என் மலர்
நாமக்கல்
- வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.
- தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த மாணவர்கள், தற்போது நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மை தேர்வு எழுதியுள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.
தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த மாணவர்கள், தற்போது நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மை தேர்வு எழுதியுள்ளனர். குரூப் 4 தேர்வில் 17 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வாகியுள்ளனர்.
மேலும், 2022-ல், சீருடைப்பணியாளர்கள் எஸ்.ஐ., தேர்வில் 5 பேர், போலீஸ் தேர்வில் 17 பேர் என, மொத்தம் 22 பேர் தேர்ச்சி பெற்று, தற்போது பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள, டி.என்.பி.எஸ்.சி, குரூப் 1, 2, 4 தேர்விற்கு, இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா தலைமை வகித்து வகுப்பை தொடங்கி வைத்தார்.
இப்பயிற்சி வகுப்பில், மாவட்டம் முழுவதும் இருந்து, 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப் பித்திருந்தனர். முதல் நாளான நேற்று 73 பேர் கலந்து கொண்டனர்.
இது குறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா கூறியதாவது:
டி.என்.பி.எஸ்.சி, குரூப் 1, 2, 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தற்போது தொடங்கி உள்ளது. 6 மாதத்துக்கு தொடர்ந்து இப்பயிற்சி வகுப்பு நடைபெறும்.
இந்த இலவச நேரடி பயிற்சி வகுப்பு, தினமும் காலை 10.30 முதல், மதியம் 1.30 மணி வரை நடக்கும். ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுனர்களைக் கொண்டு இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
வாரம் தோறும், செவ்வாய், வெள்ளிக் கிழமை மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். தினமும், பயிற்சி தாள் வழங்கப்படும். இவற்றை சிறந்த முறையில் பயன்படுத்தி பயிற்சி செய்தால், போட்டித் தேர்வில் வெற்றி பெறலாம் என கூறினார்.
- நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மையும் அதனை சார்ந்த தொழில்களும் முக்கிய பங்கு வகிக்கிறது.
- மக்கள் தொகையில் 65 முதல் 75 சதவீதம் பேர் விவ சாயத்தை தங்கள் வாழ்வா தாரமாக கொண்டுள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மையும் அதனை சார்ந்த தொழில்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்கள் தொகையில் 65 முதல் 75 சதவீதம் பேர் விவ சாயத்தை தங்கள் வாழ்வா தாரமாக கொண்டுள்ளனர்.
மேலும் வளர்ந்து வரும் மக்கள் தெகைக்கு தேவை யான உணவு மற்றும் உணவுப் பொருட்களின் பாதுகாப்பினை உறுதிப் படுத்திட இயற்கை விவசா யம் செய்து, நஞ்சில்லா உணவு பொருட்களை உற்பத்தி செய்வதில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மிக முக்கிய அங்கமாக விளங்கு கிறது.
வேதியியல் பொருட் களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் மண்ணும் நீரும் நச்சுத் தன்மை அடைந்து மனித வாழ்வு நலிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்ப தால், இதனை தவிர்க்கும் விதமாக இயற்கையான எருவைப் பயன்படுத்தி ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் இல்லாமல் வேளாண்மை செய்யும் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு அங்கக வேளாண்மை கொள்கை அண்மையில் வெளியிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள், பண்ணை மகளிர், மாணவர்களி டையே போதிய விழிப்பு ணர்வு ஏற்படுத்துதல் மற்றும் அங்க வேளாண் மையை ஊக்குவிக்க மாவட்ட மற்றும் வட்டார அளவில் விவசாயிகளுடன் கூடிய குழுக்கள் அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கக வேளாண்மையை ஊக்கு விக்கும் வகையில், பாரம் பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல் படுத்த திட்டமிடப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்திற்கு 15 வட்டா ரங்களில் 400 எக்டர் பரப்பளவில் 20 தொகுப்பு கள் உருவாக்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அங்கக சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், சான்று கட்டணமான ெஹக்டருக்கு ரூ. 2,000 வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் 1 எக்டருக்கு குறைவாக உள்ள விவசாயிகளும் இணைந்து பயன்பெறலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் விளைவிக்கப்படும் உணவு பொருள்கள் மனித உடலுக்கு ஊறு விளை விக்காத காரணத்தினால் அதிக அளவில் மக்களிடம் வரவேற்பையும் அதிக லாபத்தையும் ஈட்டித் தரும் திட்டமாகும்.
