என் மலர்
நீங்கள் தேடியது "தொழிலாளி போராட்டம்"
- பொன்னேரி அருகே உள்ள பூதூர் ஊராட்சியில் உள்ள 7 குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
- டீக்கடை நடத்தி வரும் சிவக்குமார் என்பவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தார்.
பொன்னேரி:
நடிகர் வடிவேல் நடித்த ஒரு நகைச்சுவை காட்சியில் இல்லாத கிணற்றை கண்டுபிடித்து தருமாறு போலீசாரிடம் புகார் செய்வார்.இந்த காமெடி அனைவராலும் ரசிக்கப்பட்டது.
இதேபோல் பொன்னேரி அருகே பயன்பாட்டில் இருந்த 7 குளத்தை காணவில்லை என்று தொழிலாளி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி அருகே உள்ள பூதூர் ஊராட்சியில் உள்ள 7 குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அதேபகுதியில் டீக்கடை நடத்தி வரும் சிவக்குமார் என்பவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தார். அனால் குளத்தை மீட்பது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் சிவக்குமார் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் வழக்கம்போல் மாயமான 7 குளத்தை மீட்க வேண்டும் என்ற அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால் இதனை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ள வில்லை என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சிவக்குமார், பூதூரில் 7 குளங்களை காணவில்லை என்று கையில் பதாகை ஏந்திய படி கோட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அந்த பதாகையில் குளத்தின் சர்வே எண்ணையும் குறிப்பிட்டு இருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் சிவக்குமார் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுகுறித்து சிவக்குமார் கூறும்போது, பூதூர் ஊராட்சியில் 15க்கும் மேற்பட்ட குளங்கள் இருந்தன. அதில் சர்வே எண். (36), (38) ,(42), (74) (188) ,(342) ,(344) அடங்கிய ஏழு குளங்கள் கடந்த 5 ஆண்டுகளில் அடுத்தடுத்து ஆக்கிரமிப்பால் மாயமாகிவிட்டன. இதுபற்றி ஏற்கனவே பலமுறை வட்டாட்சியர் முதல் மாவட்ட கலெக்டர் வரையிலும், முதல்-அமைச்சரின் தனி பிரிவுக்கும் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எனக்கு மிரட்டல்களும் வருகின்றன. இது பற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
- டிரான்ஸ்பார்மரின் உச்சியில் நின்று கொண்டு கீழே வரமறுத்த மகேந்திராவை பெரிய ஏணியை பயன்படுத்தி பத்திரமாக மீட்டு பரமத்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- பரமத்திவேலூர் பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்ததால் மின்சாரம் இல்லாததை அறிந்தே டிரான்ஸ்பார்மரில் ஏறி மகேந்திரா போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த யாதவ் என்பவரின் மகன் மகேந்திரா (வயது 18) என்பவர் கடந்த ஒரு மாதமாக நூற்பாலையில் உள்ள குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
மகேந்திரா, தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக நூற்பாலையில் உள்ள நிர்வாகத்தினரிடம் விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் நூற்பாலை நிர்வாகத்தினர் வேலைக்கு வந்து ஒரு மாதமே ஆனதால் விடுமுறை தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மகேந்திரா, நூற்பாலை அருகே உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரின் உச்சியில் ஏறி மேலே சென்று விடுமுறை தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை பார்த்த நூற்பாலை நிர்வாகத்தினர் கீழே இறங்கி வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என கூறினர். ஆனால் டிரான்ஸ்பார்மரில் இருந்து அவர் கீழே இறங்க மறுத்ததால் பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் நாமக்கல் தீயணைப்பு துறையினர், மின்வாரியத்தினர் அங்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் நடத்திய இந்த பேச்சுவார்த்தையால் சமாதானம் அடைந்தார்.
இதையடுத்து டிரான்ஸ்பார்மரின் உச்சியில் நின்று கொண்டு கீழே வரமறுத்த மகேந்திராவை பெரிய ஏணியை பயன்படுத்தி பத்திரமாக மீட்டு பரமத்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நேற்று பரமத்திவேலூர் பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்ததால் மின்சாரம் இல்லாததை அறிந்தே டிரான்ஸ்பார்மரில் ஏறி மகேந்திரா போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
பரமத்தி போலீசார் மகேந்திராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






