மதுக்கூர் கிளை நூலகத்தில் வாசகர் கூட்டம்

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் நூலக பணியாளர் கலைச்செல்வி நன்றி கூறினார்.
மதுக்கூர் கிளை நூலகத்தில் வாசகர் கூட்டம்
Published on

மதுக்கூர்:

பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம், வாசகர் வட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக 2-ம் நிலை கிளை நூலகர் அண்ணாமலை அனைவ ரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் மதுக்கூர் கிளை நூலகத்தை முழு நேர நூலகமாக மாற்றி காலை 8 முதல் இரவு 8 மணி வரை நூலகம் செயல்படவும், மேலும், 2 நூலகரை நியமிக்க வேண்டும், மதுக்கூரில் உள்ள படித்த கல்வியாளர்கள் மாணவ- மாணவிகள் அனைவரையும் உறுப்பி னராக சேர்ப்பதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவே ற்றப்பட்டன.

கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் மேகலாதன், துரை ராசு, அ.தி.மு.க. கிளை செயலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் துரைராஜன், வட்டார கல்வி அலுவலர் ஓய்வு சுப்பிரமணியன், முத்துக்க ண்ணு, செல்வம், பாலசுப்பி ரமணியன், எஸ்.எஸ்.ராஜன், வாசகர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் புரவலராக அ.தி.மு.க. மதுக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தண்டாயுதபாணி, அன்னை திருமண மண்டபம் ஹரிகரன், கோவிந்தராசு, கதிர்வேலன், கோவிந்தராஜ், வக்கீல் முன்னாள் லயன்ஸ் கிளப் தலைவர் எஸ்.எஸ்.ராஜன், செந்தில்குமார், சண்முகா ஸ்டோர் ஆகியோர் தலா ரூ.1000 செலுத்தி கொண்டனர்.

முடிவில் நூலக பணியாளர் கலைச்செல்வி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com