என் மலர்
நீங்கள் தேடியது "gathering"
- ஜேடர்பாளையத்தில் உள்ள கொத்தமங்கலம் மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில் உலக மீன்வர் தினத்தை முன்னிட்டு மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- மீன் வளத்தை பாதுகாப்பது, மீனவர்களின் வாழ்வா தாரத்தை உயர்த்துவது மற்றும் மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் ஆகியவை குறித்து விளக்கி கூறினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையத்தில் உள்ள கொத்தமங்கலம் மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில் உலக மீன்வர் தினத்தை முன்னிட்டு மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மீன்வ ளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்-ஆய்வா ளர் கோகிலவாணி தலைமை வகித்தார். கொத்தமங்கலம் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் கலைவாணி கலந்து கொண்டு மீன் வளத்தை பாதுகாப்பது, மீனவர்களின் வாழ்வா தாரத்தை உயர்த்துவது மற்றும் மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் ஆகியவை குறித்து விளக்கி கூறினார்.
கூட்டத்தில் கொத்த மங்கலம், பள்ளி பாளையம், ஜேடர்பாளையம், ஆனங்கூர் மற்றும் பொன்மலர் பாளையத்தை சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர்.
- சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் வழிகாட்டுதலின் பேரிலும் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் அதன் உடல் நல பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும்.
- என சுகாதார இணை இயக்குநர் அறிவுறுத்தல்
சேலம்:
சேலம் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-
தமிழக கூடுதல் அரசு செயலர் உத்தரவின்படியும் சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அறி வுறுத்தலின்பேரிலும் சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் வழிகாட்டுதலின் பேரிலும் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் அதன் உடல் நல பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் வருகிற 17-ந்தேதி சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் நடத்தி அதன் விபரத்தை தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் வாரியாக நடத்தப்பட்ட விபரத்தை dcifsalem@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் தலைமையில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் போதை பொருள் பயன்பாட்டினை தடுக்க ஒவ்வொரு வட்டங்களின் வாரியாக விழிப்புணர்வு பயிற்சிகள் மேற்கொள்ளபட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தலைமையில் விவசாயிகளுக்கு பொட்டாஷ் பாக்டீரியா பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
- மேலும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளான இன்டோல் அசிடிக் அமிலம் மற்றும் ஜிப்ரலிக் அமிலத்தினை சுரந்து பயிர்வளர்ச்சியினை மேம்படுத்துகிறது.
பரமத்தி வேலூர்:
கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொட்டாசியம் பயிர்வளர்ச்சிக்கு பல்வேறு வகைகளில் துணை புரிகின்றது. நீர் மற்றும் இலை உற்பத்தி செய்யும் பொருட்களை செடிகளின் பல்வேறு பாகங்களுக்கு கடத்துவதற்கு பொட்டாசியம் எனப்படும் சாம்பல் சத்து உதவுகிறது. தண்டுப்பகுதிகளுக்கு உறுதியை அளித்து செடிகள் சாயாமல் இருக்கவும், பூச்சி, நோய்க்கிருமிகள் செடிகளை எளிதில் தாக்காமல் இருக்கவும் சாம்பல் சத்து பயன்படுகிறது.
பிரச்சூரியா ஆரென்சியா என்ற பொட்டாசியத்தை இடம்பெயரச் செய்யும் பாக்டீரியா மண்ணில் கரையாமல் கனிமநிலையில் உள்ள பொட்டாசியத்தை கரிம அமிலங்கள் மற்றும் நொதிகளை சுரந்து கரைத்து பயிர்களுக்கு அளிக்கிறது. மேலும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளான இன்டோல் அசிடிக் அமிலம் மற்றும் ஜிப்ரலிக் அமிலத்தினை சுரந்து பயிர்வளர்ச்சியினை மேம்படுத்துகிறது. எனவே விவசாயிகள் மேற்கண்ட பிரச்சூரியா ஆரென்சியா என்ற பொட்டாசியத்தை இடம்பெயரச் செய்யும் பாக்டீரியாவை தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசோஸ்பைரில்லம் அல்லது ரைசோபியம், மணிச்சத்தை கரைத்துக் கொடுக்கும் பாஸ்போபாக்டீரியாவுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
இந்த பாக்டீரியா திட மற்றும் திரவ வடிவங்களில் கிடைக்கிறது. இதனால் மண்ணில் உள்ள இயற்கையாக கிடைக்கும் சாம்பல் சத்தினை பயிர்கள் எடுத்துக்கொள்வது சுலபமாகி, பொட்டாஷ் உரத்திற்கு செலவிடும் தொகையினை விவசாயிகள் சேமிக்கலாம். இந்த பாக்டீரியாவை பயிர்களுக்கு பயன்படுத்தி பலன் அடையலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து பணியாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
- மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கிகள் நேரடி கடன் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து பணியாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு வங்கிகள் நேரடி கடன் வழங்குவது தொடர்பாக மாவட்ட அளவிலான வங்கியாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதில் கூடுதல் கலெக்டர் (வருவாய் ) சுகபுத்ரா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் திட்ட இயக்குனர் லோகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஏற்காடு பஞ்சாயத்தில் அனைத்து கிராமங்களையும் தூய்மையான கிராமங்களாக மாற்றுவதற்காக “எனது குப்பை எனது பொறுப்பு” கூட்டம் நடைபெற்றது.
- டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தெருக்களை சுகாதாரமாக வைத்து கொள்ள ஆலோ–சனை வழங்கினர்.
ஏற்காடு:
ஏற்காடு பஞ்சாயத்தில் அனைத்து கிராமங்களையும் தூய்மையான கிராமங்களாக மாற்றுவதற்காக "எனது குப்பை எனது பொறுப்பு" கூட்டம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் சிவசக்தி தலைமை வகித்தார், துணை தலைவர் பாலு முன்னிலை வகித்தார்.
ஏற்காடு லாங் கில்பேட்டை அந்தோணியார் கோயில் சமுதாய கட்டிடத்தில் ஊர் பொதுமக்கள், இளை ஞர்களுக்கு குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது, எனது குப்பை எனது பொறுப்பு குறித்தும், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தெருக்களை சுகாதாரமாக வைத்து கொள்ள ஆலோ–சனை வழங்கினர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை 9-வது வார்டு உறுப்பினர் அம்முராஜா செய்து இருந்தனர்.