருமான் மற்றும் வரதராஜ பெருமாள் ஆகிய தெய்வங்கள் இந்த தெப்பக்குளம் அருகே எழுந்தருளி சிறப்பான வாண வேடிக்கை நடப்பது வழக்கமான ஒன்றாகும்.

    தெப்பக்குளத்தில் நேரடியாக பெரிய கழிவுநீர் கால்வாய் இணைக்கப்பட்டு பெருமளவில் கழிவுநீர் கலக்கப்பட்டு வருவதால், கோவிலின் தெப்பக்குளம் மிகவும் பாழ்பட்டு உள்ளது.

    கோவிலின் தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பதோடு இல்லாமல், பெருமளவு கழிவு பொருட்களும், குப்பை கூளங்களும் சேர்ந்து கழிவுநீர் தொடர்ந்து தேக்கப்பட்டு வருவதால், இந்தப் பகுதியை சுற்றிலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நிலத்தடி நீரின் தன்மையும் மாசுபட்டு வருகிறது.

    வருங்காலங்களில் விவசாயத்திற்கும் மற்றும் கால்நடை வளர்ப்புக்கும் தகுதியற்ற நீராக மாறுவதற்கான அபாயமும் உருவாகியுள்ளது. எனவே இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசின் இந்து சமய ஆட்சி துறையின் மூலம், மிகவும் சீர்கெட்டு கழிவு நீரால் நிரம்பி உள்ள, சேந்தமங்கலம் சிவாலய தெப்பக்குளத்தை தூய்மைப்படுத்தி விரைந்து சீரமைக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் முன்னாள் செயலாளர் டாக்டர் பாலாஜி, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளார்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே, சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ராசாம் பாளையம் சுங்கச்சாவடி பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை சேலம் மண்டல திட்ட இயக்குனர் கொல்லாரமேஷ் தலைமை வகித்தார்.

    பரமத்திவேலூர்:

    தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் சுதந்திர திரு நாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே, சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ராசாம் பாளையம் சுங்கச்சாவடி பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை சேலம் மண்டல திட்ட இயக்குனர் கொல்லாரமேஷ் தலைமை வகித்தார். தேசிய நெடுஞ்சாலை துறை ஆலோசனை குழு தலைவர் முரளி கிருஷ்ணா முன்னிலை வகித்தார்.

    சுங்கச்சாவடி திட்ட மேலாளர் செந்தில்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தி னர்களாக நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், நாமக்கல் (வடக்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், போக்குவரத்து ஆய்வாளர் சக்திவேல் ஆகி யோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    கீரம்பூர் முதல் கோனூர் கந்தம்பாளையம் வரை தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச் சிக்கான ஏற்பாடுகளை சாலை பாதுகாப்பு அதிகாரி சிவகாம சுந்தரம் செய்திருந்தார். நிகழ்ச்சியில் சுங்கச்சாவடி ஊழியர்கள், இந்திய தேசிய நெடுஞ்சா லைத்துறையினர் கலந்து கொண்டனர்

    • விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உரித்த தேங்காய்க்கு கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் வழங்க வேண்டும்.
    • தமிழக அரசே தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு அருகே மொளசி பகுதியில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உரித்த தேங்காய்க்கு கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் வழங்க வேண்டும், தமிழக அரசே தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும், கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 140 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் பெருமாள் தலைமை தாங்கினார். விவசாயிகள் பூபதி, ஆதிநாராயணன், நல்லா கவுண்டர், முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற னர். சாலையில் தேங்காயை உடைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

    • தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் நாமக்கல் ஆவின் சார்பாக இலவச சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • இதில் இருக்கூர் கிரா மத்தை சேர்ந்த கால்நடை விவசாயிகள் தங்களது கால்நடைகளை முகாமிற்கு கொண்டு வந்து தேவையான சிகிச்சைகளை பெற்று சென்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா இருக்கூர் பகுதியில் தமிழக அரசின் கால்நடை பரா மரிப்புத் துறை மற்றும் நாமக்கல் ஆவின் சார்பாக இலவச சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    இதில் இருக்கூர் கிரா மத்தை சேர்ந்த கால்நடை விவசாயிகள் தங்களது கால்நடைகளை முகாமிற்கு கொண்டு வந்து தேவையான சிகிச்சைகளை பெற்று சென்றனர். மொத்தம் 315 கால்நடைகள் பயனடைந்தன.

    இம்முகாமில் கன்றுகள் மற்றும் ஆட்டினங்களுக்கு குடற்புழு நீக்க மருந்துகள், சினை பருவத்தில் உள்ள பசு, எருமைகளுக்கு செயற்கை முறை கருவூட்ட்ல கள் செய்யப்பட்டன.

    சினை பிடிக்காத கால் நடைகளுக்கான சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட் டது. 49 கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டன.

    மேலும், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக கண்காட்சி அரங்கும் அமைக்கப்பட்டு கால்நடை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை நாமக்கல் மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் நடராஜன், திருச்செங்கோடு கோட்ட உதவி இயக்குநர் டாக்டர் அருண் பாலாஜி, கால்நடை நோய் புலனாய்வுத் துறை உதவி இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், ஆவின் உதவி மேலாண் இயக்குனர்கள் டாக்டர் சின்னுசாமி மற்றும் டாக்டர் முருகுசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் கபிலர்மலை கால்நடை மருந்தக கால்நடை மருத்துவர் ரவிச்சந்திரன் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் தனவேல், மணிவேல், செந்தில்குமார், சையது அஸ்லாம், ரமேஷ், ராஜ்குமார், சசிக்குமார் கால்நடை ஆய்வாளர் பொன்னம்மாள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சுரேஷ் மற்றும் துரைசாமி, செயற்கை முறை கருவூட்டல் பணியாளர் சதீஷ் குமார் உள்ளிட்ட கால்நடை மருத்து வக் குழுவினர் சிகிச்சை பணிகளை மேற்கொண்ட னர்.

    முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை இருக்கூர் பால் உற்பத்தியாளர் கூட்டு றவு சங்க செயலர் பழனி வேல், ராமசாமி மற்றும் இருக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி உள்ளிட் டோர் செய்திருந்தனர்.

    ×