இத்திட்டம் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள விவசாயிகள் அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவல கத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கூறியுள்ளார்.
- ஒருங்கிணைந்த பண்ணைய சாகுபடி முறைகள் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி, கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதா மணி தலைமையில் நடைபெற்றது.
- மானாவாரியில் பயிர் சாகுபடியுடன் விவசாயிகள் இதர வருவாய் ஈட்ட வேண்டியதன் அவசியத்தை அவர் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரம், பெருங்குறிச்சி ஊராட்சிக் குட்பட்ட கருந்தேவன்பா ளையம் கிராமத்தில் உள்ள கால்நடை மருந்தகத்தில் மானாவாரியில் ஒருங்கி ணைந்த பண்ணைய சாகுபடி முறைகள் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி, கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதா மணி தலைமையில் நடைபெற்றது.
மானாவாரியில் பயிர் சாகுபடியுடன் விவசாயிகள் இதர வருவாய் ஈட்ட வேண்டியதன் அவசியத்தை அவர் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார். திருச்சி வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் ஷீபா ஜாஸ்மின், மானாவாரி சாகுபடியின் அங்கங்களான பயிர் சாகுபடி முறைகள், இயற்கை உரம் தயார் செய் தல் குறித்தும், திருச்செங் கோடு கால்நடை உதவி இயக்குனர் அருண்பாலாஜி பயிர் சாகுபடியில் கால்நடை வளர்ப்பின் பங்கு குறித்தும், பெருங்குறிச்சி கால்நடை உதவி மருத்துவர் கிரி கால்நடை பண்ணை மேலாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
கபிலர்மலை வேளாண்மை அலுவலர் அன்புச்செல்வி ஊட்டம் நிறைந்த தானியங்களின் சாகுபடி குறித்தும், கபிலர் மலை வட்டார வேளாண்மை துணை அலுவலர் சக்திவேல், மயில் விரட்டி தெளிப்பு குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் சந்திர சேகரன், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலா ளர் ஜோதிமணி உள்ளிட் டோர் செய்திருந்தனர்.
- ஆய்வில் தடை செய்யப்பட்ட எலி மருந்து கள் பறிமுதல் செய்யப்பட்டு வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது.
- உணவுப் பொருட்களுடன் சேர்த்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர பகு தியில் உள்ள உணவு பொருட்கள் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களில் எலிகளை கொள்ளும் மருந்துகளான எலி பேஸ்ட் மற்றும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து திருச்செங்கோடு நகராட்சி சுகாதார அலுவலர் வெங்க டாசலம் தலைமையில் சுகா தார அலுவலர் குழு நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் தடை செய்யப்பட்ட எலி மருந்து கள் பறிமுதல் செய்யப்பட்டு வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. இனிவரும் காலங்களில் இதுபோல தடை செய்யப் பட்ட பொருட்களை உணவுப் பொருட்களுடன் சேர்த்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
திருச்செங்கோடு நகர் பகுதியில் இரவு நேரங்களில் செயல்படும் சாலையோர சிற்றுண்டி கடைகளில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் உற்பத்தியாகும் கழிவுகளை அகற்றும் முறை எப்படி பின்பற்றப்படுகிறது என்றும் ஆய்வு செய்தனர். ஆய்வில் கழிவுகளை முறையற்று கையாளும் தற்காலிக கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பிராந்தகம், சுங்ககாரன்பட்டி, கூடச்சேரி, வீரணம்பாளை யம் ஆகிய கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.
- குடும்பங்களுக்கும் தலா 2 தென்னங்கன்று கள் பரமத்தி வட்டார வேளாண்மை துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் நடப்பு நிதியாண்டில் கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பிராந்தகம், சுங்ககாரன்பட்டி, கூடச்சேரி, வீரணம்பாளை யம் ஆகிய கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.
