search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையம் பகுதியில் 3 இடங்களில் சாய கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்
    X

    ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் உமா பேசிய காட்சி.  

    குமாரபாளையம் பகுதியில் 3 இடங்களில் சாய கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்

    • குமாரபாளையத்தில் பூஜ்ய கழிவுநீர் சுத்திகரிப்பு முறை இயக்க ஆலோசனை கூட்டம் மாவட்ட மாசுக்கட்டுபாட்டுத் துறை அலுவலர் மணி வண்ணன் தலைமையில் நடைபெற்றது.
    • இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் உமா பங்கேற்று பேசினார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பூஜ்ய கழிவுநீர் சுத்திகரிப்பு முறை இயக்க ஆலோசனை கூட்டம் மாவட்ட மாசுக்கட்டுபாட்டுத் துறை அலுவலர் மணி வண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் உமா பங்கேற்று பேசினார்.

    கூட்டத்தில் பறக்கும் படை சுற்றுச்சூழல் பொறி யாளர் வனஜா, பள்ளி பாளையம், குமாரபாளை யம், நாமக்கல் நகராட்சி ஆணையர்கள் தாமரை, ராஜேந்திரன்(பொ) சென்னுகிருஷ்ணன், மாசுக்கட்டுபாட்டு வாரிய உதவி பொறியாளர்கள் சந்தான கிருஷ்ணன், குண சேகரன், உதயன் சாயப் பட்டறை சங்க நிர்வாகிகள் அசோகன், பிரபாகரன் உள்ளிட்ட உட்பட அரசுத் துறை அலுவலர்கள், சாய மற்றும் சலவை தொழிற் சாலை உரிமையாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    பின்னர் கலெக்டர் உமா நிருபர்களிடம் கூறியதாவது:-

    சாயப்பட்டறை கழிவுகள் காவிரி ஆற்றில் கலப்பதாக புகார்கள் வரபெற்றன. இதன் அடிப்படையில் பல்வேறு சாயப்பட்டறை களில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. சாயப்பட்டறை மற்றும் சலவைத் தொழில் நலிவடையாமலும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம், பொதுமக்களின் சுகாதாரம் பாதிப்படையாமல் இருக்க பூஜ்ய கழிவு நீர் சுத்திகரிப்பு முறை இயக்கத்தினை நல்ல முறையில் நடைமுறைப்படுத்துவது அவசியமாகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே பூஜ்ய கழிவு நீர் சுத்திகரிப்பு முறையினை தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் 122 சலவை மற்றும் சாயப்பட்டறைகள் உள்ளன. மேலும் இந்த தொழிலை பாதுகாத்திட தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் நடந்தாய் வாழி காவேரி என்ற திட்டத்தின் கீழ் 303 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கையினை தயார் செய்து தமிழ்நாடு அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பரிசீலினை செய்து நிதி ஒப்பளிப்பிற்கு மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

    நிதி ஒப்புதல் செய்யப்பட்டவுடன் தேர்வு செய்யப்பட்டுள்ள பல்லக்கா பாளையம், எலந்தகுட்டை மற்றும் சவுதாபுரம் ஆகிய இடங்களில் பொது சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த பொது சுத்திகரிப்பு மையம் அமைப்பதன் மூலம் சலவை மற்றும் சாயப்பட்டறை கழிவு நீரற்ற சுத்திகரிப்பு முறை உறுதி செய்யப்படும். அதன் அடிப்படையில் பொது சுத்திகரிப்பு மையம் அமைக்கவுள்ள இடத்தினை நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மத்திய, மாநில அரசின் நிதி ஒதுக்கீடு பெறுவதற்காக அனைத்து பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் பொது சுத்திகரிப்பு மையம் அமைத்து சலவை மற்றும் சாயப்பட்டறைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×