என் மலர்
நாமக்கல்
- நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவ, மாணவியருக்கான ராகிங் தடுப்பு சட்ட விழிப் புணர்வு முகாம் நடந்தது.
- கல்லூரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவ, மாணவியருக்கான ராகிங் தடுப்பு சட்ட விழிப் புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். நாமக்கல் சார்பு நீதிபதி விஜய் கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:
ராகிங் (கேலிவதை) நடவடிக்கையால், புதிய மாணவ மாணவிகள் மோச மான பாதிப்புகளை அடை கின்றனர். இந்த ராகிங் முறை தொடக்கக் காலத்தில், புதிய மாணவர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் இருந்தாலும், காலப் போக்கில், வன்மு றைச் செயல்களுக்கும், குற்றங்களுக்கும் வித்திடு வதாக அமைந்துவிட்டது.
ராகிங் செய்வதை, பேச்சு, உடல் மற்றும் பாலி யல் ரீதியான துன்புறுத்தல் என 3 வகையாக பிரிக்க லாம். உடல் ரீதியான துன்புறுத்தல், இறப்புக்கு காரணமாக உள்ளது. அதற்கு, நாவரசு கொலை வழக்கு உதாரணம். மாண வர்களாகிய நீங்கள், எப்பே தும் ராகிங்கில் ஈடுபடக் கூடாது. முதலாம் ஆண்டு மாணவர் களுடன் , அன்பு பாராட்டி, தோழமை உணர்வுடன் பழக வேண்டும் என கூறினார்.
சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பின் தலைவர் ராமசெழியன், துணை தலைவர் பழனிசாமி ஆகியோர், ராகிங் தடுப்பு சட்டம் பற்றியும், வழக்கு பதிவு செய்யும் முறை குறித்தும் விளக்கினர். கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட னர்.
- முட்டை விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நாமக்கல்லில் தினசரி நிர்ணயம் செய்கிறது.
- முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அதன் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நாமக்கல்லில் தினசரி நிர்ணயம் செய்கிறது.
அதன்படி நேற்று நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. இதில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டை விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டையின் விலை 460 காசிலிருந்து 465 காசாக உயர்ந்தது.
நாமக்கல் மண்டலத்திற்குட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 101 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 103 ரூபாயாக உயர்ந்தது. முட்டை கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 77 ரூபாயாக நீடிக்கிறது.
- பொது மக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது.
- இந்த கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமை வகித்து பொதுமக்களிடம் பேசினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா வடகரையாத்தூர், கரபாளையத்தை சேர்ந்த இளம்பெண் கடந்த மார்ச் 11-ல் படுகொலை செய்யப்பட்டார்.இதையடுத்து, பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகு திகளில் தீ வைப்பு, குளத்தில் விஷம் கலப்பது, மரங்களை வெட்டி சாய்ப்பது போன்ற அடுக்கடுக்கான வன்முறை சம்பவங்கள் கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வந்தது.
இந்த சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வரும் நிலையில், அந்த பகுதியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா உத்தரவின் பேரில் ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் முக்கியமான சந்திப்புகள் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 40-க்கும் மேற்பட்ட கண்கா ணிப்பு கேமராக்களை போலீசார் பொருத்தி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஆனங்கூர், பாகம்பாளையம், அய்யம்பாளையம் பகுதியில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமை வகித்து பொதுமக்களிடம் பேசினார்.
அப்போது, பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதி களில் தேவையற்ற சம்ப வங்கள் கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த குற்றவாளி களை இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை.
பொதுமக்களாகிய நீங்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே குற்றவாளிகளை கண்டுபிடிக்க இயலும். நீங்கள் வீட்டில் இருக்கும் போதும் அல்லது வெளியில் செல்லும்போதும், ஏதாவது ஒரு வகையில் குற்றவாளிகள் குறித்து தகவல் கிடைக்கலாம். அந்த தகவலை உடனடியாக காவல்துறையினிடம் தெரிவிக்க வேண்டும்.