இந்த கிராமங்களில் குடும்ப அட்டை வைத்துள்ள, தென்னை மரம் இல்லாத அனைத்து குடும்பங்களுக் கும் தலா 2 தென்னங்கன்று கள் பரமத்தி வட்டார வேளாண்மை துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்த சாமி தெரிவித்துள்ளார்.
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது.
- இந்த கோவிலில் எப்போதும் கம்பம் நடப் பட்டு இருப்பதால் நித்திய சுமங்கலி மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் எப்போதும் கம்பம் நடப் பட்டு இருப்பதால் நித்திய சுமங்கலி மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில 14-ம் ஆண்டாக திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. கல்வி அபிவிருத்தி, திருமண பாக்கியம், கணவன் மனைவி ஒற்றுமை, தொழி லில் நல்ல மேன்மை, நவகி ரக தோஷங்கள் விலக, குழந்தை பாக்கியம் என்பது உள்பட பல்வேறு பலன்கள் கிடைப்பதற்காக இந்த பூஜை நடத்தப்பட்டது.முன்னதாக லட்சுமி, கணபதி ஹோமம் நடந்தது. விநா யகர், பாலமுருகன், மாரி யம்மன் நித்திய சுமங்கலி கம்பம் ஆகிய வற்றுக்கு அபிஷேகம், ஆரா தனை நடந்தது. மாலையில் திரு விளக்கு பூஜை நடந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் பூஜை வைத்து அம்மனை வழிபட்டனர்.
நித்திய சுமங்கலி மாரி யம்மன் ராஜ மாதங்கி அலங்காரத்தில் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். திருவிளக்கு பூஜையை முன்னிட்டு கோவில் வளா கம் முழுவதும் வேப்பிலை, வாழை, மா இலை தோர ணங்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
- சாக்கடை அமைக்கும் பணிக்காக, ராஜகணபதி கோவிலை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.
- பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க விநாயகர் சிலையை சேதம் இன்றி எடுத்து அதிகாரிகள் வேறு இடத்தில் வைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர்-ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் உள்ள பொத்தனூரில் நெடுஞ்சாலை அருகே பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது. இங்குள்ள விநாயகருக்கு தினசரி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
இந்த நிலையில் இப்பகுதியில் சாலையோரம் சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சாக்கடை அமைக்கும் பணிக்காக, ராஜகணபதி கோவிலை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.
தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த இந்த கோவிலை நெடுஞ்சாலைத்துறையினர், பொக்லைன் எந்திரத்தின் மூலம் முற்றிலுமாக அகற்றினர். இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க விநாயகர் சிலையை சேதம் இன்றி எடுத்து அதிகாரிகள் வேறு இடத்தில் வைத்தனர்.
தொடர்ந்து பரமத்திவேலூர் 4 ரோடு சாலைகளில் இருந்து பொத்தனூர் எம்.ஜி.ஆர் சிலை வரையிலும் சாக்கடை அமைக்கும் பணி நடப்பதால் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் தாங்களாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக இக்கோவிலில் வழிபட்டு வருகிறோம். அதிகாரிகள் திடீரென கோவிலை இடித்தது மன வேதனையாக உள்ளது. சாக்கடை கால்வாயை அதிகாரிகள் மாற்றி அமைத்திருக்கலாம் . ஆனால் அதிகாரிகள் இவ்வாறு செய்யவில்லை என்றனர்.
- அரியூர் நாடு மற்றும் குண்டூர் நாடு ஆகிய 2 ஊராட்சி பகுதிகளில் மட்டும் அன்னாசி விளைந்து வருகிறது.
- சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அன்னாசி பழம் சாகுபடி செய்து வருகின்றனர்.
சேந்தமங்கலம்:
கொல்லிமலையில் அன்னாசி பழம் சீசன் தொடங்கியது. இந்நிலையில் விலை உயர்வுக்காக மலைவாழ் விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. அந்த மலையில் 14 ஊராட்சி பகுதிகள் காணப்படுகிறது. அதில் குறிப்பாக அரியூர் நாடு மற்றும் குண்டூர் நாடு ஆகிய 2 ஊராட்சி பகுதிகளில் மட்டும் அன்னாசி விளைந்து வருகிறது. மற்ற பகுதிகளில் மற்ற பழங்கள் விளைந்து வருகிறது.
