மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

ஜேடர்பாளையத்தில் உள்ள கொத்தமங்கலம் மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில் உலக மீன்வர் தினத்தை முன்னிட்டு மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மீன் வளத்தை பாதுகாப்பது, மீனவர்களின் வாழ்வா தாரத்தை உயர்த்துவது மற்றும் மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் ஆகியவை குறித்து விளக்கி கூறினார்.
மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையத்தில் உள்ள கொத்தமங்கலம் மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில் உலக மீன்வர் தினத்தை முன்னிட்டு மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மீன்வ ளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்-ஆய்வா ளர் கோகிலவாணி தலைமை வகித்தார். கொத்தமங்கலம் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் கலைவாணி கலந்து கொண்டு மீன் வளத்தை பாதுகாப்பது, மீனவர்களின் வாழ்வா தாரத்தை உயர்த்துவது மற்றும் மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் ஆகியவை குறித்து விளக்கி கூறினார்.

கூட்டத்தில் கொத்த மங்கலம், பள்ளி பாளையம், ஜேடர்பாளையம், ஆனங்கூர் மற்றும் பொன்மலர் பாளையத்தை சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com