அப்போது தான் இனி வரும் காலங்களில் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் செய்ய முடியும் என்றார். மேலும், ஒவ்வொரு நாள் இரவும், ஒவ்வொரு ஊரில் இருந்தும் தினமும் 10 இளைஞர்கள் போலீசாருNamakkal District News,டன் இணைந்து இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக் கொண்டார். அதற்கு போலீசார் உடன் இணைந்து ரோந்தில் ஈடுபடுவதாக இளைஞர்கள் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
- டிரான்ஸ்பார்மரின் உச்சியில் நின்று கொண்டு கீழே வரமறுத்த மகேந்திராவை பெரிய ஏணியை பயன்படுத்தி பத்திரமாக மீட்டு பரமத்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- பரமத்திவேலூர் பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்ததால் மின்சாரம் இல்லாததை அறிந்தே டிரான்ஸ்பார்மரில் ஏறி மகேந்திரா போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த யாதவ் என்பவரின் மகன் மகேந்திரா (வயது 18) என்பவர் கடந்த ஒரு மாதமாக நூற்பாலையில் உள்ள குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
மகேந்திரா, தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக நூற்பாலையில் உள்ள நிர்வாகத்தினரிடம் விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் நூற்பாலை நிர்வாகத்தினர் வேலைக்கு வந்து ஒரு மாதமே ஆனதால் விடுமுறை தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மகேந்திரா, நூற்பாலை அருகே உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரின் உச்சியில் ஏறி மேலே சென்று விடுமுறை தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை பார்த்த நூற்பாலை நிர்வாகத்தினர் கீழே இறங்கி வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என கூறினர். ஆனால் டிரான்ஸ்பார்மரில் இருந்து அவர் கீழே இறங்க மறுத்ததால் பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் நாமக்கல் தீயணைப்பு துறையினர், மின்வாரியத்தினர் அங்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் நடத்திய இந்த பேச்சுவார்த்தையால் சமாதானம் அடைந்தார்.
இதையடுத்து டிரான்ஸ்பார்மரின் உச்சியில் நின்று கொண்டு கீழே வரமறுத்த மகேந்திராவை பெரிய ஏணியை பயன்படுத்தி பத்திரமாக மீட்டு பரமத்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நேற்று பரமத்திவேலூர் பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்ததால் மின்சாரம் இல்லாததை அறிந்தே டிரான்ஸ்பார்மரில் ஏறி மகேந்திரா போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
பரமத்தி போலீசார் மகேந்திராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவன் -மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- சசிகலா அவரது 2 குழந்தைகளின் பிரேத பரிசோதனை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே வெட்டுக்காட்டுபுதூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 30). இவரது மனைவி சசிகலா (26). இவர்களுக்கு தீபித் (5), தர்ஷன் (3) என்ற 2 மகன்கள் இருந்தனர்.
இந்த நிலையில் கணவன் -மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் தம்பதி இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சசிகலா, நேற்று அதிகாலையில் தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவருக்கு சொந்தமான விவசாய கிணறு இருக்கும் இடத்திற்கு வந்தார். பின்னர் 2 குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்துவிட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சசிகலா அவரது 2 குழந்தைகளின் பிரேத பரிசோதனை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. பிரேத பரிசோதனை முடிந்து நேற்று இரவு உடலை சசிகலாவின் தந்தை பழனிசாமி, அவரது தாயார் தெய்வானை மற்றும் உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் தினமும் தகராறு ஏற்பட்டதால் தான் சசிகலா தானும், குழந்தைகளும் இறந்து விட வேண்டும் என்ற சோகமான முடிவுக்கு வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதற்கிடையே சசிகலாவின் தாய் மாமன் கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் சசிகலாவின் வீட்டில் உள்ள அறைகளை சோதனை செய்துள்ளார். அப்போது சசிகலா ஒரு சிறிய பாக்கெட் நோட்டில் உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்துள்ளார். அந்த நோட்டை கைப்பற்றி நல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அந்த கடிதத்தில் எனது கணவர் தனசேகரன் தினமும் குடித்து விட்டு மது போதையில் வந்து தகராறில் ஈடுபட்டு வருகிறார். எனது கணவருடைய சகோதரி தீபாவை அருகாமையில் உள்ள சிறுநல்லிக்கோவில் பகுதியில் உள்ள பூசாரி தோட்டம் பகுதியில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டது. ஆனால் அவர், அங்கு செல்லாமல் , இங்கேயே இருந்து வருகிறார். தொடர்ந்து எனது கணவர் தனக்கு தொந்தரவு கொடுத்து வந்தார்.
தனக்கு 20 பவுனுக்கு மேல் தங்க நகை போட்டனர். அனைத்து நகைகளையும் தனசேகரன் வாங்கிக் கொண்டார். மேலும் தனசேகரன், எனது தந்தை பழனிசாமியிடமிருந்து இதுவரை சுமார் ரூ.10 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார். ஆனால் அவர் என்னை நிம்மதியாக வைத்திருக்கவில்லை.
தினமும் தகராறு ஏற்பட்டுள்ளதால் என்னால் நிம்மதியாக உயிர் வாழ முடியவில்லை. எனது சாவுக்கு காரணம் எனது கணவர் தனசேகரன் தான்.
