search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருச்செங்கோடு அருகே விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டம்
    X

    தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். 

    திருச்செங்கோடு அருகே விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டம்

    • விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உரித்த தேங்காய்க்கு கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் வழங்க வேண்டும்.
    • தமிழக அரசே தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு அருகே மொளசி பகுதியில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உரித்த தேங்காய்க்கு கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் வழங்க வேண்டும், தமிழக அரசே தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும், கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 140 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் பெருமாள் தலைமை தாங்கினார். விவசாயிகள் பூபதி, ஆதிநாராயணன், நல்லா கவுண்டர், முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற னர். சாலையில் தேங்காயை உடைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

    Next Story
    ×