என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
எனது குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு கூட்டம்
- ஏற்காடு பஞ்சாயத்தில் அனைத்து கிராமங்களையும் தூய்மையான கிராமங்களாக மாற்றுவதற்காக “எனது குப்பை எனது பொறுப்பு” கூட்டம் நடைபெற்றது.
- டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தெருக்களை சுகாதாரமாக வைத்து கொள்ள ஆலோ–சனை வழங்கினர்.
ஏற்காடு:
ஏற்காடு பஞ்சாயத்தில் அனைத்து கிராமங்களையும் தூய்மையான கிராமங்களாக மாற்றுவதற்காக "எனது குப்பை எனது பொறுப்பு" கூட்டம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் சிவசக்தி தலைமை வகித்தார், துணை தலைவர் பாலு முன்னிலை வகித்தார்.
ஏற்காடு லாங் கில்பேட்டை அந்தோணியார் கோயில் சமுதாய கட்டிடத்தில் ஊர் பொதுமக்கள், இளை ஞர்களுக்கு குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது, எனது குப்பை எனது பொறுப்பு குறித்தும், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தெருக்களை சுகாதாரமாக வைத்து கொள்ள ஆலோ–சனை வழங்கினர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை 9-வது வார்டு உறுப்பினர் அம்முராஜா செய்து இருந்தனர்.
Next Story