இவ்வாறு சசிகலா கண்ணீர் மல்க உருக்கமாக அதில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சசிகலாவின் உறவினர்கள், தனசேகரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா, நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் தனசேகரனை பிடித்து நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
- வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது.
- 1500 மூட்டைகள் தொகை ரூ.75 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.9,938 முதல் ரூ.12,669 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.8,591 முதல் ரூ.10,449 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.11,001 முதல் ரூ.13,699 வரையிலும் விலை போனது. 1திருச்செங்கோட்டில் மஞ்சள் ஏலம்500 மூட்டைகள் தொகை ரூ.75 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தமிழக அரசு, சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ், பெண்கள் உரிமைத் தொகை திட்டம் செயல் படுத்த, விரிவான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
- மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகள் அருகே, உரிய விண்ணப்பப் பதிவு முகாம்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழக அரசு, சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ், பெண்கள் உரிமைத் தொகை திட்டம் செயல் படுத்த, விரிவான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியை, நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திடும் வகை யில், அனைத்து துறை அலுவலர்கள் அடங்கிய, மாவட்ட மற்றும் வட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகள் அருகே, உரிய விண்ணப்பப் பதிவு முகாம்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதற்கான விண்ணப்பங் களை , முகாம் ஆரம்பிக்கும் நாட்களுக்கு முன், நேரடை யாக ரேசன்கார்டுதாரர்கள் வீட்டிற்கே சென்று, முகாமிற்கு வரவேண்டிய நாள், நேரம் குறித்து விற்பனையாளர் பதிவு செய்து வழங்குவார்கள்.
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, அந்தந்த குடும்பத்தலைவியே, அவருக்கு குறிப்பிட்ட நாளில் விண்ணப்ப முகா மில் ஆதார் அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் எண், ரேசன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் மின் கட்டண ரசீது ஆகிய வற்றுடன் சமர்ப்பித்து கைவிரல் ரேகை பதிவுகள் மூலம் பதிவுகள் செய்ய வேண்டும்.அனைத்து முகாம்களி லும் போலீசார் மூலம் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை தடுக்க நடவ டிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகை யில் அனைத்து தாலுகா அலுவல கங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
கலெக்டர் அலுவல கத்தில் 1800 425 1997, நாமக்கல் தாலுக்கா அலுவ லகம்-04286 233701, ராசிபுரம்- 04287-222840, சேந்தமங்கலம்- 04286-271127, கொல்லிமலை- 63792-85667, மோகனூர்-04286-297768, திருச்செங்கோடு- 04288-253811, ப.வேலூர்- 04268-250099, குமாரபாளையம்- 04288-264546 ஆகிய தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், விண்ணப்பப் பதிவு முகாம்கள், 2 கட்டங் களாக நடத்தப்படுகிறது. காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறும். ஞாயிற்றுக் கிழமைகளிலும் முகாம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
- நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டும்பணியையும், கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகமணிகண்டன், மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு நக ராட்சி சந்தைப்பேட்டையில், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 6 லட்சம் மதிப் பீட்டில் புதிதாக கடைகள் கட்டும் பணியையும், ரூ.4 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டும் பணியையும், ரூ.1 கோடியே 89 லட்சத்து15 ஆயிரம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டும்பணியையும், கலெக்டர் உமா நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், ஆனங்கூர் ஊராட்சி புளியம்பட்டி பாளையத்தில் ரூ.6.71 லட்சம் மதிப்பீட்டில், கழிவு நீர் கால்வாய் அமைக்கப் பட்டுள்ளதையும், ரூ.5.85 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ள தையும், ரூ.4.57 லட்சம் மதிப்பீட்டில் புள்ளி கவுண்டம்பாளை யத்தில் கான்கிரீட் சாலை அமைக் கப்பட்டுள்ளதையும், நாடார் தெருவில் ரூ.2.49 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக் கப்பட்டுள்ளதையும் கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
மேலும், ஆனங்கூர் ஊராட்சி சேவை மையம், ரேசன் கடை, சட்டையும் புதூர் தனியார் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடங்களில் பொதுமக்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார். பின்னர் ரேசன் கடை யில் உள்ள பொதுமக்களிடம் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து கலந்து ரையாடி அனைவரையும் உரிய ஆவணங்களுடன் முகாம் நடைபெறும் போது தங்களது விண்ணப்பித் தினை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மல்ல சமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், செண்பகமாதேவி ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.39.58 லட்சம் மதிப்பீட்டில் சாலை பலப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வு களின் போது, திருச்செங் கோடு தாசில்தார் பச்ச முத்து, திருச்செங்கோடு நக ராட்சி ஆணையாளர் ஜெய ராமராஜா, திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் கள் மாதவன், கஜேந்திர பூபதி, மல்லசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் லோகமணிகண்டன், மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத கடைசி தேய் பிறை சனிபிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமா னுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத கடைசி தேய் பிறை சனிபிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமா னுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வ ரர் மற்றும் பரிவார தெய் வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர் களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பரமத்திவேலூர் பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரமேஸ்வர் , பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பிலிக்கல் பாளையம், கரட்டூர் விஜயகிரி வட பழனியாண்டவர் கோயி லில் எழுந்தருளியுள்ள பர்வ தீஸ்வரர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதி களில் உள்ள சிவன் கோயில்களில் ஆனி மாத தேய்பிறை சனிபிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாரா தனையும் நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் பிரதோஷ விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- முன்னால் சென்று கொண்டிருந்த கரும்பு லோடு டிராக்டரை இந்துமதி முந்தி செல்லும்போது எதிரே திடீரென லாரி வந்தது.
