search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்
    X

    நாமக்கல் மாவட்டத்தில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

    • வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.
    • தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த மாணவர்கள், தற்போது நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மை தேர்வு எழுதியுள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.

    தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த மாணவர்கள், தற்போது நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மை தேர்வு எழுதியுள்ளனர். குரூப் 4 தேர்வில் 17 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வாகியுள்ளனர்.

    மேலும், 2022-ல், சீருடைப்பணியாளர்கள் எஸ்.ஐ., தேர்வில் 5 பேர், போலீஸ் தேர்வில் 17 பேர் என, மொத்தம் 22 பேர் தேர்ச்சி பெற்று, தற்போது பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள, டி.என்.பி.எஸ்.சி, குரூப் 1, 2, 4 தேர்விற்கு, இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா தலைமை வகித்து வகுப்பை தொடங்கி வைத்தார்.

    இப்பயிற்சி வகுப்பில், மாவட்டம் முழுவதும் இருந்து, 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப் பித்திருந்தனர். முதல் நாளான நேற்று 73 பேர் கலந்து கொண்டனர்.

    இது குறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா கூறியதாவது:

    டி.என்.பி.எஸ்.சி, குரூப் 1, 2, 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தற்போது தொடங்கி உள்ளது. 6 மாதத்துக்கு தொடர்ந்து இப்பயிற்சி வகுப்பு நடைபெறும்.

    இந்த இலவச நேரடி பயிற்சி வகுப்பு, தினமும் காலை 10.30 முதல், மதியம் 1.30 மணி வரை நடக்கும். ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுனர்களைக் கொண்டு இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    வாரம் தோறும், செவ்வாய், வெள்ளிக் கிழமை மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். தினமும், பயிற்சி தாள் வழங்கப்படும். இவற்றை சிறந்த முறையில் பயன்படுத்தி பயிற்சி செய்தால், போட்டித் தேர்வில் வெற்றி பெறலாம் என கூறினார்.

    Next Story
    ×