search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Request to repair pond"

    • சவுந்தரவல்லி அம்பாள் உடனுறை சோமேஸ்வரர் மற்றும் லட்சுமி நாராயண பெருமாள் கோவில்கள் அமைந்துள்ளன.
    • சேந்தமங்கலம் சிவாலயம் அருகில் அமைந்துள்ள தெப்பக்குளம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் சுகாதார சீர்கேட்டுடன் நோய் பரப்பும் மையமாக திகழ்ந்து வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில், பிரசித்திபெற்ற சவுந்தரவல்லி அம்பாள் உடனுறை சோமேஸ்வரர் மற்றும் லட்சுமி நாராயண பெருமாள் கோவில்கள் அமைந்துள்ளன.

    சேந்தமங்கலம் சிவாலயம் அருகில் அமைந்துள்ள தெப்பக்குளம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் சுகாதார சீர்கேட்டுடன் நோய் பரப்பும் மையமாக திகழ்ந்து வருகிறது. மேலும் இது பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற முறையில் அமைந்துள்ளது.

    உப திருக்கோவில்களின் முதன்மையான உற்சவமாகிய மாசி மக திருத்தேர் விழாவின்போது, மாசி பவுர்ணமி அன்று சிவபெருமான் திருமண வைபவம் முடிந்தவுடன், குதிரை வாகனத்தில் சிவபெருமான் மற்றும் வரதராஜ பெருமாள் ஆகிய தெய்வங்கள் இந்த தெப்பக்குளம் அருகே எழுந்தருளி சிறப்பான வாண வேடிக்கை நடப்பது வழக்கமான ஒன்றாகும்.

    தெப்பக்குளத்தில் நேரடியாக பெரிய கழிவுநீர் கால்வாய் இணைக்கப்பட்டு பெருமளவில் கழிவுநீர் கலக்கப்பட்டு வருவதால், கோவிலின் தெப்பக்குளம் மிகவும் பாழ்பட்டு உள்ளது.

    கோவிலின் தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பதோடு இல்லாமல், பெருமளவு கழிவு பொருட்களும், குப்பை கூளங்களும் சேர்ந்து கழிவுநீர் தொடர்ந்து தேக்கப்பட்டு வருவதால், இந்தப் பகுதியை சுற்றிலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நிலத்தடி நீரின் தன்மையும் மாசுபட்டு வருகிறது.

    வருங்காலங்களில் விவசாயத்திற்கும் மற்றும் கால்நடை வளர்ப்புக்கும் தகுதியற்ற நீராக மாறுவதற்கான அபாயமும் உருவாகியுள்ளது. எனவே இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசின் இந்து சமய ஆட்சி துறையின் மூலம், மிகவும் சீர்கெட்டு கழிவு நீரால் நிரம்பி உள்ள, சேந்தமங்கலம் சிவாலய தெப்பக்குளத்தை தூய்மைப்படுத்தி விரைந்து சீரமைக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் முன்னாள் செயலாளர் டாக்டர் பாலாஜி, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளார்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×