- டிராக்டர், கண் இமைக்கும் நேரத்திற்குள் மொபட் மீது ஏறி இறங்கியது. இதில் இந்துமதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த சின்னாரபாளையத்தை சேர்ந்தவர் ராஜவேலு. விவசாயியான இவருக்கு தவமணி (வயது 50) என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர்.
மூத்த மகள் இந்துமதி (25), சென்னையில் உள்ள பிரபல தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இந்துமதிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
நேற்று மாலை தனது சொந்த ஊரான சின்னாரபாளையத்தில் உள்ள வீட்டிலிருந்து தவமணியும், இந்துமதியும் திருச்செங்கோடு அருகே உள்ள இறையமங்கலம் சென்றனர். இந்துமதியின் தங்கையை பார்த்துவிட்டு இவருவரும், மொபட்டில் இரவு வீட்டுக்கு திரும்பினர்.
இரவு 7 மணி அளவில் கொக்கராயன்பேட்டையை அடுத்துள்ள கோம்புமேட்டில் இருவரும் வந்து கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த கரும்பு லோடு டிராக்டரை இந்துமதி முந்தி செல்லும்போது எதிரே திடீரென லாரி வந்தது. இதனால் நிலை தடுமாறிய இந்துமதி மொபட்டுடன் கீழே விழுந்தார்.
அப்போது டிராக்டர், கண் இமைக்கும் நேரத்திற்குள் மொபட் மீது ஏறி இறங்கியது. இதில் இந்துமதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தாய் தவமணி பலத்த காயங்களுடன் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதிக்க டாக்டர்கள், தவமணி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்துமதி, தவமணி உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்த விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 460 காசுகளாக உயர்ந்துள்ளதால் கடந்த 6 நாட்களில் மட்டும் முட்டை விலை 30 காசுகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 101 ரூபாயாகவும், முட்டை கோழி விலை விலை 77 ரூபாயாகவும் நீடிக்கிறது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த முட்டை கோழிகள் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் நேற்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் முட்டை உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர் .
இதனால் 455 காசுகளாக இருந்த முட்டை விலை 460 காசுகளாக அதிகரித்தது. கடந்த 10-ந் தேதி 430 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து தற்போது 460 காசுகளாக உயர்ந்துள்ளதால் கடந்த 6 நாட்களில் மட்டும் முட்டை விலை 30 காசுகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 101 ரூபாயாகவும், முட்டை கோழி விலை விலை 77 ரூபாயாகவும் நீடிக்கிறது.
- புதுச்சத்திரம் அடுத்த பெருமாள்கோவில்மேட்டில் பஸ் நிறுத்தம் அருகே பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
- டீ பாய்லர் மற்றும் கியாஸ் சிலிண்டரில் இன்று திடீரென தீப்பிடித்தது.
நாமக்கல்:
சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அடுத்த பெருமாள்கோவில்மேட்டில் பஸ் நிறுத்தம் அருகே பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்குள்ள டீ பாய்லர் மற்றும் கியாஸ் சிலிண்டரில் இன்று திடீரென தீப்பிடித்தது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் பேக்கரியில் இருந்து வெளியே ஓடி வந்தனர். கடை ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் துரிதமாக பக்கெட்டுகளில் தண்ணீர் மற்றும் மண்ணை எடுத்து வந்து தீயில் கொட்டி அணைத்தனர். ஊழியர்கள் சாதுர்யமாக செயல்பட்டதால், பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இதை கண்ட அப்பகுதி மக்கள் பேக்கரி கடை ஊழியர்களை பாராட்டினர்.






