search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாமக்கல் மண்டலத்தில் 6 நாட்களில் முட்டை விலை 30 காசுகள் உயர்வு- 460 காசுகளாக நிர்ணயம்
    X

    நாமக்கல் மண்டலத்தில் 6 நாட்களில் முட்டை விலை 30 காசுகள் உயர்வு- 460 காசுகளாக நிர்ணயம்

    • 460 காசுகளாக உயர்ந்துள்ளதால் கடந்த 6 நாட்களில் மட்டும் முட்டை விலை 30 காசுகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    • கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 101 ரூபாயாகவும், முட்டை கோழி விலை விலை 77 ரூபாயாகவும் நீடிக்கிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த முட்டை கோழிகள் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் முட்டை உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர் .

    இதனால் 455 காசுகளாக இருந்த முட்டை விலை 460 காசுகளாக அதிகரித்தது. கடந்த 10-ந் தேதி 430 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து தற்போது 460 காசுகளாக உயர்ந்துள்ளதால் கடந்த 6 நாட்களில் மட்டும் முட்டை விலை 30 காசுகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 101 ரூபாயாகவும், முட்டை கோழி விலை விலை 77 ரூபாயாகவும் நீடிக்கிறது.

    Next Story
    ×