என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தனியார் பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
- 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உடல் நலம் பாதிப்பு.
- குருசாமிபாளையம் அரசு மருத்துவமனையில் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குருசாமி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதில், 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்த குருசாமிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு மாணவ, மாணவிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
Next Story