மேற்குறிப்பிட்ட 2 ஊராட்சி பகுதிகளில் அன்னாசி பழத்திற்கு ஏற்ற தட்பவெப்ப நிலை நிலவுவதால் அங்கு நாட்டு ரகம் மற்றும் கியூரக அன்னாசி ஆகியவை விளைந்து வருகிறது. அதில் குறிப்பாக நாட்டு ரக அன்னாசி பழங்களே அதிக அளவில் விளைந்து வருகிறது.
சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அன்னாசி பழம் சாகுபடி செய்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு அன்னாசி பழம் சீசன் நடந்து வருகிறது.
அந்தப் பகுதிகளில் அறுவடை செய்யப்படும் அன்னாசி பழங்கள் வாகனங்கள் மூலமாக அங்குள்ள சோளக்காடு, தெம்பலம் ஆகிய சந்தை பகுதிகளுக்கு கொண்டு வந்து விற்கப்படுகிறது.
அந்த சந்தைகளில் இருந்து மூட்டை, மூட்டையாக லாரிகளில் ஏற்றப்பட்டு வெளி மாவட்ட, மாநிலங்களுக்கு விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு செல்கின்றனர்.
கடந்த ஆண்டு ஒரு மூட்டை அதிகபட்ச விலையாக ரூ.700 முதல் ரூ.800 வரை விற்பனையானது. ஆனால் இந்தாண்டு தற்போது தொடக்கத்தில் ரூ.250 முதல் ரூ.500 வரையில் விற்பனை ஆகி வருகிறது.
வருகிற வாரங்களில் விலையேற்றம் வந்தால் தான் அன்னாசி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இதனால் விலை உயா்வுக்காக விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
- 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அறிந்து சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் குவிந்தனர்.
- சசிகலா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே வெட்டுக்காட்டுபுதூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 30). இவரது மனைவி சசிகலா (26). இவர்களுக்கு தீபித் (5), தர்ஷன் (3) என்ற 2 மகன்கள் இருந்தனர்.
இந்நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவும் தம்பதி இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சசிகலா, மிகுந்த சோகத்தில் இரவு முழுவதும் அழுதபடி படுத்திருந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று காலையில் கணவர் தனசேரன் தூங்கிக் கொண்டிருந்தபோது, சசிகலா தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவருக்கு சொந்தமான விவசாய கிணறு இருக்கும் இடத்திற்கு வந்தார்.
பின்னர் 2 குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்துவிட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், சசிகலாவின் தந்தை கரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி, இன்று காலை சசிகலாவுக்கு போன் செய்துள்ளார். மகள் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர், வெட்டுக்கட்டு புதூருக்கு விரைந்து வந்தார். சசிகலாவை வீட்டில் பார்க்க முடியவில்லை. குழந்தைகளையும் காணவில்லை.
இதனால் மகள் மற்றும் பேரன்களை தேடி, பழனிச்சாமி விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள விவசாய கிணற்றில் 2 குழந்தைகளையும் வீசிவிட்டு, சசிகலாவும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, உடனடியாக அப்பகுதி இளைஞர்களை வரவழைத்து, கிணற்றில் இறங்கி 2 குழந்தைகள், சசிகலாவை தண்ணீருக்குள் இருந்து மீட்டு வெளியே எடுத்துவந்தனர். பின்னர் இதுகுறித்து நல்லூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சசிகலா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அறிந்து சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு குவிந்தனர். மேலும் அவரது உறவினர்கள் கதறி அழுதது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே சசிகலாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால், நாமக்கல் மாவட்ட வழங்க அலுவலரும், திருச்செங்கோடு உதவி கலெக்டருமான (பொறுப்பு) ரமேஷ் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத் தின் கீழ் பயன்பெற, தகுதி உடைய மாற்றுத்திறனாளி கள் விண்ணப்பிக்கலாம்.
- மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவல கத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், பார்வை குறைபாடு மற்றும் செவித்தி றன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத் தின் கீழ் பயன்பெற, தகுதி உடைய மாற்றுத்திறனாளி கள் விண்ணப்பிக்கலாம்.
18 முதல் 70 வயது வரை உள்ள, பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் மற்றும் செவித்திறன் குறைபாடு உடையவர்கள், உயர்கல்வி பயில்பவர்கள், தனியார் நிறுவனங்களின் பணிபுரிபவர்கள், சுய தொழில் புரிபவர்கள் இதற் காக விண்ணப்பிக்கலாம்.
தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், கல்வி பயில் வதற்கான சான்று, பணிச் சான்று, சுயதொழில் புரி வதற்கான சான்று, ரேசன் கார்டு, ஆதார் கார்டு நகல் மற்றும் 1 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நாமக்கல் மாவட்ட கலெக் டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவல கத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான் பேட்டை பகுதியில் உள்ள ஓடை புறம்போக்கு பகுதியில் மரங்களை வெட்டுவது தொடர்கதையாக உள்ளது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள 6 தென்னை மரங்கள் மற்றும் அரச மரத்தை மர்ம நபர்கள் சிலர் வெட்டியுள்ளனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான் பேட்டை பகுதியில் உள்ள ஓடை புறம்போக்கு பகுதியில் மரங்களை வெட்டுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள 6 தென்னை மரங்கள் மற்றும் அரச மரத்தை மர்ம நபர்கள் சிலர் வெட்டியுள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல் வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து வருவாய் துறை கிராம நிர்வாக அலுவ லர் ராஜாவிடம் கேட்டபோது, ஓடை புறம்போக்கு பகுதியில் இருந்து 6 தென்னை மரங்க ளைப் வெட்டியுள்ளதாக புகார் வந்துள்ளது. பரமத்தி வேலூர் சர்வேயரிடம் அப்பகுதி நிலத்தை அளந்து கொடுக்க கேட்டுள்ளோம். நிலம் அளந்த பிறகு எத்தனை தென்னை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது என கணக்கீடு செய்யப்படும்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று கூறினார். இது வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அப்ப குதி மக்கள் தெரிவித்தனர்.
- பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ், நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம், ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
- எனவே இவ் விவசாயிகள் உடனடியாக அருகிலுள்ள பொது சேவை மையங்களை அணுகி இ-கே.ஒய்.சி. சரி பார்ப்பு பணியினை விரைந்து முடித்திட வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல், மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ், நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம், ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பாக செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் தற்போது 4,831 விவசாயிகள் இ-கேஒய்சி சரிபார்ப்பு செய்யப்படாமல் நிலுவை யில் உள்ளது. எனவே இவ் விவசாயிகள் உடனடியாக அருகிலுள்ள பொது சேவை மையங்களை அணுகி இ-கே.ஒய்.சி. சரி பார்ப்பு பணியினை விரைந்து முடித்திட வேண்டும்.
மேலும் 4,744 விவசாயி கள் தங்களது பயன்பாட்டி லுள்ள வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் விவ ரங்களை இணைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள் ளது. எனவே ஆதார் விவ ரங்களை வங்கி கணக்குடன் இணைக்காத பயனாளி களுக்கு பிரதமரின் விவசாயி களுக்கான நிதி உதவி திட்டத்தின் 14-வது தவணை தொகை வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஆதார் விவ ரங்களை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்காத விவசாயிகள் 14-வது தவணைத் தொகையினை தொடர்ந்து பெறுவதற்கு உடனடியாக வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் விவ ரங்களை இணைத்திட வேண்டும். இல்லையெனில் அருகிலுள்ள அஞ்சல் அலு வலகங்களில் பூஜ்ஜியம் தொகையில் புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும்.
மேலும் அஞ்சல் அலுவல கங்களில் வங்கி கணக்கு தொடங்கும் பொழுது 48 மணி நேரத்திற்குள் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






